Thursday, 17 October 2013

நைட்டிய கண்டுபுடிச்சவன் நாசமா போவ

வலை கீச்சுதே.

இந்த வாரம் ரசித்த கீச்சுகள்.

"பாய்" ஃப்ரெண்டு இல்லையே என பெண்களைவிட ஆண்கள் அதிகமாக கவலைப்படும் தினம் இன்று #பக்ரீத் #பிரியாணி--உதய பிரபு.

அடப்பாவிகளா பக்ரீத் பண்டிகைக்கு டிவில ஸ்பெஷல் ப்ரோக்ராம்ஸ் இல்லையா?#என்னத்த வேற்றுமையில் ஒற்றுமையோ-----திருட்டு குமரன்.

சுறா படத்தை ரசித்தவர்கள், நையாண்டியைப் பார்த்து புலம்புவாங்க #தமன்னாவுக்கு எத்தனை தொப்புள் சீன்ஸ்----------மூடன் மணி 



மனுஷக்கறி மட்டும் சுவையா இருந்தா உலகத்துல பாதி பிரச்சனை இருக்காது.-----------ஓலைக்கணக்கன்


மைக் இல்லன்னு சத்தமாக பேசணும்.மைக் இருந்தா நார்மலா பேசினாப் போதும் இந்த விதி வைகோ-வுக்கு பொருந்தாது இருந்தாலும் இல்லாவிட்டாலும் ஆக்ரோஷம்தான்---------V. ஸ்ரீதர்


சாப்டு கை கழுவி முந்தானைல கை தொடைச்ச காலம் போயே போச்சு # நைட்டிய கண்டுபுடிச்சவன் நாசமா போவ..!-------கட்டதொர 


அமெரிக்க ஆயுத கப்பலை விடுவிக்க முடியாது - GKவாசன்# சைக்கிள்காரன்ட்டயே லைசன்ஸ் கேட்கற போலீஸ் கிட்டே கப்பல் சிக்கிட்டா கம்முனு இருப்பாரா?---------சி.பி.செந்தில்குமார் 


நம்மைவிட வேகமா வண்டி ஓட்டுனா, 'பைத்தியக்காரத்தனமா ஓட்டுகிறவன்'. மெதுவா வண்டி ஓட்டுனா, 'வண்டி ஓட்டத்தெரியாதவன்' #நம்மலாஜிக்---செந்தில்


10 வருஷமாய் ஹோட்டலில் தான் சாப்பிடுகிறேன் என்றால்,கல்யாணம் செய்து கொள்ள வேண்டியது தானே என்கிறார்கள், பெண்ணியம் பேசும் பெண்கள் உட்பட.----------Dream Merchant


பெரும்பாலானவர்களுக்கு கடவுள் இல்லை என்பது இந்து மதத்தில் உள்ள கடவுளை மட்டுமே குறிக்கிறது.-----------ராஸ்கோலு 


நம்ம வாழ்க்கையை விடவா ஒரு suspense thriller கதை இருந்துடப் போகுது? எந்த character க்கு எப்போ என்ன ஆகும்னே தெரியாது! :)--------தமிழரசி 


காந்திமதியும் வடிவுக்கரசியும் நண்பர்களா ஒரு படமாச்சும் நடிச்சிருந்தா பெண்களுக்குள்ளயும் நட்பு இருக்கும்ன்னு நம்பியிருப்பேன்!---------லார்டு

Follow kummachi on Twitter

Post Comment

17 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

கீச்சு - அசைவம் கொஞ்சம் ஜாஸ்தி தான்...

கும்மாச்சி said...

தனபாலன் வருகைக்கு நன்றி.

Unknown said...

தமன்னாவுக்கு இருக்கிற தாராள மனசு நஸ்ரியாவுக்கு இல்லையே !
த ம 2

கும்மாச்சி said...

பகவான்ஜி வருகைக்கு நன்றி.

Anonymous said...

வணக்கம்
காலந்தான் பதில் சொல்லணே்டும்...

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

கும்மாச்சி said...

ரூபன் வருகைக்கு நன்றி

திண்டுக்கல் தனபாலன் said...

உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/10/blog-post_745.html) சென்று பார்க்கவும்... நன்றி...

கும்மாச்சி said...

தனபாலன் தகவலுக்கு நன்றி.

ராஜி said...

தமிழரசி கீச்சுதான் யோசிக்க வைக்குது. மத்ததுலாம் புஸ்வானம்தான்

கும்மாச்சி said...

ராஜி வருகைக்கு நன்றி.

நிகழ்காலத்தில்... said...

தேர்ந்தெடுத்த கீச்சுகள் :)

கும்மாச்சி said...

சிவா வருகைக்கு நன்றி.

”தளிர் சுரேஷ்” said...

கலக்கல் கீச்சுக்கள்! ரசித்தேன்! நன்றி!

கும்மாச்சி said...

சுரேஷ் வருகைக்கு நன்றி.

Jayadev Das said...


\\10 வருஷமாய் ஹோட்டலில் தான் சாப்பிடுகிறேன் என்றால்,கல்யாணம் செய்து கொள்ள வேண்டியது தானே என்கிறார்கள், பெண்ணியம் பேசும் பெண்கள் உட்பட.----------Dream Merchant\\ அட இது புரியலையா, வீட்டில மனைவிக்கு காட்டாயம் சமைக்கணுமே, அப்படியே நீயும் சாப்பிட்டுக்கலாமில்ல!!
\\பெரும்பாலானவர்களுக்கு கடவுள் இல்லை என்பது இந்து மதத்தில் உள்ள கடவுளை மட்டுமே குறிக்கிறது.-----------ராஸ்கோலு \\ முக்கியமா அரசியல் வாதிங்களுக்கு இது பொருந்தும்!!

மகேந்திரன் said...

ரசிக்க வைத்த துணுக்குகள்....

நம்பள்கி said...

எப்படியும் பெரிய இட்லியா பேஷா சுடலாம் போலிருக்கே!
புரியவில்லையா? விடிஞ்சுது போங்க!

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.