எப்படியும் ஒரு பத்து சீட்டாவது பிடிக்கோணும், இப்ப இருக்கிற நிலைமையில் சாத்தியமே இல்லை. மேலும் மதுரையில் ஒரு தனி அணியாக அப்பப்போ குரல் கொடுப்பது தலைமைக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. தலைமையின் திட்டத்திற்கு எதிராக செயல்படுவது என்று நிலைமை எல்லை மீறி போனதால் கட்சியிலிருந்து தாற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார் அஞ்சா நெஞ்சன்.
இது ஒன்றும் அவருக்குப் புதிதல்ல. போனமுறை நீக்கபட்ட பொழுது பின்னர் நடந்த சட்டமன்ற தேர்தலில் போட்டி வேட்பாளர்களை நிற்கவைத்து வெறும் சொற்ப வோட்டு வித்தியாசத்தில் அ.இ.அ.தி.மு.க வை கிட்டத்தட்ட பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற வைத்த பெருமை அஞ்சாநெஞ்சனை சாரும்.
இந்த முறை அவ்வாறு நடக்காதவாறு இருக்க ஏற்கனவே முப்பது மாவட்டங்களிலும் உள்ள அவரது ஆட்களுக்கு ஆப்பு வைத்தாகிவிட்டது. மேலும் தலைமை இந்த "தல தளபதி" சண்டைக்கு முற்றுபுள்ளி வைக்க வேண்டிய கட்டாயம், மேலும் அஞ்சா நெஞ்சனின் புதிய தலைமுறைப் பேட்டி கேப்டனுடன் கூட்டணி வைக்க வேட்டு வைப்பது போலுள்ளதால் அஞ்சா நெஞ்சனுக்கு காயடித்து விட்டார்.
போனமுறை அஞ்சா நெஞ்சனை விலக்கிய பொழுது கொந்தளித்த மதுரை இப்பொழுது அமைதி காக்கிறது. அஞ்சா நெஞ்சனுக்கு இப்பொழுது தன்னிலைமை தெரிந்திருக்கும். தளபதி தலைமை பதவிக்கு வருவது ஏறக்குறைய உறுதி செய்யப்பட்டுவிட்டது. அஞ்சா நெஞ்சன் இனி அரசியலில் இருந்து விலகி இருப்பது தொண்டர்களுக்கும், அதிகாலை நடைபழகும் அரசியல் பிரமுகர்களுக்கும் நல்லது.
கூட்டணி பலமமாக அமைந்தால் "கண்கள் பணித்து இதயம் புளித்தது" போன்ற அறிக்கைகள் வர சாத்தியங்கள் உள்ளன.
சிலபல தலைகள் உருளுமுன் "இதயம்புளிக்க" வேண்டுவோம்.

11 comments:
//சிலபல தலைகள் உருளுமுன் "இதயம்புளிக்க" வேண்டுவோம்.//
பிளிக்கட்டும்... பிளிக்கட்டும்...
அல்லாம் போட்டாச்சு... போட்டாச்சு...
நைனா வருகைக்கு நன்றி.
விரைவில் புளித்து விடும்...!
தனபாலன் வருகைக்கு நன்றி.
அஞ்சா நெஞ்சனா ,அஞ்சாத நெஞ்சனா ...பொறுத்து இருந்துதான் பார்க்கணும் !
த .ம 3
கதை வசனம் எழுதிக்கொண்டிருந்தவர்கள், இப்போது மக்களுக்கு சினிமா காட்டுகிறார்கள்! திரையில் வரும் சினிமாக்களை விட, இவை, சுவாரஸ்யமாகத்தான் இருக்கின்றன!
செல்லப்பா வருகைக்கு நன்றி.
அஞ்சா நெஞ்சனோ என்னவோ போங்க....மதுரை இப்ப கொஞ்சம் அமைதியா இருக்கற மாதிரி இருக்கு! புளிச்சுடுமோ? பார்ப்போம்!
வழக்கமான நையாண்டியுடன் சிறப்பான அலசல்! நன்றி!
துளசிதரன் வருகைக்கு நன்றி.
சுரேஷ் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி.
Post a Comment
படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.