அம்மா தண்ணி இன்று முதல் முன்னூற்றி நான்கு மையங்களில் விற்பனைக்கு வருகிறது. ஒரு லிட்டர் பத்து ரூபாயாம். குடிமக்களுக்கு விலையில்லாமல் கிடைக்க வேண்டியது குறைந்த விலையிலாம். தேவையில்லாத மடிக்கணினி இலவசமாம் மன்னிக்கவும் விலையில்லாததாம். என்ன அரசடா இது.
அம்மா உணவகம், அம்மா தண்ணி என்று லோக்சபா தேர்தலை வைத்து இன்னும் என்ன என்னவரவிருக்கின்றனவோ.
தமிழனுக்கு கொண்டாட்டம் தான்.
அம்மா உணவகத்தில் மலிவு விலையில் இட்லி, பொங்கல், சாம்பார் சாதம், தயிர் சாதம் என்று ஏற்கனவே களைகட்டியாகிவிட்டது. அடுத்து சப்பாத்தி, பிரியாணியும் போடஇருக்கிறார்கள்.
பள்ளி மாணவிகளுக்கு இலவச மிதி வண்டி. மாணவ மாணவிகளுக்கு மடிக்கணினி.விலையில்லா சீருடை, புத்தகம் இத்தியாதி......
மேலும் விலையில்லா மிக்சி, கிரைண்டர், மின்விசிறி என்று ஒரு ரவுண்டு முடிந்து விட்டது.
இப்படியே போனால் அம்மா பால், அம்மா மோர், அம்மா கட்டிங் என்று நிறைய எதிர்பார்க்கலாம்.
ஒரு வழியாக தமிழனின் தாகமும், சாப்பாடு பிரச்சினையும் தீர்த்தாகிவிட்டது. இதையெல்லாம் சாப்பிட்டால் செரிமானம் ஆக ஊர் சுற்றவேண்டும். அதற்கு விலையில்லா இரு சக்கர வாகனம் வேண்டும். அடுத்து அதன் பின்னே ஏற்றி செல்ல விலையில்லா பிகர்கள் வேண்டும்.
மாலையில் உற்சாகத்திற்கு "டாஸ்மாக்" சரக்கு வேண்டும். அதுவும் முதல் இரண்டு ரவுண்டு விலையில்லாமலும், மேலும் இரண்டு ரவுண்டு வேண்டுமென்றால் மலிவு விலை கட்டிங்கும் கொடுத்தால் புண்ணியமாய் போகும்.
இன்னும் விலையில்லா சரக்குகள் நிறைய இருக்கின்றன. விலையில்லா கட்டில், மெத்தை, குளிர்சாதனம், ஆணுறை என்று வர வாய்ப்புகள் உண்டு.
இப்படியே எல்லாம் விலையில்லாமல் கிடைத்தால் யாரும் ஆணி பிடுங்க வேண்டிய அவசியமே இருக்காது.
நாமும் எல்லா விலையில்லா சரக்குகளையும் கொண்டு "விலையில்லாமல் போகலாம்".
வாழ்க விலையில்லா தமிழகம், வளர்க இந்திய விலையில்லாத வல்லரசு.

8 comments:
கேவலமான செயலை செய்கிறது அரசு!அத்தியாவசிய பொருளை மலிவு விலையில் தருவதாக சொல்லி விளம்பரம் தேடிக் கொள்கிறது! சிலர் இதை பாராட்டவும் செய்வது கொடுமைதான்!
சுரேஷ் வருகைக்கு நன்றி.
எப்படி இப்படி புதுசுபுதுசா யோசிக்கிறாங்களோ தெரியல...
அம்மாவுக்கு இப்படி ஐடியா கெர்டுக்கிறது யாருங்க...?
அதை கண்டுபிடிக்கனும் முதல்ல
இந்த கலாச்சாரம் எங்கே போய் முடியப் போகுதுன்னுன் தெரியல..
சௌந்தர் வருகைக்கு நன்றி.
கருண் வருகைக்கு நன்றி.
//நாமும் எல்லா விலையில்லா சரக்குகளையும் கொண்டு "விலையில்லாமல் போகலாம்".//
நறுக் & நச் ....!
வருகைக்கு நன்றி ஜீவன்
Post a Comment
படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.