Pages

Tuesday, 7 January 2014

கலக்கல் காக்டெயில்-134

வீட்டணியில் கூட்டணி

வரப்போகும் நாடாளுமன்ற தேர்தலை மனதில் கொண்டு எல்லா கட்சிகளும் இப்போது செயற்குழு, பொதுக்குழு என்று கூட்டங்களைக் கூட்டி கூட்டணி பற்றி பேசிக்கொண்டிருக்கின்றன. ஊடகங்களும் தற்பொழுது கொலை, கொள்ளை, கற்பழிப்பு, மின்வெட்டு, தல தளபதி போன்ற நாட்டின் அத்தியாவசிய தேவை செய்திகளை ஓரங்கட்டி கூட்டணி பற்றி  செய்திகள் வெளியிட்டுக் கொண்டு இருக்கிறார்கள்.

ஆளுங்கட்சி யாருடனும் கூட்டணி இல்லை தனித்தே போட்டி என்று அறிவித்துவிட்டு கூட்டணி நாடகங்களை வேடிக்கை பார்க்கிறது. பிரதான எதிர் கட்சியோ எங்கே அதிகம் கிடைக்கும் என்று எல்லோரிடமும் பேச்சு வார்த்தை நடத்துகிறது. சாதியக் கட்சியோ இரண்டு கழகங்களிடமும் கூட்டனி இல்லை, அந்தாள் வந்த நான் வரமாட்டேன் என்று தனித்து விடப்படுகிறது.

ஐயா கட்சியோ இருக்கிற ஒரு கட்சியையும் கழற்றி விட்டு கூட்டணிக்கு ஆளில்லாமல் இருக்கிறது. போததற்கு சொந்தங்களுக்குள் அடிதடி வேறு. இப்படியே போனால் குடும்பத்தில் உள்ளவர்களே ஒவ்வொரு அணியாகப் பிரிந்து பின்னர் அவர்களுடன் கூட்டணி வைத்துக்கொள்ள வேண்டியதுதான்.

பொங்கல் ரிலீஸ் 

பொங்கல் ரிலீசுக்கு வரவிருக்கும் படங்களில் இரண்டு நடிகர் ரசிகர்களுக்குமிடையே பேனர் கட்அவுட்டுகள் வைப்பதில் அடிதடி என்பதால் காவல் துறை அதற்கு தடை விதித்துள்ளதாக செய்திகள் வருகின்றன. அதைக் கண்டு இரண்டு நடிகர்களுமே கலக்கத்தில் உள்ளனராம். காவல்துறை இது தான் சமயம் என்று எல்லா கட்டவுட்டுகள், சுவரொட்டிகளுக்கு தடை விதித்தால் நல்லது. இப்பொழுது இந்த பிளக்ஸ் போர்டுகள், சுவரொட்டிகள், கட்டவுட்டுகள் என்று தெருக்குத் தெரு எழவு, பூப்பெய்தியது என்று எல்லாவற்றுக்குக்கும் போஸ்டர் அடித்து அலம்புகிறார்கள்.

பொங்கல் ரிலீஸ் வேளையில் எந்தப் படம் வரும் எது வராது என்ற குழப்பம் இன்னும் நீடிக்கிறது.

ரசித்த கவிதை 

கூட்டமாய் சொந்தங்கள் அருகில் இருந்தும் ...........


கூட்டமாய்ச் சொந்தங்கள் அருகில் இருப்பர்
கொடுப்பதை வாங்கிடப் பலர் வருவர்
நோட்டமாய்க் கவனித்து நேர்வழி சொல்லாது-கெட்டும்
நோயுற்ற மனதையே குத்திக் கிழிப்பர்

வாட்டமாய் வாழ்கையில் வந்தே உதவிடார்
வழித்துணை யாருமே வந்திட மாட்டார்
வாழ்க்கையில் துன்பமாய்  வாழ்ந்திடும் போதிலே-இருந்தும்
வசவுமாய்ப் பழியுமாய்ச் சொல்லத் தயங்கிடார்

கூட்டணி சேர்ந்து பழித்தே  பேசுவர்
கூடுதல் சுமையாய்த் தனித்தே வைப்பர்
பாட்டனும் பேரனைப் பார்க்க மறுப்பர்-ஆனாலும்
பாசமாய் இருப்பதாய் அனைவரும் நடிப்பர்

ஏழ்மையைப் போக்க யாருமே வந்திடார்
ஏசியும் பேசியும் இருக்கத் தவறிடார்
ஊரையும் நாட்டையும் உவமையாய்ச் சொல்லியே-வாழ்வில்
ஊழ்வினை என்றே பலரும் சொல்லிடார்

கேட்டதைக் கொடுத்து உதவி செய்தால்
கேளிக்கை பேசலை நிறுத்தி கொண்டால்
வாழ்கையின் தத்துவம் விளக்கிச் சொன்னால்-நிச்சயம்
வணங்கியே கடவுளாய்  நன்றி சொல்வார்

இயன்றதைக் கொடுத்து உதவி செய்து
எதிர்காலத் தேவைக்கு  வழி அமைத்து
முயன்றுமே விரைவில் முன்னுக்கு வர-உறவே
முடிந்தால் அனைவரும் உதவி செய்வீர்
                                                                
                                             நன்றி: கவியாழி கண்ணதாசன்
ஜொள்ளு 


 


20 comments:

  1. எனது இனிய நண்பரை சிறப்பித்தமைக்கு நன்றி....................

    ReplyDelete
  2. தனபாலன் வருகைக்கு நன்றி.

    ReplyDelete
  3. வழக்கம் போல் கலக்கல் காக்டெய்ல் கலக்கல்ஸ். கவியாழியின் கவிதைச் சிறப்பைச் சொல்லவும் வேண்டுமோ!! கவிஆழிதான்!!


    ReplyDelete
  4. தமிழ்மணம்+1

    ஹலோ! யார்பா இந்த பீப்பா? !. சாரி, பாப்பா!

    ReplyDelete
  5. கவிதை சிறப்பு! தேர்தல் இப்போதே களை கட்டிவிட்டது! நன்றி!

    ReplyDelete
  6. ஜொள்ளு ஓவரா இருக்கு. பேனர் கலாச்சாரத்துக்கு எப்ப முற்றுப் புள்ளின்னு தெரியல! கவியாழி அண்ணாவோடு கவிதையை போட்டதுக்கு நன்றி!

    ReplyDelete
  7. Thulasidharan V Thillaiakathu said...

    வழக்கம் போல் கலக்கல் காக்டெய்ல் கலக்கல்ஸ். கவியாழியின் கவிதைச் சிறப்பைச் சொல்லவும் வேண்டுமோ!! கவிஆழிதான்!!

    வருகைக்கு நன்றி.

    ReplyDelete
  8. \\நம்பள்கி said...

    தமிழ்மணம்+1

    ஹலோ! யார்பா இந்த பீப்பா? !. சாரி, பாப்பா!//

    வருகைக்கு நன்றி, பீப்பா??????

    ReplyDelete
  9. \\s suresh said...

    கவிதை சிறப்பு! தேர்தல் இப்போதே களை கட்டிவிட்டது! நன்றி!//

    சுரேஷ் வருகைக்கு நன்றி.

    ReplyDelete
  10. \\ராஜி said...

    ஜொள்ளு ஓவரா இருக்கு. பேனர் கலாச்சாரத்துக்கு எப்ப முற்றுப் புள்ளின்னு தெரியல! கவியாழி அண்ணாவோடு கவிதையை போட்டதுக்கு நன்றி!//

    ராஜி வருகைக்கு நன்றி.

    ReplyDelete
  11. ஜொள்ளு என்ற தலைப்பு தேவையில்லை !ரசித்த கவிதை என்ற தலைப்பே போதும் கவிதைக்கும் ,படத்திற்கும் !
    த.ம 3

    ReplyDelete
  12. என்னுடைய கவிதையை மீண்டும் ரசித்தமைக்கு நன்றிங்க கும்மாச்சி அவர்களே.இதுபோல் இன்னும் எழுத ஊக்கமாய் உள்ளது

    ReplyDelete
  13. கவியாழி கண்ணதாசன் வருகைக்கு நன்றி.

    ReplyDelete
  14. பகவான்ஜி வருகைக்கு நன்றி.

    ReplyDelete
  15. சொம்மா கல்க்கு கல்க்குன்னு கல்க்கிட்ட வாத்யாரே...

    அல்லாம் போட்டாச்சு... போட்டாச்சு...

    ReplyDelete
  16. நைனா நெம்ப தாங்க்ஸ்பா..........

    ReplyDelete
  17. அம்பி ,மன்னிச்சுக்கோ; இப்ப தான் ஓட்டுப் போட்டேன்; 7-வது வது ஒட்டு என வோட்டு.

    ஆகமொத்தம் மகுடம் ஏத்தியாச்சுபா!

    ReplyDelete
  18. நம்பள்கி ரொம்ப மகிழ்ச்சி.

    ReplyDelete
  19. கலக்கல் காக்டெய்ல்.

    ReplyDelete
  20. மாதேவி வருகைக்கு நன்றி.

    ReplyDelete

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.