Pages

Thursday, 2 January 2014

F**K அஜால் குஜால் அர்த்தங்கள் (18++)

சில ஆங்கில வார்த்தைகளின் நதிமூலம் ரிஷிமூலத்தை ஆராய்ந்தால் அவை வழிமொழியாக வந்த விதம் ஆச்சர்யமாக உள்ளது.

ஆங்கிலத்தில் "POSH" என்ற வார்த்தையை அதிகம் கேள்விப்பட்டிருப்போம். அந்த வார்த்தை தோன்றிய விதம் இப்படித்தான்.

கிழக்கு ஆசிய நாடுகளை ஒருகாலத்தில் ஆண்டு கொண்டிருந்த ஆங்கிலேயர்கள் கடல் வழியாகத்தான் இங்கிலாந்திலிருந்து நம் நாடுகளுக்கு வந்து கொண்டிருந்தார்கள்.

கப்பலில் தங்குவதற்கு உள்ள அறைகளில் பணக்காரர்கள் முதலில் நல்ல இடமாக பார்த்து தங்களுக்கு பதிவு செய்துவிடுவார்கள். கப்பலில் "PORT SIDE" "STAR BOARD SIDE" என்று இரு பக்கங்களையும் அழைப்பார்கள். அதாவது கப்பலின் மூக்கு "BOW" என்பது முன்புறம் "STERN" எனபது "PROPELLER" இருக்கும் பின்புறம். பின் புறத்திலிருந்து முன்புறத்தை நோக்கும் பொழுது இடது பக்கம் உள்ளது "PORT SIDE" வலது பக்கம் உள்ளது "STAR BOARD SIDE" .

இங்கிலாந்திலிருந்து  வரும் பொழுது "PORT SIDE" அறைகளையும், திரும்ப விடுமுறையில் வீட்டுக்கு செல்லும் பொழுது "STAR BOARD SIDE" அறைகளையும் நிறைய பணம் கொடுத்து புக் செய்து விடுவார்கள். ஏனெறால் அந்த அறைகளில் தங்கும் பொழுது தான்  பகல் நேரங்களில் நல்ல சூரிய ஒளி கிடைக்கும்.

PORT SIDE ONWARD STARBOARD SIDE HOME TRIP.

இதிலிருந்து தோன்றிய வார்த்தைதான் "POSH" பணக்காரர்களை குறிக்கும் சொல்.

அடுத்ததாக பெரும்பாலான ஆங்கிலப்படங்களில் உபயோகிக்கப்படும் நான்கெழுத்து வார்த்தை.

இந்த வார்த்தை கி.பி. பதினைந்தாம் நூற்றாண்டில் தோன்றியது. மேற்கத்திய நாடுகளில் ஜனத்தொகையை கட்டுப்படுத்த ஏதோ ஒரு அரசர் நாட்டில் தம்பதிகள் பிள்ளை பெற்றுக்கொள்ள வேண்டுமென்றால் அரசரின் ஒப்புதல் இருக்க வேண்டுமென்ற சட்டத்தை கொண்டு வந்தார். அதன் படி குழந்தை பெற்றுக்கொள்ள தம்பதிகள் மேஜிஸ்ட்ரேட்டிடம் ஒப்புதல் பெற்று பின்னர் மன்னரிடம் ஒப்புதல் பெற வேண்டும்.   அதாவது "FORNICATING UNDER  CONSENT OF THE KING", அவ்வாறு ஒப்புதல் பெற்ற காகிதத்தை  அந்த தம்பதிகள் வீட்டு வாசலில் ஒட்டி விட்டுதான் குஜால் வேலைகளை ஆரம்பிக்கலாம். அதிலிருந்து தோன்றியதுதான் இந்த அஜால் குஜால் நான்கெழுத்து  கெட்ட வார்த்தை.

அதனால்தான் அந்த காலத்து மன்னர்கள் மாறுவேடத்தில் "மிட்நைட் மசாலா" பார்க்க இரவில் நகர்வலம் வந்தார்களோ?


13 comments:

  1. இப்படி ஒன்று இருக்கோ...!

    ReplyDelete
  2. ஆமாம் பாஸ்.

    வருகைக்கு நன்றி.

    ReplyDelete
  3. அதே போன்று தான் TIPS என்பதும் To Improve Prompt Service என்பதன் சுருக்கம் என்று கேள்வி.

    ReplyDelete
  4. பாலாஜி வருகைக்கும் தகவலுக்கும் நன்றி.

    ReplyDelete
  5. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
  6. அருணா வருகைக்கு நன்றி.

    ReplyDelete

  7. வணக்கம்!

    புத்தாண்டு வாழ்த்துக்கள்

    பல்லாண்டு வாழ்க! படா்கின்ற புத்தாண்டை
    நல்லாண்டு வாழ்க நலஞ்சூடி! - வல்லதமிழ்ச்
    சொல்லாண்டு வாழ்க! சொந்தமென நம்மினத்தின்
    தொல்லாண்டு வாழ்க சுடா்ந்து!

    கவிஞா் கி. பாரதிதாசன்
    தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

    01.01.2014

    ReplyDelete
  8. வருகைக்கு நன்றி ஐயா.

    ReplyDelete
  9. கடைசில போட்ட still சூப்பர் சார்!

    ReplyDelete
  10. குமார் வருகைக்கு நன்றி.

    ReplyDelete
  11. அதனால்தான் அந்த காலத்து மன்னர்கள் மாறுவேடத்தில் "மிட்நைட் மசாலா" பார்க்க இரவில் நகர்வலம் வந்தார்களோ?\\ Our kings were not so cheap, their aim is to study themselves the ground reality of their kingdom because what they hear from their spies, ministers may not be always true.

    ReplyDelete
  12. ஜெயதேவ்தாஸ் முதலில் வருகைக்கு நன்றி.

    \\ Our kings were not so cheap, their aim is to study themselves the ground reality of their kingdom because what they hear from their spies, ministers may not be always true. //

    I agree with you.

    ReplyDelete
  13. TIPS - To Insure Prompt Service..

    During World war days, In Germany, people used to put money in front of the jar in the table to attract the service which later changed after meals...

    That is what I heard.

    ReplyDelete

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.