Wednesday, 20 November 2013

டிராவிட் இந்தூரில் ஏன் பிறந்தாய்?

கடந்த சில நாட்களாக ஊடகங்களில் "சச்சின் சச்சின்" என்று அவர் புராணம்தான். அவருக்கு பிரியா விடை கொடுக்க வேண்டி ஒரு சொத்தை டீமுடன் அவசரமாக ஒரு போட்டி ஏற்பாடு செய்து அதையும் அவரது சொந்த மண்ணிலேயே வைத்து அவரை கௌரவித்து விட்டார்கள் பி.சி.சி.ஐயும், எம்.சி.ஏவும்.

இந்த விழாவிற்காக மேட்சே அரக்க பறக்க இரண்டு நாளில் முடிந்து விட்டது. பின்னர் சச்சின் அவரது மாதா, பித,குரு தொடங்கி மாமியார் நாகம்மா வரையில் நன்றி தெரிவித்து ரசிகர்களை நெகிழ  வைத்து விட்டார்.அவரது ரசிகக்குஞ்சுகளும் இனி "சச்சின் இல்லாத கிரிக்கெட்டா, இனி பார்க்கமாட்டோம் என்று" பிரியாவிடை கொடுத்து பிரிந்து விட்டனர்.

மத்திய அரசோ ஒட்டு வேட்டையை மனதில் வைத்து அவருக்கு "பாரத் ரத்னா" வழங்கி இருக்கிறது. உண்மை கிரிக்கெட் ரசிகனுக்கு தெரியும் சச்சினின் லட்சணம்.இந்தியாவை தோல்வியிலிருந்து காப்பாற்ற வேண்டிய தருணங்களில் யார் நன்றாக விளையாடுவார்கள் என்று. இந்தியாவின் தடுப்பு சுவர் என்று வர்ணிக்கப்பட்ட ராகுல் திராவிட் தனது சிறப்பான  ஆட்டத்தினால் எத்துனை முறை இந்திய அணிக்கு வெற்றியும், பின்னர் தோல்வியிலிருந்து காப்பாற்றியும் இருக்கிறார் என்று வரலாற்றை புரட்டிப்பார்த்தால் தெரியும். அவர் விளையாட்டிலிருந்து ஓய்வுபெற்ற பொழுது அவருக்கு இந்த அளவு சிறப்பான விழா ஏற்பாடு செய்யப்படவில்லை. காரணம் அவர் மும்பைக்காரர் அல்ல என்பதே உண்மை.

இந்திய அணி பெரும்பாலும் எல்லோரிடமும் தோல்வியையே சந்தித்துக்கொண்டிருந்த கால கட்டத்தில் இந்திய அணியாலும் வெற்றி பெற முடியும் என்ற தன்னம்பிக்கையை ஏற்படுத்திய அந்த சரித்திரப் புகழ்பெற்ற கல்கத்தா மேட்சில் லக்ஷ்மனின் 281 ஓட்டங்களும், ட்ராவிடின் 180 ஓட்டங்களும்தான் அந்த மேட்சை இந்திய அணி வென்றதற்கு காரணம் என்பதை யாராலும் மறுக்க முடியாது. ஆனால் இவர்களெல்லாம் மும்பைக்கு ஆடவில்லை என்ற காரணமே இவர்கள் ஊடகங்களால் அவ்வளவாக கொண்டாடப்படவில்லை.

இது கால காலமாக பி.சி.சி. ஐ செய்து வரும் அநியாயம். கவாஸ்கருக்கு கொடுக்கப்பட்ட மரியாதை அவரை விட சிறந்த வீரரான விஸ்வநாத்திற்கு வழங்கப்படவில்லை. மேலும் வெங்கட்ராகவன், ஸ்ரீகாந்து, டி.இ. ஸ்ரீநிவாசன், கபில்தேவ், வெங்க்சர்கார், மொஹிந்தர் அமர்நாத் இவர்களில் கதியெல்லாம் நமக்கு தெரிந்ததுதான்.

இதை பற்றி எழுதவேண்டாமென்று தான் இருந்தேன், நேற்று ஒரு சச்சின் வெறியர் உசுப்பிவிட்டுட்டார். அதற்குதான் இந்த புலம்பல்.


Follow kummachi on Twitter

Post Comment

29 comments:

Unknown said...

உங்கள் கருத்து சரியானதே ...நம்ம ஊர் விஸ்வநாதன் ஆனந்துக்குத் தான் முதலில் பாரத ரத்னா வழங்கி இருக்கணும் !
த,ம

கும்மாச்சி said...

பகவான்ஜி வருகைக்கும், கருத்திற்கும் நன்றி.

Unknown said...

an honest article despite the media hype on sachin.. kudos

கும்மாச்சி said...

விவேக் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

ராஜி said...

சரியான கருத்து

கும்மாச்சி said...

ராஜி வருகைக்கு நன்றி.

silanerangalil sila karuththukkal said...

கும்மாச்சி.. எனது போஸ்ட்டும் இப்படித்தான் ஆரம்பிக்குதுண்ணா... ”சில தினங்களாகவே இணைய உலகில்..” படிங்கண்ணா.. படிச்சுட்டு கருத்துண்ணா..
http://silanerangalilsilakaruththukkal.blogspot.in/2013/11/blog-post_19.html..
great people think alike ஆக இருக்குமா...?

கும்மாச்சி said...

பத்ரி வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

திண்டுக்கல் தனபாலன் said...

புலம்பல் சரி தான்....

கும்மாச்சி said...

தனபாலன் வருகைக்கு நன்றி.

Unknown said...

அட ஆமாம்ல

Anonymous said...

neenga ella pugalukaga engura fellows athan all having same openion, Dravis is not as agrassive as sachin boss see sachin's old videos

கும்மாச்சி said...

மாற்றுக்கருத்தைக் கூற அனானியாக வரத்தேவையில்லை. சச்சின் வீராவேசத்தோடு ஆடலாம் ஆனால் அவரால் ஒரு போட்டியை கடைசிவரை நின்று ஜெயிக்க வைக்கமுடியாது என்பதே எங்களது வாதம்.

மதுரை சொக்கன் said...

அர்த்தமுள்ள புலம்பல்தான்!

கும்மாச்சி said...

சொக்கன் அவர்களே வருகைக்கு நன்றி.

Anonymous said...

வணக்கம்
ரசிகனுக்கு புலம்பிய புலம்பல் அருமை வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

கும்மாச்சி said...

ரூபன் வருகைக்கு நன்றி.

Prince said...

very true.....

கும்மாச்சி said...

பிரின்ஸ் நன்றி

”தளிர் சுரேஷ்” said...

நானும் சச்சின் ரசிகன் தான்! ஆனால் வெறியன் அல்ல! 2003 உலக கோப்பை இறுதிப்போட்டியில் சச்சின் தேவையில்லாத ஷாட் அடித்து அவுட் ஆன போது அதிர்ந்து போனேன்! கிரிக்கெட் அரசியல்! பாரத ரத்னா இப்போது இவருக்கு அவசியம் இல்லைதான்!

கும்மாச்சி said...

சுரேஷ் வருகைக்கும், கருத்திற்கும் நன்றி.

அருணா செல்வம் said...

சர்சினே தனக்கு இந்த விருது வேண்டாம் என்று சொல்லியிருந்தால்...
உண்மையில் அவரைப் பாராட்டலாம்.

நம்பள்கி said...

கிரிக்கெட்டை பற்றி நன்கு அறிந்தவன் என்ற முறையில் சில வரிகள்...
GR. விஸ்வநாத் பெரிய வீரர்! No questions! அழகான ஆட்டக்காரர்! எல்லாம் சரி! அதே சமயம் இவரை கவாஸ்கருடன் ஒப்பிடு செய்வது மாபெரும் தவறு!

கவாஸ்கர் மச்சான் GR விஸ்வநாத். கவாஸ்கர் சகோதரியை திருமணம் செய்தவர்- இவர் கிரிகெட் வாழ்க்கை நீடித்ததற்கு கவாஸ்கர் ஒரு மிக மிக காரணம்--என்ன இருந்தாலும் தன் சகோதரி கணவன் GR விஸ்வநாத். அல்லவா?

பிரசன்னா எங்கே வெங்கட்ராகவன் எங்கே? இது தமாஷ்!
ஸ்ரீகாந்த் நல்ல ஆட்டக்காரர். அவ்வளவு தான்.

மொஹிந்தர் அமர்நாத்--எப்படி வேகப் பந்து வீசுக்கு ஆடனும் என்று சொல்லிக் கொடுத்தவர்--அதே சமயம், இந்துயாவில் மேற்கிந்தய தீவு அணி வந்தபோது..இவரை ஊத்தி மூடினார்கள்.

மற்றபடி வெங்கட்ராகவன் , ஸ்ரீகாந்த், GR விஸ்வநாத்--இவர்களுக்கு இவ்வளவு அங்கீகாரம் கிடைத்ததே---அதிகம்!

நம்பள்கி said...

தமிழ்மணம் +1 வோட்டு போட்டுட்டேன்!

கும்மாச்சி said...

நம்பள்கி ஜி.ஆர்.வி பற்றிய உங்களுடைய கருத்தை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

இருந்தாலும் கருத்திற்கும் வருகைக்கும் நன்றி.

கும்மாச்சி said...

அருணா உங்களுடைய கருத்தை அமோதிக்கிறேன், வருகைக்கு நன்றி.

நம்பள்கி said...

நீங்கள் தவறாக புரிந்து கொண்டீர்கள்! GRV-இந்தியாவின் தலை சிறந்த ஆட்டக்கார்களில் ஒருவர்! இது உண்மை. நான் சொல்லவந்தது கவாஸ்கருடன் ஒப்பீடு செய்வது சரியில்லை.

பிரிஜேஷ் படேல் என்ற மீசைக்காரன்---இங்கிலாந்தில் ஆடிய ஆட்டம்-அது மாதிரி சிறப்பாக யாரும் ஆடவில்லை என்ற புகழாராம். கிரிகெட் பத்திர்க்கையில் .

ஏன் பிரிஜேஷ் படேல் சோபிக்கவில்லை என்று அன்று புரியவில்லை...இன்று புரிகிறது..பாம்பே அணிக்கு ஆடியிருந்தால்..நம்ம ரோஹித் சர்மா மாதிரி 101 போட்டிகளில் பங்கேற்க வைத்து முன்னுக்கு கொண்டு வந்து இருப்பார்கள்.

India lost an excellent stylish batsman in Brijesh Patel; and an extra-ordinary fields man...தூத்தேரி இந்தியா!

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

சச்சின் ஆஸ்திரேலியாவுக்கு விளையாடி இருந்தால் எப்போதோ ஓரம கட்டி இருப்பார்கள். சச்சின் சிறந்த வீரதான். ஆனால் எம்.பி.பதவி பாரத ரத்னா எல்லாம் கொஞ்சம் ஓவர்தான்.சச்சினைப் பற்றி புகழ் பெற்ற வீரர்கள் பலர் புகழ்ந்துரைத்துள்ளனர். ஆனால் சச்சின் சக வீரர்களை ஒருநாளும் பாராட்டியதில்லை.

கும்மாச்சி said...

முரளிதரன் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.