Pages

Monday, 4 November 2013

கலக்கல் காக்டெயில்-126


ஏமாறாதே....

காங்கிரசும், அ.இ.அ.தி.மு.கவும் நெருங்கி வருவதாக செய்திகள் வருகின்றன. அம்மாவும் ப.சி.யும் கூட பகையை மறந்து பேச்சு வார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறது.

சி.பி.ஐ, வழக்குகள் எல்லாம் அரசியல் பேரங்களுக்காக நடத்தப்படுகின்றன என்பது இவர்களது தேர்தல் சமய நடவடிக்கைகளில் நன்றாக தெரிகிறது. அம்மாவின் தூக்கத்தை கெடுக்கும் சொத்துக்குவிப்பு வழக்கிலிருந்து வெளியே வர இப்பொழுது கர்நாடக அரசின் தயவு தேவை. அதற்காக இப்பொழுது காங்கிரசுடன் நெருக்கம்.

தி.மு.க விற்கோ இப்பொழுது காங்கிரசை நம்பி புண்ணியமில்லை. ஆதலால் பாராளுமன்ற தேர்தல் முடிவைப் பொருத்து அடுத்த நடவடிக்கையை தொடங்கலாம் என்றிருக்கிறார்கள்.

நடத்துங்க உங்கள் நாடகத்தை. இலவசமும் டாஸ்மாக்கும் கைகொடுக்க இவர்கள் நாடகம் நன்றாகவே இன்னும் பல வருடம் ஓடும்.

மானஸ்தனும்,ஓட்டைவிழுந்த சொம்பும்

இவன் யாரென்று தெரிகிறதா?
தீயென்று புரிகிறதா?

நாட்டை விட்டே ஓடிவிடுவேன் என்று உதார் விட்ட "உலக்கை நாயகன்" அடுத்த படப் பிரசவம் சுகப்ரசவமாக அமைய "அகிலாண்டேஸ்வரி தாயிடம்" ஐக்கியமாகி பட்டிமன்ற நடுவராகி அம்மா டிவி ஜோதியில் கலந்து விட்டார்.

தீபாவளி சிறப்பு நிகழ்ச்சியாக அம்மா டிவியில் சினிமா நூறு என்று இரவு நிகழ்ச்சியாகப் போட்டு "சாமியிடம் மட்டும் சாந்தமாக பேசும்" அணில் அம்மாவிற்கு சொம்படித்ததை ஒளிபரப்பி "சிக்கிட்டாண்டா ஒரு அடிமை" என்று பறைசாற்றினார்கள். இவர் அடித்த சொம்பில் ஓட்டை விழுந்ததுதான் மிச்சம். 

இந்தக் கதாநாயகர்கள் சினிமாவில்தான் வீரம் பேசமுடியும், இந்த லட்சணத்தில் இவருக்கு முதல்வர் கனவு வேறு..............

டேய் நீங்களெல்லாம் நல்லா வருவீங்கபா...............

ரசித்த கவிதை

விபத்து

நெடுஞ்சாலை விபத்து .சாலை விபத்து .
விமான விபத்து .அது கோரமான விபத்து .
தீ விபத்து திடீர் விபத்து அது கொடுமையே.
அனு விபத்து .மெய் நடுங்க வைக்கும் விபத்து .
எரிவாயு விபத்து.கொழுந்து விட்டு எரியும் விபத்து .

ரயில் விபத்து .தொடருந்து கடவை விபத்து .
தொழிற்சாலை விபத்து .குடோனில் விபத்து .
படப்பிடிப்பில் விபத்து .கிரேன் சரிந்து விபத்து
சைக்கிளில் விபத்து. மதியாத சாதாரண விபத்து .
மின்சார விபத்து டிரான்ஃ பர்மர் வெடித்து விபத்து .

தண்ணிரில் விபத்து தத்தளிக்கும் விபத்து
காமெடி விபத்து.காதலி நினைவில் விபத்து .
படகு கவிழ்ந்த விபத்து .பதற வைக்கும் விபத்து .
கட்டுமானப் பணியில் கம்பிரம் இல்லா விபத்து .
பெருங்கடல் விபத்து .நீர்மூழ்கிக்கப்பலில் விபத்து .
காதலினால் தற்கொலை.அது கவலையான விபத்து .

அருகில் பெண் இருந்தால் அத்துமீறிய வேகமப்பா .
அவதானம் வேண்டுமப்பா ,பொறுமை வேண்டுமப்பா .
உடலை பதற வைக்கும் பல பல கொடிய விபத்தப்பா.
பைக்கில் விபத்தப்பா .கை பேசியால் பந்தா விபத்தப்பா .
விபத்தப்பா.விபத்தப்பா பேஸ்புக் பாவிப்பதால் விபத்தப்பா .
துரதிஸ்ட வசமான விபத்தப்பா ,உயிர் போனால் வராதுப்பா .
அவதானமாக இருப்போம் ...விபத்தை தவிர்ப்போம் ...

நன்றி: தமிழகி

 ஜொள்ளு


 

16 comments:

  1. உலக்கை நாயகன் அம்புட்டு தூரம் போயிட்டாரா ? ஜொள்ளு ஹி ஹி...

    ReplyDelete
  2. சினிமா ஒரு பொழுதுபோக்கு. அதில் வருபவ வெறும் நடிப்பு. அதுல நடிக்குறவங்களை நம்பினா இப்படிதான்!

    ReplyDelete
  3. மனோ வருகைக்கு நன்றி.

    ReplyDelete
  4. கவிதை(யும்) அருமை...! வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  5. அரசியல் நாடகங்கள் பார்த்து சலித்துவிட்டது! கோடி கோடியாக பணத்தை கொட்டிவிட்டு வீரம் பேச முடியாது! பணிந்து போகிறார்கள்! சிறப்பான கவிதை! பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
  6. கவிதைப் பகிர்வு செம கலக்கல் நண்பரே..
    நானும் ரசித்தேன்...

    ReplyDelete
  7. தனபாலன், சுரேஷ், மகேந்திரன் வருகைக்கு நன்றி.

    ReplyDelete
  8. "விபத்து "அனைவரும் கவனத்தில் எடுக்க வேண்டியவை. அருமை.

    ReplyDelete
  9. மாதேவி வருகைக்கு நன்றி.

    ReplyDelete
  10. கமல் ஜெயா டிவியில் பட்டிமன்ற நடுவராக பார்த்தவுடன் நொந்தே போய்விட்டேன் . இந்தளவு கீழிறங்கி போக வேண்டுமா ..?

    ReplyDelete
  11. வணக்கம்
    நல்ல கருத்துள்ள கவிதை அருமை வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  12. பானை என்னவோ பெரிசு தான்; இட்லி தட்டு தான் சின்னது!

    ReplyDelete
  13. மணிமாறன் எல்லாம் பணம் செய்யும் வேலை.

    ReplyDelete
  14. ரூபன் வருகைக்கு நன்றி.

    ReplyDelete
  15. நம்பள்கி, வருகைக்கு நன்றி. இட்லிதட்டு சின்னதா, குஷ்பு இட்லியை எதிர்பார்க்கிறீர்களோ?

    ReplyDelete
  16. சோக்கா கலக்கிகீறேபா...

    ReplyDelete

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.