Thursday, 21 November 2013

கலக்கல் காக்டெயில் -128

சபாஷ் டேவிட் கேமரூன்

இலங்கையில் நடந்த காமன்வெல்த் மாநாட்டில் வெறும் இருபத்தி சொச்சம் நாடுகளே  கலந்து கொண்டன. கிட்டத்தட்ட முப்பது நாடுகள் புறக்கணித்தன. தமிழர்களின் வேண்டுகோளுக்கு தலை சாய்க்காத நமது மத்திய அரசோ வெளியுறவுத்துறை அமைச்சரை அனுப்பி  தனது இலங்கை விஸ்வாசத்தை காண்பித்துள்ளது. அவரும் குஞ்சிதபாதமாக குனிந்ததாக செய்திகள் வந்தன, அதன் உண்மை நிலைமை நமக்குதெரியாது. 

இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் அதிரடியாக போரில் பாதித்த பகுதிகளையும், மற்ற தமிழர் வசிக்கும் பகுதிகளையும் நேரில் சென்று தமிழர்களின் கடைகளில் தேநீர் அருந்தி, மக்களுடன் பேசி உண்மையான நிலைமையை உலகுக்கு அறிவித்துள்ளார்.

உழவு நிலங்களை ஆகிரமித்துள்ள ராணுவங்கள் இன்னும் வெளியேறவில்லை, தமிழர்களின் பகுதிகள் அவர்களுக்கு திருப்பி கொடுக்கப்படவில்லை என்பதை வெட்ட வெளிச்சமாக்கியுள்ளார்.

நம்மூரு எம்.பி.க்கள் உண்மை நிலைமை அறிய சென்று என்ன பிடுங்கினார்கள்? என்று தெரியவில்லை. கறிசோறு தின்று ராஜபக்ஷே போட்டதை பொறுக்கி வந்தார்கள் என்பது நன்றாகவே தெரியும்.

பெங்களுரு எ.டி.எம் சம்பவம்

பெங்களுருவில் ஒரு வங்கி எ.டி.எம்மில் பணம் எடுக்க சென்ற பெண்மணியை கொடூரமாக தாக்கி ருபாய் இரண்டாயிரத்தி ஐநூறு  கொள்ளையடித்த சம்பவத்தை இன்று எல்லா தொலைக்காட்சிகளும் ஒளிபரப்பிக்கொண்டிருக்கின்றன.  உண்மையான காட்சியை பார்க்க நேர்ந்தால் இரண்டு நாட்களுக்கு தூக்கம் வராது. அற்ப காசுக்காக கபாலத்தைப் பிளந்தது அநியாயம். இவனுக்கெல்லாம் உச்சகட்ட தண்டனையாக மாறுகால், மாறுகையை வாங்க வேண்டும். சற்று யோசித்தால் இந்த "Barbaric" தண்டனை முறைதான் சிறந்ததோ என்று தோன்றுகிறது.


ரசித்த கவிதை 

"காலையிளம் பிரிதியிலே அவளைக் கண்டேன்
கடற்பரப்பில் ஒளிப்புனலில் கண்டேன் அந்தச்
சோலையிலே மலர்களிலே தளிர்கள் தம்மில்
தொட்ட இடம் எல்லாம் கண்ணில் தட்டுப்பட்டாள்
மாலையிலே மேற்திசையில் இலகுகின்ற
மாணிக்கச் சுடரில்  அவள் இருந்தாள் ஆலஞ்
சாலையிலே  கிளைதோறும் கிளியின் கூட்டந்
தனில்அந்த அழகென்பாள் கவிதை தந்தாள்"

---------------பாவேந்தர் பாரதிதாசன்

ஜொள்ளு 


Follow kummachi on Twitter

Post Comment

16 comments:

ராஜி said...

கேமரூனுக்கு வணக்கம். பெங்களூரு சம்பவம் அச்சத்தை அதிகமாக்குது. இது ஜொள்ளு இல்ல கர்மம்.

Anonymous said...

வணக்கம்
தங்களின் ஆதங்கம் புரிகிறது........ என்னதான் செய்யமுடியம்
வாழ்த்துக்கள்

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

கும்மாச்சி said...

ராஜி வருகைக்கு நன்றி.

கும்மாச்சி said...

ரூபன் வருகைக்கு நன்றி.

நம்பள்கி said...

துள்ளாத மனமும் துள்ளும்!

நம்பள்கி said...

இலை மறைவு காய்கள் மறைவு!

நம்பள்கி said...

கவுச்சியை முழுவதம் காட்டினாலும் கவர்ச்சி இருக்கும் என்று சொல்ல முடியாது; அதே சமயம், இப்படி உடையுடன் கவர்ச்சியாக இருக்கலாம் என்பதை உலகத்திற்கு எடுத்துக்காட்டி விளக்கினத்ற்க்கு....உங்களக்கு ஒரு போ..!

போ..1 என்றால்--தமிழ்மணம் வோட்டு பிளஸ் + 1 போட்டாச்சு என்று அர்த்தம்.

போ..1

திண்டுக்கல் தனபாலன் said...

கொடூரமான சம்பவத்தை நினைத்தாலே நெஞ்சு பதறுகிறது...

அமுதா கிருஷ்ணா said...

இனிமே ஏடிஎம்-போகும் போது நாமும் அரிவாளுடன் தான் போணும் போல...

கும்மாச்சி said...

நம்பள்கி வருகைக்கு நன்றி.

கும்மாச்சி said...

தனபாலன் வருகைக்கும் ஆதரவிற்கும் நன்றி.

கும்மாச்சி said...

அமுதா கிருஷ்ணா பாதுக்காப்பாக இருப்பது நல்லதே.

aavee said...

கேமரூனுக்கு ஒரு சல்யூட்.

கும்மாச்சி said...

கோவை ஆவி கருத்திற்கு நன்றி.

வெளங்காதவன்™ said...

ஜொள்ளு... ஹி ஹி

Unknown said...

கேமரூன் ,அடுத்தது கேமரா ரூமில் நடந்தது ,கடைசி 'கர்மமும் 'அருமை !
த .ம 6
தங்களின் பார்வைக்கு ...http://jokkaali.blogspot.com/2013/11/blog-post_3165.html

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.