Pages

Saturday, 25 January 2014

நமீதாவே வா----கவுஜ கவுஜ

நடிகை நமீதா அரசியலில் குதிக்கப்போவதாகவும் ஏதோ ஒரு கட்சியில் இணைந்து விட்டதாகவும் வந்த செய்தியை தொடர்ந்து கட்சி தலைமையிடமிருந்து வந்த வரவேற்பு மடல்


நமீதாவே வா
நடனமாடிவா
நாடு நலம் பெற
நாட்டமையோடு வா

களப்பணியாற்ற வா
கலாவோடு வா
கட்சி சிறக்க
கட்டாயம் வா

மானாட வா
மயிலாட வா
மக்கள் நலம் சிறக்க
மனம் திறந்து வா

கோன் உயர வா
கோடிகள் கொண்டு வா 
குடும்பம் செழிக்க
பொற்குவை கொண்டு வா

கண்மணிகள் களிக்க
கச்சசணிந்து வா
பா ஆடை புனைய
பாவாடையோடு வா


தலைவர் மனம் குளிர
தமிழ் கொண்டு வா
தலைமை பதவி மட்டும்
தரமாட்டேன் வா




14 comments:

  1. கண்மணிகள் களிக்க
    கச்சசணிந்து வா
    பா ஆடை புனைய
    பாவாடையோடு வா
    .............அட..அடடா.........

    ReplyDelete
  2. பரிதி ஐயா வருகைக்கு நன்றி.

    ReplyDelete
  3. ரெம்ப டெரர்ரா கீதுபா...

    அல்லாம் போட்டாச்சு... போட்டாச்சு...

    ReplyDelete
  4. நைனா கடியாண்ட வந்து கண்டுகின, டேங்க்ஸ்பா.

    ReplyDelete
  5. [[நமீதாவே வா
    நடனமாடிவா]]

    உங்கள் பாட்டு கண்ணதாசன் எழுதிய மாதிரியே இருக்கு!
    படமும் சூப்பர்!

    நமீதா நடந்தாலே நடனங்கள் தானே;
    _________________
    தங்கப் பதக்கம் சினிமாவில் கண்ணதாசன் எழுதி சிவாஜி நடித்து TMS பாடிய சோதனை மேல் சோதனை பாட்டு எனக்கு பிடிக்கும்; முக்கியமாக இந்த வரி!.
    உங்களுக்கு?.

    தானாடாவிட்டாலும் என் தசை ஆடுதுமா..!

    ReplyDelete
  6. ரசித்தேன். நாஞ்சில் சம்பத் மாதிரி திடீர் யு டர்ன் அடித்து ஜெயலலிதா பக்கம் போய்விட்டால் வேறு வார்த்தைகளில் எழுதவேண்டுமே.

    ReplyDelete
  7. நம்பள்கி வாழ்த்திற்கு நன்றி.

    ReplyDelete
  8. அடா! அடா! என்ன ஒரு கவித! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  9. ஹாஹா! நமீதாவுக்கு ஒரு கவிதை! கொடுத்து வைத்தவர்!!! எல்லாம் மச்சம் பாஸ் மச்சம்!

    ReplyDelete

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.