இந்தியா ஒளிரும்
இந்திய ஒளிரப்போவது ஏறக்குறைய உறுதியாகிவிட்டது. வரும் நாடாளுமன்றத்தேர்தலில் பிரதான எதிர்கட்சியான பா. ஜ. க தனது பிரதமர் வேட்பாளரை அடையாளம் காட்டிவிட்டது. காங்கிரசோ நாங்கள் முதலில் அடையாளம் காட்டமாட்டோம், தேர்தல் முடிவிற்கு பின் எங்களது எம்.பி.க்கள் தேர்வு செய்வார்கள் என்று "இந்தியாவின் எதிர்கால நட்சத்திரத்தை" பொம்மையாக உட்காரவைக்க கட்டியம் கூறிவிட்டார்கள்.
பா.ஜ.க.விற்கு ஆதரவு தேடி அம்மாவிடம் போன சோவிடம் "இன்னாது ஆதரவா? நானா?போயா பொழைப்பைப்பாரு, நானே பிரதமர் வேட்பாளார், என்னாண்டையே ஆதரவா? என்று திருப்பி அனுப்பிவிட்டார்கள்.
இருந்தாலும் மக்கள் என்ன முடிவெடுப்பார்கள், பின்னர் தொங்கு பாராளுமன்றம், ஆடும் பாராளுமன்றம் என்ற பெயரில் குதிரை பேரம், கழுதை பேரம் எல்லாம் முடிந்து, அந்த டம்மி நாற்காலியில் யார் உட்காருவார்கள் என்று தேர்தலுக்கு பின் தெரிந்துவிடும்.
இந்தியா ஒளிர்வது எப்படியும் உறுதி.
தண்ணி கொடுத்த தாயே? ஊருகாயும் கொடும்மா!!
தேர்தலை மனதில் கொண்டு தமிழக அரசு நிறைய திட்டங்களைக் கொண்டு வந்து கொண்டிருக்கிறது. அந்த வகையில் அம்மா உணவகத்தை தொடர்ந்து அம்மா தண்ணிவந்துவிட்டது.ஒரு லிட்டர் தண்ணீர் பத்து ரூபாயாம். மக்களுக்கு இலவசமாக தரவேண்டிய தண்ணீருக்கு விலை. எத்துணையோ விலையில்லா பண்டங்களை மக்களுக்கு வழங்கிய அரசு தண்ணீருக்கு மற்றும் விலை வைத்திருக்கிறது. அதில் உள்ள வியாபார நோக்கமும், தேர்தல் உத்தியும் அப்பட்டமாகத் தெரிகிறது.
அம்மா தண்ணி திட்டத்தையும் போற்றிக்கொண்டு ஒரு கூட்டம் உலவிக்கொண்டிருக்கிறது. கட்டிங் கொடுத்தாச்சு, மிக்சிங்கிற்கு தண்ணீரும் கொடுத்தாகிவிட்டது. இனி சைடு டிஷிற்கு கோழி வருவலும், ஊருகாயும்தான் பாக்கி, அதையும் கொடுத்தால் தமிழ் குடிமகன்கள் ஈரல் கெடும் வரை அம்மாவை மறக்கமாட்டார்கள்.
கூத்தாடிகள் ரெண்டுபட்டால்...........
தமிழ் திரையுலக தயாரிப்பாளர்கள் சங்க தேர்தல் முடிந்த கையேடு தோற்றவர் வழக்கு தொடர்ந்து ஜெயித்தவரை செயல்படமுடியாதபடி தடை வாங்கிவிட்டார்.
இனி அடுத்த நடிகர் சங்க விவகாரம் அரங்கேற இருக்கிறது. இங்கு எத்தனை பேருக்கு மண்டை உடையுமோ.
ஊரு ரெண்டு பட்டால் கூத்தாடிகளுக்கு கொண்டாட்டம். ஆனால் கூத்தாடிகள் ரெண்டு பட்டு நம்மை மொக்கை படங்களிலிருந்து காப்பாற்றுவார்கள் என்று நம்புவோமாக.
ரசித்த கவிதை
எல்லைகளற்றது
அந்திவானம்
அத்தனை அழகில்லை
இதுவரை
வரையறை வைத்து
வரைந்திட்ட வாழ்வில்
வர்ணம் கொண்டு
புதுவர்ணம் கொடுத்தாய்
உயிர்கிளியின் கூண்டுகள் தன்னை
வான்நோக்கி பறந்திட
திறந்திட்டாய்
சிறகசைப்பின் வெகுதூரக்கவனிப்பில்
வந்துசேர கிடைத்திட்ட இடமதில்
சலசலக்கிற ஆறும்
சந்தமாய் பேசும் காடும்
மெளனமாய் உனை என்னிடம் சேர்க்க
அடர்ந்திருக்கும் இவ்வானில்
பார்க்க கிடைக்கும்
முழு நிலவும்
மடிகொடுத்து
உனை நிறைக்க
நீ அருகிருக்கும்
அந்திவானம்
அத்தனை அழகில்லை
இதுவரை.--------------------------------ரேவா
ஜொள்ளு

3 comments:
கவிதை அருமை.. படைப்பாளருக்கு வாழ்த்துக்கள்.. காக்டெயில் சூப்பர்.
கருண் வருகைக்கு நன்றி.
கலக்கல் பதிவு! நன்றி!
Post a Comment
படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.