வெளிநாடுகளில் வழக்கம்போல் ஒரு நாள் முன்பாகவே ஜில்லா, வீரம் இரண்டு படங்களும் வெளியாகிவிட்டன. நேற்று ஜில்லா படம் பார்க்க நேர்ந்தது. (வீட்டம்மா ஒரு அணில் ரசிகை)
படம் பார்த்த பின் என்னுடைய கருத்துகள் இவை. தீவிர அணில் குஞ்சுகள் இதை படிக்க வேண்டாம். அப்படியே படித்து கெட்டவார்த்தையில் திட்டுவதாக இருந்தால்அனானியாக வந்து திட்டாதீர்கள்.
சமீபகாலமாக "மாஸ்" "மரண மாஸ்" என்ற வார்த்தைகளில் மயங்கி தாதா, தாதாக்கு தாதா என்று அடி,உதை,குத்து,கொலை,தூக்கிடுறேன் என்று வன்முறைகள் நிரம்பிய காட்சிகள் வைத்து ரசிகர்களை சோதனைக்குள்ளாக்குவது என்பது வாடிக்கையாகிவிட்டது. அந்த வகையில் மற்றுமொரு படம் "ஜில்லா".
சிவன் (மோகன்லால்) மதுரையில் ஒரு பெரிய தாதா. அவரிடம் வேலை செய்யும் ஒருவரின் மகன்தான் சக்தி (விஜய்). சக்தியின் தந்தை ஒரு கைகலப்பில் இறந்துவிட அதற்கு காரணமானவர் ஒரு காவலர் என்பதை நேரில் கண்ட சக்திக்கு காக்கி சட்டை என்றாலே வெறுப்பு. பள்ளிக்கூடத்தில் யாராவது நான் போலீசாவேன் என்றால் டிக்கியை பஞ்சராக்கிவிடுவார். சிவனின் மனைவியின் பிரசவக்காலத்தில் ஆபத்திலிருந்து காப்பாற்றியதால் சக்தி சிவனின் வளர்ப்பு மகனாகிறார்.
பின்னர் சிவன் தனக்கு போலீசில் ஒரு ஆள் இருந்தால்தான் தனது தொழிலுக்கு நல்லது என்று சக்தியை கூர்க்காவாக்குகிறார். வேறென்ன சொல்லுவது, கதாநாயகனுக்கு போலிஸ் வேடம் துளிக்கூட பொருந்தவில்லை. கதாநாயகன் கதாநாயகி, காமெடியன் என்று எல்லோருமே போலிஸ் (கூர்க்காக்கள்).
நாளடைவில் சிவன் செய்வது தவறு என்று சக்திக்கு தெரிய வருகிறது (அது வரையில் அவருக்கு வாயில் வைத்தாலும் கடிக்கத்தெரியாதாம்).சிவாவை சக்தி எப்படி திருத்துகிறார்,உண்மையான வில்லன் யாரு என்று அடையாளம் தெரிந்து கடைசியில் அவரைத்தூக்குகிறார்கள்.
படத்தில் லாஜிக் என்று எதிர்ப்பார்ப்பவர்கள் இந்த படத்திற்கெல்லாம் வாராதீர்கள். அப்பப்போ அடித்துக்கொள்வார்கள். குத்துவார்கள், தூக்குவார்கள் அதெல்லாம் கண்டுகொள்ளக்கூடாது. அப்பப்போ ஹீரோ காஜல் அகர்வாலை பார்த்து ஜொள்ளுவிடுவார். தலைவா போலவே இதிலும் கதாநாயகி ஒரு காமெடி போலிஸ் பீசு.
காஜல் அகர்வாலை எவ்வளவு மோசமாக காண்பிக்க முடியுமோ அவ்வளவு மோசமாக காண்பிக்க மெனக்கெட்டிருக்கிறார்கள். விஜய் படத்தில்இசையும் நடனமும் நன்றாக இருக்குமென்றுபடம் பார்க்கும் கூட்டம் இந்தப் படத்தில் ஒவ்வொரு பாட்டிலும் சட்டசபையின் எதிர் கட்சிகள் போல கூண்டோடு வெளியேறினார்கள். ஈமானின் இசை கர்ண கடூரம்.
மோகன்லாலை இன்னும் நன்றாக உபயோகப்படுத்தி இருக்கலாம். விஜய் அவருக்கு தகுந்த லவ்வர் பாய் வேடங்களில் நடிப்பது அவருக்கும் நாட்டிற்கும்?!!! நல்லது.
அதிரடி மாஸ் படங்கள் ஒருவருக்கு மட்டுமே சிலசமயம் க்ளிக் ஆனது, அவரே தனது போக்கை பின்னாளில் மாற்றிக்கொண்டார். நேசன் போன்றவர்கள் இதை உணர்ந்து திரைக்கதை அமைத்தால் தயாரிப்பாளர்கள் மாரடைப்பிலிருந்து தப்பலாம்.
ஜில்லா வேலை வெட்டியே இல்லையென்றால் மூன்று மணிநேரம் உட்கார பொறுமை இருந்தால் பார்க்கலாம்.

அதிரடி மாஸ் படங்கள் ஒருவருக்கு மட்டுமே சிலசமயம் க்ளிக் ஆனது, அவரே தனது போக்கை பின்னாளில் மாற்றிக்கொண்டார்.
ReplyDeletewho is that person

DAI ADMIN DUBUKU...... NEE VIJAY ORU ANIL SOLUMPOTHE. PURUNGICHI NEE VIMARSANAM ENNA PODA PORANU.. MOODIKITU PODA
ReplyDeleteவாங்கண்ணா செல்வண்ணா நீங்கதாண்ணா முதல் போனி, அண்ணனுக்கு தமிழ் தெரியாதுங்களா?
ReplyDeleteடிவில போடும்போது பார்த்துக்குறேன்
ReplyDeleteராஜி நல்ல முடிவு,
ReplyDeleteஜில்லா!!!!இன்றைகெல்லாம் மூளையை கழட்டி வச்சுட்டுதான் (அதான் லாஜிக்) விஜய் படங்களை பார்க்கனும் போல இருக்குது. இனி நல்ல விஜய் படங்களுக்கு வாய்ப்பே இல்லை. இயக்குனர்கள் விஜய், நேசன் போன்றவர்கள் ஒரு மாயையிலேயே வாழ்கிறார்கள் போலிருக்கிறது. நிதர்சனதிற்கு வாங்கப்பா.
ReplyDeleteவிஜய்க்கு இப்போ கெட்ட காலம் போல! காப்பாற்றியமைக்கு நன்றி!
ReplyDeleteஅசோக்ராஜ் வருகைக்கு நன்றி.
ReplyDeleteசுரேஷ் வருகைக்கு நன்றி.
ReplyDeleteவிரைவில் தொலைக்காட்சியில்...
ReplyDeleteதனபாலன் வருகைக்கு நன்றி.
ReplyDeleteகாஜலை பளிச்சுனு காட்டியிருக்காங்களா,அதுக்கே கொடுத்த காசு செரிச்சுடும்,இந்தஸ்டிலெல்லாம் படத்துல இருக்கா?
ReplyDelete+1
ReplyDeleteayyo ayyayo vijay yaru kappaththarudhu
ReplyDeleteவவ்வால் காஜலை காமெடி பீசாக்கியிருக்கிறார்கள்.
ReplyDeleteநல்ல விமர்சனம்!
ReplyDeleteத.ம.+
துளசிதரன் வருகைக்கு நன்றி.
ReplyDeleteதங்களுக்கும், தங்கள் குடும்பதினருக்கும் எங்கள் மனமார்ந்த பொங்கல் வாழ்த்துக்கள்!!
ReplyDeleteYar antha mass hero nu sollunga please
ReplyDeleteYar antha mass hero sollunga boss
ReplyDeleteYar antha mass hero nu sollunga please
ReplyDeleteவணக்கம் சகோதரர்
ReplyDeleteதங்களுக்கும், இல்லத்தார் அனைவருக்கும்,நண்பர்களுக்கும் எனது அன்பான தமிழர் திருநாள் மற்றும் உழவர் திருநாள் வாழ்த்துகள்..
உங்களுக்கு மட்டும் படங்கள் எங்கிருந்தான் கிடைக்கிறதோ!!
ReplyDelete#ஜில்லா----இந்த விமர்சனத்தை படிக்காதீங்க#
ReplyDeleteஉண்மைதான் ,ஸ்டில்லை பார்த்தாலே போதும் !
த ம +1