கருப்பு நிலா மறைந்தது.........
இருபதாம் நூற்றாண்டின் இரண்டாவது மிகச்சிறந்த விடுதலைப் போராட்டத்தை நடத்தி வெற்றி கண்ட "கருப்பு நிலா" நெல்சன் மண்டேலா மறைந்து விட்டார்.
வெள்ளையர்களின் இனவாதத்திற்கு எதிராக போராட்டம் நடத்தி இருபத்தியேழு ஆண்டுகள் சிறையில் வாடியவர். பல்வேறு நாடுகளின் வற்புறுத்தலின் பேரில் 1990 ல் சிறையிலிருந்து விடுவிக்கபட்டார். ஒரு நாட்டின் இனவாத அரசை ஒழித்து தங்களினத்தவருக்கு எல்லா உரிமைகளையும் பெற்றுத்தர இருபத்தியேழு ஆண்டுகள் தனிமையில் சிறையில் கழித்த ஒரே போராளி மண்டேலா. அவரை சிறையிலிருந்து விடுவிக்க மன்னிப்பு கேட்க தென் ஆப்பிரிக்க அரசு கேட்டுக் கொண்டபொழுது அதை நிராகரித்தவர்.
தென் ஆப்பிரிக்காவின் வரலாற்றில் முதன் முதலாக எல்லா இன மக்களாலும் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே அதிபர் அவர்.
உலக சரித்திரத்தில் மண்டேலாவின் புகழ் என்றென்று நிலைத்திருக்கும்.
வெள்ளை இருட்டை விலக்கவந்த கருப்பு நிலா மறைந்துவிட்டது-----கலைஞர் ட்விட்டரில்
கூட்டணி கூத்து
நடந்து முடிந்த ஐந்து மாநில சட்டசபைகளின் தேர்தலின் கருத்து கணிப்பில் பி.ஜே.பி. மத்திய பிரதேசத்திலும், ராஜஸ்தானிலும் ஆட்சி அமைக்கும் போல் தெரிகிறது. டில்லியிலும் அதிக இடங்களை பிடிப்பதாக பேசப்படுகிறது.
அதை வைத்து இப்பொழுது கூட்டணி கும்மாளம் தொடங்கியுள்ளது. ஏற்கனவே இளவல் அம்மாவை தொடர்பு கொண்டதாக செய்திகள் வருகின்றன. ஐயாவும் புது புது வசனங்களை தேடிக்கொண்டிருக்கிறார்.
ஏற்கனவே கேப்டனுக்கு வெள்ளையுள்ளம் என்று கொக்கி போட்டிருக்கிறார்.
மக்கள் உள்ளம் தேடி புகுந்த மோடியே என் இதயத்தின் நாடியே வா........தலைமையேற்க வா போன்ற வாசகங்கள் கோபாலபுரத்திலிருந்து எந்நேரமும் வரலாம்.
ரசித்த கவிதை
நன்றி: அருணா செல்வம்
ஜொள்ளு

கன்னி ஒருத்(தீ) !!
கன்னி ஒருத்தி
கடற்கரையில் நின்றிருக்க
மின்னி இடியிடித்து
மேற்றிசையில் காற்றடிக்க
என்றும் இலாதோர்
எதிராக வந்தஅலை
நின்றே இருந்தவளை
நேர்மையின்றிச்
சாய்த்துவிடப்
பின்னல் குழல்நனையப்
பின்னே விழுந்தாளே!
தென்னை இளங்காற்றாய்த்
தேவனாக வந்தவனோ
முன்னால் கரம்கொடுத்து
மூச்சடக்கித் தூக்கிவிடச்
சின்ன இளமனது
சீரிழந்து போனதம்மா!நன்றி: அருணா செல்வம்
ஜொள்ளு
19 comments:
வணக்கம்
இறைவனை வணங்குவோம் ஆத்மா சாந்தியடைய...
இறுதியில் உள்ள கவிதை சூப்பர்...
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வருகைக்கு நன்றி ரூபன்.
கவிதை "அருணா செல்வம்" அவர்கள் எழுதிய கொச்சகக் கலிப்பா
நெல்சன் மண்டேலா மரணம் - ஆழ்ந்த இரங்கல்கள்...
கவிதை நன்று...
தனபாலன் வருகைக்கு நன்றி.
தென் ஆப்பிரிக்காவின் “கறுப்பு காந்தி“ என்று அழைக்கப்பட்டவர் நெல்சன் மண்டேலா. அவராவது வயதாகி இறந்தாரே....
இருந்தாலும் கவலை தரும் செய்தி.
தவிர என்பாடலை வெளியிட்டு எனக்கு
உங்கள் வலையில் நல்ல அங்கீகாரத்தைக்
கொடுத்ததற்கு மிக்க நன்றி கும்மாச்சி அண்ணா.
வருகைக்கு நன்றி அருணா.
இந்த வார காக்டெயில்ல சம்திங் மிஸ்ஸிங்.
ராஜி வருகைக்கு நன்றி.
என்ன சைடு டிஷ்தானே மிஸ்ஸிங்? அடுத்த வாரம் போட்டுடலாம்.
நீங்காத நினைவுகளோடு நெஞ்சில் நிறைந்த கறுப்பு நிலா .
அன்னாரின் ஆன்மா சாந்தி பெற பிரார்த்திப்போம் .தோழி
அருணாவின் கவிதை வரிகள் கண்டும் மகிழ்ந்தேன் .மிக்க
நன்றி சகோதரரே சிறப்பான பகிர்வுக்கு .
ஜொள்ளு \\Looks like school going girl!!
அம்பாளடியாள் வருகைக்கு நன்றி.
வருகைக்கு நன்றி ஜெயதேவ்
ஸூப்பர் காக்டெய்ல்ஸ்! நெல்சன்மண்டேலா ஒரு மாமனிதர் என்பதில் சந்தேகமே இல்லை!! நல்லா காலம் அவரையாவது விட்டு வைத்தார்களே இறுதி வரை...மரணம் தழுவும் வரை....!!
வருகைக்கு நன்றி
இந்த லேடீஸ் ஜீன்ஸ் பேன்ட்டில் அதிசயமாய் பை இருக்கிறதே ,செலவு பண்ண எவனும் சிக்கலையா ?
த.ம 5

பகவான்ஜி வருகைக்கு நன்றி.
கவுஜ சோக்கா கீதுபா...
அல்லாம் போட்டாச்சு... போட்டாச்சு...
முட்டா நைனா வருகைக்கு நன்றி.
Post a Comment
படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.