Pages

Monday, 30 December 2013

கடிச்ச பத்து கடிக்காத பத்து

வேலை நிமித்தமாக மலேசியா சென்று வந்ததால் கடந்த பத்து நாட்களாக  வலையுலகம் பக்கம் வர முடியவில்லை. வருடக் கடைசி என்பதால் அந்த வருடம் வந்த படங்களை பட்டியலிட்டு பிடித்த பத்து, பிடிக்காத பத்து, கடிச்ச பத்து கடிக்காத பத்து, வெடிச்ச பத்து, வெடிக்காத பத்து, முடிச்ச பத்து, முடிக்காத பத்து என்று பல பட்டியல்கள் அணி வகுக்கும். இனிதான் இவற்றையெல்லாம் தேடிக்கண்டு பிடிக்க வேண்டும்.

நடுவில் ஹாரி அடுப்பில் ஆரம்பித்து அவிச்ச முட்டை வரைவந்த பதிவுகளை மேலோட்டமாக பார்க்க முடிந்தது. அதற்கு முத்தாய்ப்பாக "காணாமல் போன கனவுகள்" ராஜி அம்மா கழுவிய பாத்திரத்தில் கணவனை துவைப்பது எப்படி என்று ஒரு பதிவு போட்டு அசத்தினார்கள்.

இப்பொழுதெல்லாம் பதிவுலகம் பக்கம் வரவில்லை என்றால் கைகால்கள் எல்லாம் நடுங்க ஆரம்பித்து விடுகிறது. ரெண்டு கட்டிங் இல்லாமல் சரியாக மாட்டேன் என்கிறது.

ஒயின்ஷாப் பிரபாகரன் கனவுக்கன்னிகள் பதிவைப் பார்க்கும் பொழுது ஐயோ எத்துனை பதிவுகளை படிக்கத் தவறிவிட்டோம் என்ற ஏக்கம் எழுகிறது.

மலேசியப் பயணம் முடிந்து பதிவுலகம் பக்கம் வர முதல் மொக்கை தொடங்கியாகிவிட்டது.

இனி வழக்கம்போல மொக்கைகளை தொடரலாம்.

12 comments:

  1. வரும் ஆண்டு மேலும் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்....

    ReplyDelete
  2. மலேசியப் பயணம் முடிந்து பதிவுலகம் பக்கம் வர முதல் மொக்கை தொடங்கியாகிவிட்டது.........தொடரட்டும் உமது திருவிளையாடல்கள்

    ReplyDelete
  3. முத்துராசன் வருகைக்கு நன்றி.

    ReplyDelete
  4. புத்தாண்டு உங்கள் அருமையான மொக்கைகளுடன் மலரட்டும்!!! வாழ்த்துக்கள்!!!

    இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!!!

    துளசிதரன், கீதா

    ReplyDelete
  5. துளசிதரன் வருகைக்கு நன்றி

    ReplyDelete
  6. மலேசிய மங்கைகளை ..தப்பு ..தப்பு ...மொக்கைகளைக் காண ஆவல் !
    +1

    ReplyDelete
  7. பகவான்ஜி வருகைக்கு நன்றி.

    ReplyDelete
  8. நேரம் கிடைக்கும்போது தவற விட்ட பதிவுகள் அனைத்தையும் படிக்கவும், புத்தாண்டு வாழ்த்துக்கள்....

    ReplyDelete
  9. வருகைக்கு நன்றி.

    ReplyDelete
  10. மொக்கை போடப் போடறேன்னு சொல்றதுக்கு ஒரு மொக்கை பதிவா, என்ன கொடுமை சரவணா இது?!!

    ReplyDelete
  11. ஜெயதேவ் வருகைக்கு நன்றி.

    ReplyDelete

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.