Monday, 7 October 2013

லிமெரிக் கவுஜ.........கவுஜ

கவிதை எழுதுவதற்கு இலக்கணம் தெரிந்திருக்க வேண்டும்.சுப்பையா வாத்தியார் தமிழில் மார்க் வாங்காத காரணத்தால் முட்டியை உடைத்ததால் இலக்கணத்தில் நாட்டம் வரவில்லை. அதற்குப் பதிலாக மனப்பாட பகுதியை "டப்பா" அடித்தே தேறியாகிவிட்டது.

இந்த தளை, சீர்,மாங்கா, புளியங்கா எல்லாம் புரிபடாத விஷயம். கவிதை எழுத இது எல்லாம் தேவையாம். புதுக்கவிதை  கொஞ்சம் சுலபம். உரை நடையையே அங்கே இங்கே பட்டி தட்டி டிங்கரிங் பண்ணி, பிரிச்சு பிரிச்சு போட்டு ஒப்பேத்தி விடலாம். இந்த லிமெரிக் என்ன அதையும் தான் ஒரு கை பாப்போம் என்று தொடங்கிய முயற்சியே இது.


இனி நம்ம சரக்கு

வரப்போகுது தெலுங்கானா
அரசியவாதிகள் விடுவானா
கடல் பகுதி சீமாந்திரா
ரெண்டுபடப்போகுது ஆந்திரா
வம்பு எதுக்கு? வேணா


பரீட்சை எழுதினான் அசோக்கு
வாங்கவில்லை பாஸ் மார்க்கு
திருத்தியவன் ஒரு அரை லூசு
ஆகிப்போனான் பீஸ் பீசு
தேடிப்போனான் டாஸ்மாக்கு


அம்மா போடுது பொங்கலு
உணவகத்தில் இப்போ கும்பலு
இட்லிக்கு உண்டு சட்டினி
மக்கள் இல்லை பட்டினி
எதிர்கட்சி இப்போ வெம்பலு.


ஊழல் செய்தோர் கோடி
ஒழிப்பேன்றாரு மோடி
அடுத்தப் பிரதமர் அம்மா
மற்றவரெல்லாம் சும்மா
காலில் விழலாம் வாடி.


Follow kummachi on Twitter

Post Comment

10 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

அட...! சரக்கு செம... பாராட்டுக்கள்...

ராஜி said...

வரப்போகுது தெலுங்கானா
அரசியவாதிகள் விடுவானா
கடல் பகுதி சீமாந்திரா
ரெண்டுபடப்போகுது ஆந்திரா
வம்பு எதுக்கு? வேணா
>>
அரசியல் பத்தி பேசுனே ஆகிப்பூடுவே வீனா!!
இவக்களுக்குலாம் ஓட்டு போட்டுட்டு இந்தியா கெலிச்சுடும்ன்னு காணாத கனா!!

கும்மாச்சி said...

தனபாலன் வருகைக்கு நன்றி.

கும்மாச்சி said...

அது சரி நான் கோடு போட்டா நீங்க ரோடே போட்டுட்டீங்க. ராஜி வருகைக்கு நன்றி.

Someone is Special said...

அருமை அருமை கும்மாச்சி!!

அருணா செல்வம் said...

கவுஜ நல்ல கீது கும்மாச்சி அண்ணாத்த!

கும்மாச்சி said...

வணக்கம் தங்கச்சி, கவுஜ நல்லாகீதா? டேங்க்ஸ்.

சங்கர் ಶಿವಮೊಗ್ಗ said...

அம்மா பிரதமராயிட்டா கால்ல எங்கே போய் விழுவது ஒரு கோயிலை கட்டி அதுலே அம்மாவோட சிலையை வைத்து அதோடு காலில் வேணா போய் விழலாம்

Unknown said...

கானா பாடலுக்கு எதிர்ப்பும் உண்டு ,ஆதரவும் உண்டு
தெலுங்கானாவுக்கும் அப்படித் தானா ?
கும்மாட்சி கவுஜக் கேட்டு எனக்கும் கும்மாட்சி !

”தளிர் சுரேஷ்” said...

லிமரிக் கவிதைகள் கலக்கல்!

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.