Pages

Saturday, 18 January 2014

ஊடகங்களின் வெறியாட்டம்

சுனந்தா புஷ்கர் தரூரின் அகால மரணம் உறங்கிக்கிடந்த ஊடங்கங்களுக்கு தீனி போட்டுள்ளது. வழக்கம் போல விசாரணை, போஸ்ட்மார்ட்டம் எல்லாம் முடித்து  தீர்ப்பு வழங்குவதில் இந்திய ஊடகங்களுக்கு ஈடு இணை இல்லை.

சஷி தரூர் சர்ச்சைகளுக்கு பெயர் போனவர். இந்தியாவின் வெளியுறவு துறை அமைச்சர் ஆக இருந்த பொழுதே  சர்ச்சைகளில் சிக்கி பதவியை இழந்தார். அப்பொழுது ஐ.பி.எல் கொச்சின் அணி விவகாரத்தில் லலித் மோடியுடன் எற்பட்ட தகாராறில் சிக்கி சின்னாபின்னமாகி சீரழிந்தார். அப்பொழுது அவருடன் இணைத்து பேசப்பட்ட சுனந்தா புஷ்கரைதான் 2010ல் திருமணம் செய்துகொண்டார். இருவருக்குமே அது மூன்றாவது திருமணம்.

மூன்று நாட்களுக்கு முன்தான் சுனந்தா ட்விட்டரில் சஷி தரூருக்கும் பாகிஸ்தானை சேர்ந்த நிருபர் மேஹருக்கும் கள்ளத்தொடர்பு இருக்கிறது என்று அவர்களுக்கிடையே நடந்த சம்பாஷணைகளை புட்டு புட்டு வைத்தார். அடுத்த நாள் சசி தரூர் நாங்கள் எங்கள் மணவாழ்வில் மகிழ்ச்சியாக் உள்ளோம் என்று ஊடகங்களுக்கு பேட்டி அளித்தார். இது வெளியாகி இரண்டு நாட்களில் டில்லியில் உள்ள நட்சத்திர ஓட்டல் அறையில் பிணமாக கண்டெடுக்கப்பட்டார். அன்று காலை  ஆறு மணிவரையில் சசி கூட இருந்திருக்கிறார். பின்னர் காங்கிரஸ் கட்சியின் கூட்டத்தில் பங்கேற்க சென்றிருக்கிறார். அங்கு அவருக்கு மனைவியின் மரணம் பற்றி தெரிவித்திருக்கிறார்கள்.

வழக்கம் போல வடஇந்திய ஊடகங்கள் தங்களது கற்பனையை தட்டிவிட்டு பல கதைகள் புனைய ஆரம்பித்துவிட்டன. கொலை, தற்கொலை, இயற்கை மரணம் என்று அவர்களது என்ன ஓட்டத்தில் கற்பனை கதைகள் செய்ய ஆரம்பித்து விட்டன.  ஏன். டி. டி வியின் பர்க்கா டத்திற்கு இது போன்ற செய்திகள் கிடைத்தால் ஏதோ அவரே நேரில் பார்த்த மாதிரி அவரது கருத்தை எல்லோரும் ஏற்க வேண்டும் என்ற தோரணையில் செய்திகளை உண்மை பொய் என்று கலந்து கட்டி அடித்து விடுவார். இது போன்ற செய்திகள் கிடைத்தால் ஊடகங்கள் தங்களது வெறியாட்டங்களை தொடங்கிவிடுகின்றன.

எது நடக்கவேண்டுமோ அது நடந்தே தீரும் அதை சிரித்துக்கொண்டே ஏற்கிறேன் என்று மரணத்திற்கு முன் சுனந்தா கடைசியாக ட்வீட் செய்திருக்கிறார்.

தற்பொழுது சசி தரூர் நெஞ்சுவலியால்?? மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சசி தரூருக்கு பிரச்சினைகள் கூட பிறந்தது போல. மற்றுமொரு முறை அவரது அரசியல் வாழ்வு சந்தேக மேகங்கள் சூழ்ந்துள்ளது போல் தெரிகிறது.

ஜனநாயகத்தின் நான்காவது தூண் என்று சொல்லி ஊடகங்கள் அடிக்கும் லூட்டி தாங்கமுடியவில்லை.


13 comments:

  1. நிறைய... நிறைய... தவறான அவசரமான அனுமானங்கள் - பரபரப்பிற்காக + பணம்...!

    ReplyDelete
  2. தனபாலன் வருகைக்கு நன்றி.

    ReplyDelete
  3. வணக்கம்

    ஊடகங்களின் உழைப்புக்கு ஒரு வழி என்றுதான் சொல்ல வேண்டும்....இதை...
    நல்ல கருத்தாடல்... மிக்க பதிவு த.ம 2வது வாக்கு
    வாழ்த்துக்கள்..

    கவிதையாக என்பக்கம் வாருங்கள்(நெஞ்சைத் தழுவினாய் பின்பு என் கண்ணீரைத் தழுவினாய்)வாருங்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  4. ரூபன் வருகைக்கு நன்றி.

    தங்கள் தளத்திற்கு வருகிறேன்.

    ReplyDelete
  5. எல்லாம் பரபரப்பை விற்பனையாக்கி காசு பார்க்கின்றன! அருமையான கட்டுரை! நன்றி!

    ReplyDelete
  6. சுரேஷ் வருகைக்கு நன்றி.

    ReplyDelete
  7. இப்படித்தான் ஊடகங்கள் பிரபலங்களின் வாழ்க்கையை சீரழிக்கின்றன!

    ReplyDelete
  8. கவிப்ரியன் வருகைக்கு நன்றி.

    ReplyDelete
  9. எஸ்.ரா. வருகைக்கு நன்றி.

    ReplyDelete
  10. அந்தம்மா எப்படித்தான் செத்துச்சுன்னு ஒரு பயலும் சொல்ல மாட்டேன்கிறானே?

    ReplyDelete
  11. ஜனநாயகத்தின் நான்காவது தூண் மீடியா இல்லைவே இல்லை என்பதே உண்மை...!

    ReplyDelete
  12. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2014/02/thalir-suresh-day-6-part-2.html) சென்று பார்க்கவும்... நன்றி...

    ReplyDelete
  13. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2014/02/thalir-suresh-day-6-part-2.html) சென்று பார்க்கவும்... நன்றி...

    ReplyDelete

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.