Pages

Wednesday, 7 August 2013

மணல் கொள்ளைகளும், மக்கிப்போன அரசியலும்

தூத்துக்குடியில் வைகுண்டராஜனின் மணல் குவாரிகளில் முறைகேடுகள் நடப்பதாக எழுந்த புகாரின் பேரில் தூத்துக்குடி ஆட்சியர் ஆஷிஷ்  குமார் உத்தரவின் பேரில் வருவாய்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்ட கடற்கரையோரங்களில் கிடைக்கும் தாது மணலை எடுத்து வெளிநாடுகளுக்கு அனுப்பும் தொழில் செய்து வருபவர் வி. வைகுண்டராஜன். இவர் வி.வி மினரல்ஸ் என்னும் நிறுவத்தை பல ஆண்டுகளாக நடத்தி வருகிறார். குவாரிகளில் இருந்து மணல் ஏற்றுமதி செய்வதில் சமீபகாலமாக விதி மீறல் செய்வதாக வைகுண்டராஜன் மீது புகார்கள் எழ ஆரம்பித்தது. அதைத்தொடர்ந்து இன்று காலை தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ஆஷிஸ்குமார் உத்தரவின் பேரில், தூத்துக்குடி டி.ஆர்.ஒ., கோவில்பட்டி உதவி கலெக்டர், விளாத்திக்குளம் தாசில்தார் உள்ளிட்ட வருவாய்துறையினர், சுங்கத்துறை உதவி இயக்குநர் செல்வசேகர் ஆகியோர் கொண்ட குழு அதிரடியாக களத்தில் இறங்கியது.

இதில் என்ன பெரிய செய்தி இருக்கிறது என்ற கேள்வி நமக்கு தோன்றலாம். ஆனால் இந்த ரெய்டு தொடங்கிய சில மணி நேரங்களிலேயே மாவட்ட ஆட்சிய ஆஷிஷ் குமாருக்கு மாற்றல் ஆர்டர் வழங்கப்பட்டதுதான் செய்தி. இது ஒன்றும் ஆச்சர்யமில்லை. அவரை மதிய சத்துணவு மற்றும் பொதுநல துறைக்கு செயலராக நியமித்துள்ளது.

சமீபத்தில்தான் உத்திரப்ரதேசத்தில் இதே போன்று மணல் கொள்ளையை தடுக்க ஆணையிட்ட மாவட்ட ஆட்சியர் துர்கா சக்தி அவர்களை பணியிடை நீக்கம் செய்தது உத்திரப்ரதேச அரசு. 
எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் இந்த கொள்ளைகள் தொடரத்தான் செய்யும். அப்படியே ஒன்று இரண்டு அதிகாரிகள் அதை தடுக்க முயன்றால் அவர்களை முதலில் பயமுறுத்திப்பார்ப்பார்கள் அல்லது காசால் அடிப்பார்கள். இல்லைஎன்றால் இருக்கவே இருக்கிறது வாக்கிங் செல்லும்பொழுது கவனித்துக்கொள்வார்கள்.

அணையை திறக்கவோ அல்லது கட்டனக்கழிப்பிடத்தில் குழாயை திறக்கவோ கடை நிலை ஊழியர்களுக்கு ஆணையிடும் அம்மா இந்த விஷயத்தில் என்ன செய்திருப்பார்கள் என்று நமக்கு தெரியும். அவருக்கென்ன கொடநாட்டில் ஒய்வு, கோப்புகளை அங்கு தூக்கி சென்று கையொப்பம் வாங்க அமைச்சர் அல்லக்கைகள். அரசாங்கங்களும் அட்டூழியங்களும் அது பாட்டுக்கு போய்க்கொண்டிருக்கும்.

9 comments:

  1. Very Good Post. But a small correction that is UP Government not MP Government.

    ReplyDelete
  2. ம்ம் அப்போ இதெல்லாம் எப்பதான் விடிவுக்கு வரும்?!

    ReplyDelete
  3. Thanks for pointing out the mistake. Correction made.

    ReplyDelete
  4. விடிவு வருமென்ற நம்பிக்கை அற்றுப்போய்விட்டது.

    ReplyDelete
  5. வுதுக்கு MP Government -ஐ மாத்தினீங்க? நாளைக்கு அங்கேயும் நடக்கும் போது தீர்க்கதரிசி என்று சொல்லிக்கலாமே?

    UP Government - MP Government பேர்லே என்ன இருக்கு? எல்லாமே ஒரே குட்டையில் ஊரின மட்டைகள் தானே!

    ReplyDelete
  6. ஆமாம் இந்த விஷயத்தில் நம்நாட்டில் எல்லா மாநிலத்திலும் ஒரே கூத்துதான்.

    நம்பள்கி வருககிக்கு நன்றி.

    ReplyDelete
  7. எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான்! அதிகாரிகளை வேலை செய்யாமல் கெடுப்பது அரசாங்கம்தான்! நன்றி!

    ReplyDelete
  8. சுரேஷ் வருகைக்கு நன்றி.

    ReplyDelete
  9. எதுக்கு இவ்வளவு அவசரப்பட்டு ஒரு பதிவைத் தருகிறீர்கள்.பொருங்கள்.இந்த மாதிரிதான் எல்லோருக்கும் முதலில் முதல் பதிவாகத் தரவேண்டும் என்று கனகாவைக் கொன்றீர்கள்.(தங்களை அல்ல)அது வதந்தி எனத் தெரிந்த உடன் அதனை எழுதிய நண்பர்கள் ஒரு வருத்தம் கூடத் தெரிவிக்கவில்லை.
    வாழ்க வளமுடன்
    கொச்சின் தேவதாஸ்

    ReplyDelete

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.