Friday, 20 September 2013

சிரிக்க சிந்திக்க

உலகத்தின் மிக நீளமான கழிப்பிடம் எது?

விடை: கடைசியில்

கழிவறையில் உதடுகள்

அந்த பெண்கள் உயர் நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியருக்கு பள்ளிப் பெண்களின் போக்கு புரியவில்லை.

கழிவறை கண்ணாடியில் உதட்டுச்சாயம் பூசிய உதடுகள் படம் எல்லா இடத்திலும் இருக்கும், பள்ளியின் துப்புரவாளர் எத்துனை முறை துடைத்து வைத்தாலும் அடுத்த நாளிலும் இதே பிரச்சினை.

பள்ளியில் சில குறும்புக்காரப் பெண்கள் உதட்டுச் சாயத்தை பூசிக்கொண்டு கண்ணாடியில் முத்திரை பதித்துவிட்டு செல்வது வழக்கம்.

தலைமைஆசிரியர் வகுப்பு வகுப்பாக சொல்லியும் உபயோகமில்லை. துப்புரவாளறுக்கு இது தேவையில்லாத வேலை.

அன்று காலை ஒவ்வொரு வகுப்பாக சென்று மாணவிகள் செய்யும் குறும்பால் துப்புரவாளர் எப்படி கண்ணாடியை சுத்தம் செய்கிறார் என்று காண்பிக்க செய்தார்.

துப்புரவாளர் "மாப்"பை கழிவறை தொட்டியில் நனைத்து கண்ணாடியை சுத்தம் செய்தார்.

இனி பெண்கள் கண்ணாடியை முத்தமிடுவதில்லை.

சித்தீ................

அவளின் அழகு அவனை அசத்தியது. எப்படியும் அவளை கல்யாணம் செய்யவேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. ஆனால் அவளுக்கேற்ற அழகோ இல்லை அந்தஸ்தோ இல்லை.

இருந்தாலும் அவளை அணுகி அவளிடம் "என் அப்பாவிற்கு நூறு கோடி சொத்துள்ளது. அவர் எப்படியும் இரண்டு மூன்று வருடங்களில் அபீட் ஆகிவிடுவார், பின்பு நூறு கோடியும் எனக்குத்தான், என்னை திருமணம் செய்துகொள்கிறாயா" என்று கேட்டான்.

அவள் " அப்படியா சரி உங்கள் முகவரியைக் கொடுங்கள் பிறகு சொல்கிறேன்" என்று முகவரியை வாங்கிக்கொண்டாள்.

இரண்டு வாரத்தில்  அவள் அவனுக்கு சித்தியாகிவிட்டாள்.

உன் தங்கையை நான் கட்டுறேன் என் தங்கையை நீ கட்டு

ராகுலும், ராஜீவும் கல்லூரியில் மரத்தடியில் பேசிக்கொண்டிருந்தனர்.

அப்பொழுது அவர்களை நோக்கி அந்த இரு மாணவிகளும் வந்து கொண்டிருந்தனர்.

அவர்கள் கையில் ராக்கி இருந்தது, அதைக் கட்டத்தான் இருவரையும் நோக்கி வந்து கொண்டிருந்தனர்.அதைக் கண்டு இருவரும் அதிர்ச்சி அடைந்தனர். ஏன் என்றால்  அந்த பெண்களுக்குத்தான் இருவரும் ரூட் விட்டுக்கொண்டிருந்தனர். 

ராகுல் ராஜீவிடம் " கவலை வேண்டாம் மச்சான் என்தங்கையை நீ கட்டு உன் தங்கையை நான் கட்டுறேன்".


முதல் கேள்விக்கு விடை: இந்திய ரயில் இருப்புப்பாதை.



Follow kummachi on Twitter

Post Comment

9 comments:

அருணா செல்வம் said...

“கழிவரையில் உதடுகள்” - சூப்பர் கும்மாச்சி அண்ணா.

திண்டுக்கல் தனபாலன் said...

வருத்தப்பட வேண்டிய உண்மை பதில்...

கும்மாச்சி said...

தனபாலன் வருகைக்கு நன்றி.

கும்மாச்சி said...

அருணா வருகைக்கு நன்றி.

”தளிர் சுரேஷ்” said...

முதல் கதை ஜோரு! நீளமான கழிப்பிடம் மெரீனா கடற்கரையாக இருக்குமோன்னு நினைச்சேன்! நன்றி!

கும்மாச்சி said...

சுரேஷ் வருகைக்கு நன்றி.

Anonymous said...

வணக்கம்
இன்று உங்களின் வலைப்பூ வலைச்சரத்தில் அறிமுகம்மாகியுள்ளது வாழ்த்துக்கள் சென்று பார்வையிட…இதோ.http://blogintamil.blogspot.com/2013/10/blog-post_745.html?showComment=1381986198691#c5683697445379674381
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

aavee said...

முதல் வருகை.. நல்லா இருக்குங்க.. சேர்ந்துட்டேன் பாலோ பண்ண..

கும்மாச்சி said...

கோவை ஆவி வருகைக்கு நன்றி.

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.