Tuesday, 26 November 2013

கூடங்குளமும், கெயில் எரிவாயு குழாயும் கோமாளி அம்மாவும்

கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டத்தை அரசு எப்படி அடக்கியதோ அதேபோல் கெயில் நிறுவனத்தின் எரிவாயு குழாய் அமைக்கும் பணிக்கு எதிரான போராட்டத்தை அடக்கி சட்டம் ஒழுங்கை தமிழக அரசு பாதுகாக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்திருக்கிறது.

கூடங்குளம் பொறுத்த வரை  அகில உலக அகிலாண்டேஸ்வரி தாய் அம்மா அவர்கள் கட்டிய இரட்டைவேடம் நாம் அறிந்ததே. உள்ளாட்சி தேர்தலுக்கு முன்பு கூடங்குளம் போராட்டக்காரர்களிடம் உங்களில் ஒருத்தி நான் என்று கூறிவிட்டு தேர்தல் முடிந்தவுடன் அடக்குமுறையை ஏவிவிட்டு அசிங்க நாடகம் நடத்தியவர்.

கேரள மாநிலம் கொச்சியில் இருந்து தமிழகத்தின் 7 மாவட்டங்கள் வழியாக பெங்களூருக்கும் அங்கிருந்து மங்களூர் வரை பூமிக்கடியில் குழாய் மூலம் எரிவாயு கொண்டு செல்லும் திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது.
இந்த பணியை கெயில் இந்தியா நிறுவனம் செயல்படுத்துகிறது. இந்த பணி 2010ம் ஆண்டு தொடங்கியது. இதற்காக மத்திய அரசு ரூ.3 ஆயிரம் கோடி ஒதுக்கியுள்ளது. இதற்கான நிலங்கள் ஆர்ஜிதம் செய்யப்பட்டு விட்டது. தமிழகத்தில் கோவை, ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பூர், நாமக்கல் ஆகிய 7 மாவட்டங்களில் விவசாய நிலங்கள் வழியாக எரிவாயு குழாய் பதிக்கும் பணி நடந்து வந்தது.

 இந்நிலையில், விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதாக கூறி, இந்த திட்டத்துக்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். கெயில் இந்தியா நிறுவனத்தை எதிர்த்து விவசாயிகள் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தனர்.

இதற்கும் தமிழக அரசு விவசாயிகள் கருத்துக்கேட்பு கூட்டத்தை நடத்தி பின்னர் நிலங்கள் கையகப்படுத்துவதற்கு தடை விதித்து விவாசாயிகள் பக்கம் இருப்பதுபோல் போக்கு காட்டியது.

இந்த திட்டம் கூடங்குளம் போல் போகும் போக்கு நாம் அறிந்ததே.

பாரதி சொன்னது போல் உழவிற்கும் தொழிலுக்கும் வந்தனை செய்யவேண்டும்தான். இருந்தாலும் ஒட்டுமொத்தமாக விவசாயத்திற்கு மூடு விழா காணுவதும் நல்லதல்ல. இந்த குழாய் பாதிக்கும் பாதை முறையாக ஆய்வு செய்யப்பட்டு தேர்ந்தெடுக்கப்பட்டதா என்பதை அரசாங்கம் தெளிவாக்க வேண்டும். மாற்று பாதை பரிசீலனை செய்யப்பட்டதா?

நம்முடைய கவலை எல்லாம் அம்மா நடாத்தும் அவசர கோலத்தில் அள்ளித்தெளிக்கும் முடிவுகளும், ஒட்டு வங்கி அரசியலும் ஒட்டு மொத்தமாக உழவு மற்றும் தொழிலுக்கும் மூடு விழா காணுமோ என்பதே. ஏற்கனவே அம்மா போட்ட திட்டங்கள் பெஞ்சு தட்டி ஓய்ந்துவிட்டதை நாம் அறிவோம்.

Follow kummachi on Twitter

Post Comment

3 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

விவசாயத்திற்கு மூடு விழா என்றால் அனைத்திற்கும்...

Anonymous said...

துக்ளக் துணையோடு ஆட்சி நடத்தினால் இப்படி தான் இருக்கும் ..
அருவி, நெடு, மான் எல்லாம் வாய் மூடி கை பொத்தி முடங்கி கிடக்கும் ..

”தளிர் சுரேஷ்” said...

அம்மா திட்டங்கள் எல்லாம் பேப்பரோடு மட்டும்தான்! இப்படியே போனா தமிழ்நாடு வெளங்கிடும்!

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.