சுஜாதாவின் சிறு சிறு கதைகள் படித்துக்கொண்டிருந்தேன். ஐம்பத்தைந்து வார்த்தைகளுக்குள் சிறு சிறு கதைகள் எழுதவேண்டும் எனபது விதி. ஆனந்த விகடன், குமுதம் இதழ்களில் எழுபதுகளில் இவை ஒரு பக்கக்கதை என்று வரும். சில மிகவும் சுவாரசியமாக இருக்கும். அதுவும் கடைசி வரியில் அந்தத் திருப்பம் வித்யாசமாக இருக்கும்.
பதிவர்களில் அருணா செல்வம் இது போன்ற ஒரு பக்கக்கதைகள் ஒரு நிமிடக்கதைகள் என்ற தலைப்பில் எழுதுகிறார். நன்றாகவே எழுதுகிறார். வேறு யாரும் இது போல் எழுதுகிறார்களா என்று பார்க்கவேண்டும். சொல்லவந்த கதையை தேவையற்ற வர்ணனையை தவிர்த்து எழுதுவது ஒரு பெரிய சவால்.
சுஜாதாவின் இந்தப்புத்தகத்தை படித்துக்கொண்டிருந்த பொழுது கவிதை வடிவில் ஒரு சிறு சிறு கதையை படிக்க நேர்ந்தது. அதை மிகவும் ரசித்தேன். ரா. ஸ்ரீநிவாசன் அவர்கள் "கணத்தோற்றம்" என்ற கவிதைத் தொகுப்பில் "பொட்டு" என்ற தலைப்பில் சிறு சிறு கதை (கவிதை வடிவில்) நீங்களும் படிக்க.
"எண்ணெய்விட்டுச் சீவிய கூந்தலில்
மணக்கத் தயங்காது மல்லிகை
உதட்டுச்சாயம் எடுப்பாய்த் தெரியும்
செவிகளில் தொங்கும் கம்மல் போலி
கழுத்தில் முத்துக்கோத்த கருமணி மாலையோடு
சாளரம் வைத்த ரவிக்கையும் வாவென்று அழைக்கும்
வழவழவெனக் காணும் சேலைகள்தான் அணிவாள்
வயது என்ன முப்பதுக்குள் இருக்கும்
தோள்பையில் என்னென்ன இருக்கும்?
மானிறத்துக்கோர் மாற்றுக் குறைவாய் அவள் நிறம்
நெற்றியில் எழுதி ஒட்டப்படவில்லை
என்றாலும் அவளைக் கண்டால்
ஐயமறத் தெரியவரும்
காலையில் அலுவல் நேரம்
துவங்கும்போது அவளும் துவங்குவாள் உலாவ
நெடுஞ்சாலையில் நடைபாதையில்
ஆபரணப் போலிகள் விற்கும்
முஸ்தபாவிற்கு அவள் கைராசி.
ஒவ்வொரு காலையும் கல்லாபெட்டியைத்
தொட்டுவிட்டுச் செல்ல சொல்லுவார்.
தேநீர் அருந்திய பின்பு
நின்றிருப்பாள். பேருந்து நிறுத்தம்,
அல்லாது போனால் சுரங்கப் பாதை நுழைவாயிலருகே,
பயந்து ஒளிவாள் போலீஸ்காரரைக் கண்டால் மட்டும்
குற்ற மன்றங்களில் கட்டிய அபராதத்துக்கு
கணக்கில்லை அவள் வசம்
சுழலும் விழிகளால் வலைகள் வீசுவாள்.
தனக்கு ஐம்பது, தங்கும் விடுதிக்கு ஐம்பது
அவகாசம் இருமணி நேரம்,
என்பதவள் நிர்ணயம் குறைந்தபட்சம்.
பேரம்படியா வாடிக்கையாளரை
வேசிமகனென்று ஏசவும் செய்வாள். நொடிக்கோர்முறை
எச்சில்உமிழும்
கொடியதோர் பழக்கம் அவளுக்கு
இரவில் இருப்பிடம் திரும்பும்போது
பரிசுசீட்டுகள் தவறாமல் பெறுகிறாள்.
ஏதோ ஒன்று அவளிடம் குறைந்திருக்கக் கண்டு
சீட்டு விற்பவன் வியப்புடன் கேட்டான்.
நெற்றிக்கு பொட்டு இட்டுக் கொள்வதில்லையா?
வெற்றிடமாய்க் காணப்பட்ட நெற்றியை விரல்களால்
தொட்டபடி அவள் சொன்னாள் பெருமிதம் பொங்க
மரித்துவிட்ட கணவன் நினைவாய்
பொட்டு மட்டும் இட்டுக் கொள்வதில்லை".

7 comments:
கவிதை வடிவில் இருந்ததால் கொஞ்சம் படிக்க சிரமமாக இருந்தது. ஆனால் கவிதை / கதை சூப்பர்!!!
ஜீவன் வருகைக்கு நன்றி.
அருமை....!
ம் ...
எஸ்.ரா. வருகைக்கு நன்றி.
A gr8 piece for the literary world. Nice. Thanks
A gr8 piece for the literary world. Nice. Thanks
Post a Comment
படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.