சமீபத்தில் நண்பர் வீட்டிற்கு சென்றிருந்த பொழுது "கண்ணீரில்லாமல்" என்ற சுஜாதா எழுதிய கட்டுரைத் தொகுப்பை வாங்கி வந்தேன். அதில் ஐந்து கட்டுரைகள் இடம் பெற்றிருக்கின்றன. உயிர்மைப் பதிப்பகம் வெளியிட்டுள்ளது.
கண்ணீரில்லாமல் யாப்பு
கண்ணீரில்லாமல் கர்நாடக சங்கீதம்
கண்ணீரில்லாமல் மேற்கத்திய சங்கீதம்
கண்ணீரில்லாமல் ஐன்ஸ்டைன்
கண்ணீரில்லாமல் இந்துமதம்
இந்த ஐந்துக் கட்டுரைகளில் முதலில் இடம் பெற்றுள்ள யாப்பு என்னை மிகவும் கவர்ந்தது. சிறுவயதில் மதிப்பெண்கள் மனதை ஆக்கிரமித்ததால் உருபோட்ட தமிழ் இலக்கணம், இப்பொழுது மறுபடியும் படிக்கும் பொழுது கவிதைகளை ரசிக்க முடிகிறது. இதில் மரபுக்கவிதைகள் பற்றி எழுதியிருக்கிறார்.
யாப்பு என்பது எதையும் கட்டுவதற்கு அல்ல தைப்பதற்கு ஏற்பட்ட சொல். "கழல் யாப்பு காரிகை நீர்த்து" என்கிறது திருக்குறள். பாரதி "காசிப் பட்டுப் போல பாட்டு நெய்ய வேண்டும், அல்லது உழவனுக்கு வேண்டிய உறுதியான கச்சை வேட்டிபோல நெய்ய வேண்டும். மல் நெசவு கூடாது, மஸ்லின் நீடித்து நில்லாது" என்றார் என்று கட்டுரையைத் தொடங்குகிறார்.
பின்பு தமிழ் எழுத்துக்களின் பாகுபாட்டை விவரித்து அசை சொல்லுக்கு விளக்கமளிக்கிறார்.
பின்பு எளிமையான எடுத்துக்காட்டுடன் நேரசை நிரையசை என விவரித்து யாப்பிலக்கணத்தின் பாகுபாட்டையும் அதன் சூட்சுமங்களையும் விவரிக்கும் பொழுது நமக்கு நன்றாகப் புரிகிறது. கட்டுரையை நிதானமாக படித்து புரிந்து கொண்டால் யாப்பை ரசிக்க முடிகிறது.
சற்றே துவையல் அரை தம்பி ஒருபச்சடிவை
வற்றல் ஏதேனும் வறுத்தவை-குற்றமிலை
காயமிட்டுக் கீரை கடை கம்மெனவே மிள
காயரைத்து வைப்பாய் கறி
எனும் சிவஞான முனிவரின் கறி வைக்கும் வெண்பாவின் யாப்பிலக்கணம் புரிகிறது.
தமிழ் கவிதைகளை வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா என பாகுபடுத்தி அவைகளின் ஓசை நயங்களை விவரிக்கிறது கட்டுரை.
ஒவ்வொரு பாவகைகளுக்கும் மூன்று வித உட்பிரிவுகள்.அந்த உட்பிரிவுகளில் மிகவும் பிரபலமானவை கலித்துறையும்,ஆசிரிய விருத்தமும் மிகவும் பிரபலமாயின.
ஆசிரிய விருத்தத்தில்அறுசீர் விருத்தம் கம்பர் தொட்டு சமகால கவிஞர்கள் வரை நிறைய எழுதுகிறார்கள். தற்பொழுது கவிதாயினி அருணா செல்வம் அவர்கள் எழுத்தும் கவிதைகளை நான் மிகவும் ரசிப்பேன்.
பதிவர் தோழி அருணா செல்வம் சமீபத்தில் எழுதிய "கோபமா என்னுடன்" என்ற அறுசீர்விருத்தத்தை அதன் பொருளையும் தாண்டி இப்பொழுது என்னால் ரசிக்க முடிகிறது.
சுஜாதாவிற்கு நன்றி.
சமீபத்தில் அருணா செல்வம் அவர்கள் எழுதிய அறுசீர் விருத்தம்

காலை உறக்கம் கலைந்ததுமே
கண்முன் வந்து நிற்கின்றாய்!
வேலை கிளம்பும் அவசரத்தில்
விழுங்கு வதுபோல் பார்க்கின்றாய்!
சோலை வழியே செல்லுகையில்
சூழும் மணத்தில் மயக்குகிறாய்!
நூலை எடுத்துப் புரட்டுகையில்
நுவலும் பொருளில் தெரிகின்றாய்!
என்னில் உள்ளே இருந்தாலும்
எதிரில் காண ஓடிவந்தால்
“என்னை ஏனோ மறந்துவிட்டாய்!“
என்றே கோபம் கொள்கின்றாய்!
உன்போல் எல்லாக் காதலரும்
ஊடல் கொள்வார்! படித்ததுண்டு!
என்மேல் கோபம் கொள்கின்ற
என்தன் உயிரே என்செய்வேன்?!
எந்த நிலையில் உனைமறந்தேன்
என்று தேடிப் பார்க்கிறேன்!
அந்த நிலையை நான்அறிந்தால்
அந்தக் கனத்தைப் பொய்யென்பேன்!
சொந்தம் கொண்ட சொல்லமுதே
சொர்க்கம் எங்கே எனக்கேட்டால்
இந்த நிமிடம் உன்னருகில்
இருக்கும் நேரம் அதுவென்பேன்!
மறத்தல் என்பது மனிதருக்கு
மகேசன் கொடுத்த வரமென்பார்!
சிறந்த வாழ்வு செழிப்பதற்கு
சீராய் வந்த உன்னுருவை
மறந்து விடும்நாள் வந்ததென்றால்
மாறும் இந்த உலகத்தில்
இறந்து போதல் உயர்வென்பேன்!
இனிமை அதுவே தருமென்பேன்!
அருணா செல்வம் வலைப்பூவிற்கு செல்ல சொடுக்கி
கண்ணீரில்லாமல்------------சுஜாதா
உயிர்மைப்பதிப்பகம் வெளியிட்டுள்ளது விலை 30 ரூபாய்
10 comments:
ரசித்தேன்...
தனபாலன் வருகைக்கு நன்றி.
வணக்கம்
அருமையாக எழுதியுள்ளிர்கள் வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
ரூபன் வருகைக்கு நன்றி.
கற்றதும் பெற்றதும் முதல் பாகத்தில் வெண்பா குறித்து எளிமையாக சொல்லியிருப்பார் சுஜாதா! நல்ல புத்தகம் போல படிக்க தூண்டுகிறது பகிர்வு! அருணா செல்வம் கவிதை ரசித்தேன்! நன்றி!
சுரேஷ் வருகைக்கு நன்றி.
“தற்பொழுது கவிதாயினி அருணா செல்வம் அவர்கள் எழுத்தும் கவிதைகளை நான் மிகவும் ரசிப்பேன். “
மிக்க நன்றி கும்மாச்சி அண்ணா.
கலைஞர்களுக்குக் காசை விட
உண்மையான வெளிபடையான பாராட்டுகள் தான்
மிகச் சிறந்த பரிசு.
அந்தப் பரிசை உங்களிடமிருந்து
இன்று பெற்றதில் பெருமகிழ்வு கொள்கிறேன்.
சுஜாதாவின் இந்த கட்டுரைகளை நான் படித்ததில்லை.
கிடைத்தால் படிப்பேன்.
மீண்டும் நன்றி கும்மாச்சி அண்ணா.
வருகைக்கு நன்றி அருணா
அருமையானதொரு பதிவு! அதுவும் வாசிப்போர் எல்லா இதயங்களையும் நிறைத்த சுஜாதா அவர்களின் எழுத்துக்கள் பற்றி! கண்ணீரில்லாமல் என்று அவர் எழுதி இருக்கலாம்! ஆனால் நம் கண்களில் கண்ணீர் கட்டத்தான் செய்கிறது! அவர் இஉந்திருந்தால் இன்னும் எழுதியிருப்பாரே என்று!
கண்ணீர் அஞ்சலி செலுத்தி - அவரை
மண்ணில் புதைத்தெரித்தாலும்
எண் திக்கும் புகழ் மணக்க - வாழ்கிறார்
எண்ணற்ற தமிழ் இதயங்களில்!!
மிக்க நன்றி சுஜாதாவின் எழுத்துக்களைப் பகிர்ந்ததற்கு!
துளசிதரன், கீதா
வருகைக்கு நன்றி
Post a Comment
படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.