Pages

Wednesday, 30 October 2013

தோண்டுறா டேய்...........

ஐயே இன்னா கபாலி இங்கன குந்திகினு கீறே.......

தோடா கொமாரு, ஒரு ஆள கண்டுக்கினு போக வந்துகிறேன்.

வயக்கமா டாஸ்மாக் கடயாண்டதானே வுயுந்து கெடப்ப.

போடா கடதொறக்க நேரமாவுமில்ல.

அத்தவுடு, இன்னா மேட்டரு

நம்ம மேஸ்திரி இல்ல, முன்சாமி அவரு ஒரு வேலை கொடுத்துகிராறு பா.

இன்னா வேல

கடக்கால் எடுக்க பள்ளம் நோண்டனுமாம். துட்டு தரேன்னு சொல்லிகீரான்.

அதுக்கு இங்க குந்திகினு இன்னா செய்வ, கடப்பாறைய எடுத்து நோண்டவேண்டியது தானே.

ஐயே நாங்க கூலி வேல செஞ்சு அஞ்சு பத்து வருசம் ஆவுது.

பின்ன இன்னா ஆளு வச்சு நோண்டுவையா?

இவன் இன்னாடா நாட்டு நடப்பு தெரியாதவனா கீறான்.


ஐய்யே இன்னா..........

ஏண்டா நோண்டுனா நோண்டர்துக்கு நாங்க இன்னா டோமரா.

இன்னா பின்ன.

தோடா செவுளிலியே வுட்டா தெரியும்.

தெனைக்கும் டீக்கடையாண்ட வரியே, நூஸ் படிக்குறதில்ல ஏண்டா பள்ளம் நோண்ட மந்திரியாண்ட சொன்னா ஆளு பட வச்சி நல்லா செய்வானுங்க.

அதெப்படி

தோடா வடநாட்டுல ஒரு சாமியாரு சொன்னாருன்னு சொல்லி பெரிய பள்ளம் நோன்டிகிரானுங்க.

அதுக்குதான்  இங்கன குந்திகினு கீரையா, கபாலி இங்க எரோப்லாணுல போறவரவங்கதான் வருவானுங்க.

தெருது, அதான் மந்திரி ஒருத்தரு வார வாரம் வந்து மைக்குல கூவிட்டு போவாரே அவரு வரராறம், அவரண்ட சொல்லிபோடலான்னு குந்திகினு கீறேன்.

அவராண்ட பள்ளம் நோண்ட சொல்லுவியா, இன்னாடா இது.

நாங்க அவராண்ட நேக்கா சொல்லுவோம்.

அதெப்படி.

போடா, குடாக்கு, அவராண்ட அங்கன புதையல் கீது, "எங்க  அப்பீட் ஆன ஆயா கனவுல ரிபீட் ஆயி வந்து புதையல் கீதுன்னு சொல்லிச்சு  ஐயா"ன்னு சொன்னா அவரு மேலிடத்துல சொல்லி எந்தா பெரிய பள்ளம் வேணா நோண்ட வப்பாரு.

ஐயே.....

ஐயே இன்னாடா ஐயே, அவராண்ட கண்டி சொன்னேன்னு வையி பாஞ்சு நாளுல முடிச்சிடுவாறு, அ ஆங்........

14 comments:

  1. ஹா... ஹா... அப்படித்தான் போல...!

    ReplyDelete
  2. தனபாலன் வருகைக்கு நன்றி.

    ReplyDelete
  3. புதையல் இருக்குன்னு கனவு கண்டாராம்! அதுக்காக தோண்டுறாங்களாம். ச்ச்சே

    ReplyDelete
  4. வணக்கம்
    பதிவு அருமை வாழ்த்துக்கள்

    இனிய தீபாவளி வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  5. ராஜி வருகைக்கு நன்றி.

    ReplyDelete
  6. என்று திருந்தும்
    இந்த நாடு....?!!

    ReplyDelete
  7. மகேந்திரன் வருகைக்கு நன்றி.

    ReplyDelete
  8. தமிழிலேயே எனக்கு பிடித்த தமிழ் சென்னை தமிழ்தான்.கஸ்மாலம் நல்லாத்தான் எயுதற.ஆங்க்காட்டியும் இப்பிடியே அடிக்கடி போஸ்ட் போட்டுக்கோ .. நைனா .சும்மா குந்திகினு பட்சா செம டமாசா கீதும்மா.

    ReplyDelete
  9. பல்லவன் வருகைக்கு நன்றி.

    ReplyDelete
  10. ஜூப்பரு! பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
  11. சுரேஷ் வருகைக்கு நன்றி.

    ReplyDelete
  12. பாருங்கள் இதையும்! கிணறு தோண்ட வழி! தமிழ்மணம் வோட்டு +1
    http://www.nambalki.com/2013/10/is-good-xuck.html

    ReplyDelete
  13. நம்பள்கி வருகைக்கு நன்றி.

    ReplyDelete

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.