Tuesday, 3 September 2013

கலக்கல் காக்டெயில் -121

மணிமேகலை 

அகில உலக மணிமேகலை என்று கலைஞரால் புகழப்படுகிற இத்தாலி அம்மா மூளையில் (??) உருவானதாக சொல்லப்படும் உணவு பாதுகாப்பு மசோதா ஒரு வழியாக நிறைவேற்றப்பட்டுள்ளது. மசோதாவின் உள்நோக்கம் மிகவும் நல்லதாக தோன்றினாலும் நடைமுறையில் உள்ள சிக்கல்களும், மாநிலத்திற்கு வழங்கப்படும் தானியங்களிலும், மானியங்களிலும் எந்தளவு தாக்கம் இருக்குமென்பது போக போகத்தான் தெரியும்.

அம்மாவும், கலைஞரும் இதை வைத்து அடுத்த அரசியலை தொடங்கிவிட்டார்கள். இருவரும் விடும் அறிக்கைகள் ஒருவரை ஒருவர் தாக்குவதற்குத்தானே தவிர வேறொன்றும் உபயோகம் இருப்பதாக தெரியவில்லை.

ஒருவேளை "அம்மா உணவு பாதுகாப்பு மசோதா" என்று பெயர் சூட்டியிருந்தால் அம்மா ஆதரித்திருப்பார்களோ?. பா.ஜ.க. இந்த மசோதாவை ஆதரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

சொத்துக்குவிப்பு வழக்கு

அறுபத்தியாறு கோடி ஆட்டையைப் போட்ட வழக்கில் நீதிபதிகளும், அரசு வக்கீல்களும் மாற்றப்பட்டு இழுத்தடித்துக் கொண்டிருப்பது சரியான அரசியல் கூத்து. கர்நாடகாவில் ஆட்சி மாறியவுடன் ஏற்படும் மாற்றங்கள் நீதித்துறையையே கேவலப்படுத்துவதாக உள்ளது.

எது எப்படி என்றாலும் "திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது" என்ற பாடல் வரிகள் நினைவுக்கு வருவதை தவிர்க்க முடியாது.

எப்படி இருந்த நித்தி இப்படி ஆயிட்டார்?

தந்தி டிவியில் "ரஞ்சி புகழ் நித்தி" லக்ஷ்மி, குஷ்பூ, நிர்மலா பெரியசாமி ஸ்டைலில் பஞ்சாயத்து செய்யும் அளவிற்கு வந்து விட்டார். எல்லா வழக்குகளும் "அடுப்பு தொடுப்பு" வழக்குகளாகவே உள்ளன.

இரண்டு பெண்மணிகள் குழாயடி சண்டையை "தெய்வமே" என்றுவேடிக்கைப் பார்த்துக்கொண்டு இருக்கிறார்.

கதைவை திற காற்று வரட்டும் என்று முழங்கியவர் காதை திறந்து சென்னை தமிழ் "நல்ல அஜால் குஜால்" வார்த்தைகளைக் கேட்டுக்கொண்டிருக்கிறார். பஞ்சாயத்து தீர்ப்பு வரும் வரை பார்க்கும் பொறுமை நம்மிடம் இல்லை.

ரசித்த கவிதை 

விருப்பமின்மை 
கப்பல் செய்து
தருகிறீர்கள்
கத்திக் கப்பலென.
நெருப்பு வளையத்தில் குதிக்கும்
சித்திரக்காரப் பையனை
குழந்தைகளோடு அமர்ந்து
பார்க்கிறீர்கள்.
சமர்த்தாய் இருந்தால்
அதுவும் இதுவும் தருவதாக
பேரம் பேசுகிறீர்கள்.
பின்னாளில் வன்முறையாளன்.,
மனித வெடிகுண்டு.,
கையூட்டு வாங்கினான் என
கம்பி் வண்டிகளில்
முகம் மூடிச் செல்லும்போது
கண்ணீர் வடிக்கிறீர்கள்.
வெட்ட முடியாத அளவு
வளர்த்தது நீங்கள்தானென
ஒருபோதும் உணரவிரும்பாமல்.
---------------------------------------------------தேனம்மை லக்ஷ்மன்

ரசித்த கீச்சுகள் 

மதகுருமார்கள் பெண்களிடம் தள்ளியிருப்பதை கடைபிடிக்க வேண்டும்-ராம்தேவ்#ஆனா பொம்பள வேசம் போட்டு எஸ்கேப் ஆகலாம்!!--------தமிழ் கிறுக்கன் 

போண்டாவுக்குள் முட்டை போனதைவிட, சோடாவுக்குள் கோலி குண்டு போனதை விட ஆச்சரியமளிப்பது, இவ்ளோ டைட்டான சுடிக்குள் பொண்ணுங்க போனதுதான்-----------ஆல்தோட்ட பூபதி 

ஜொள்ளு 





Follow kummachi on Twitter

Post Comment

12 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

கவிதை தேன் தான்... கீச்சுக்கள் செம...

கும்மாச்சி said...

வருகைக்கு நன்றி தனபாலன்.

”தளிர் சுரேஷ்” said...

கவிதையும் கீச்சுக்களும் ரசிக்க வைத்தன! உணவு பாதுகாப்பு மசோதாவை வைத்துக்கொண்டு அம்மாவும் ஐயாவும் அடித்துக் கொள்வது தமாஷ்தான்! நன்றி!

கும்மாச்சி said...

சுரேஷ் வருகைக்கு நன்றி.

Robert said...

ஒருவேளை "அம்மா உணவு பாதுகாப்பு மசோதா" என்று பெயர் சூட்டியிருந்தால் அம்மா ஆதரித்திருப்பார்களோ?// இல்லைங்க அடைமொழி இல்லாம வெறும் அம்மான்னா நாங்க எப்படி ஆதரிப்போம்???

Robert said...

பா.ஜ.க. இந்த மசோதாவை ஆதரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.// அவங்க ஆட்சிக்கு வந்தவுடன் அதில உள்ள சில குறைகளை களையப்போறாங்களாமாம்!!!!!!!!!!!!!!!!!

கும்மாச்சி said...

ராபர்ட் வருகைக்கு நன்றி.

Robert said...

இதை எல்லாம் பத்தி எழுதிட்டு முக்கியமானதை பத்தி எதுவும் சொல்லாம போனா கும்மாச்சி கோவிச்சுக்குவாப்ல.. "சூப்பர்" ஹலோ, ஹலோ நான் அந்த கவிதையை சொன்னேங்க...

Anonymous said...

Sema Sir. VaLarka ungaL thoNdu. = sps, srirangam

Unknown said...

அருமை

கும்மாச்சி said...

சக்கர கட்டி வருகைக்கு நன்றி.

sarathy said...

Rasiththeen. Nandri

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.