Thursday, 27 February 2014

கலக்கல் காக்டெயில்- 137

குனிந்தவர்களுக்கு எல்லாம் ஆ.... ஆப்புதான்

அ. தி.மு. க வின் நாடாளுமன்ற தேர்தலுக்கு நாற்பது வேட்பாளர்களையும் அம்மா அறிவித்துவிட்டார்கள். தற்போதைய எம். பி. க்கள் மூன்று பேரை தவிர மற்ற எல்லோரும் புது முகங்கள். இதில் ஓ.பி யும், நத்தம் விஸ்வநாதனும், செல்லூர் ராஜுவும் தங்களது மகன், மருமவ பிள்ளைகளுக்கு நாடாளு மன்றத்தில் துண்டு போட்டு வைத்திருந்தார்கள். அம்மா அறிவித்த பேர்களில் அவர்கள் ஆட்கள் இல்லை.

நாளை அமைச்சரவை மாற்றமாம். நால்வர் அணி என்று சொல்லப்படுகிற ஓ.பி, நத்தம், முனுசாமி, வைத்தியலிங்கம் ஆகியோரின் பதவி பறிக்கப்படலாம் என்ற வதந்தி உலவுகிறது.

ஓ.பி குனிந்த குனிவிற்கு நல்ல வைக்கிறாங்கப்பா ஆப்பு.

கேப்டன் கட்சிக்கு சங்குதான் போல......

கேப்டன் எந்த கட்சியுடன் கூட்டணி என்று சொல்லாமல்பா.ஜ.க, தி.மு.க மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு தண்ணி காட்டிக்கொண்டிருக்கிறார். தற்பொழுது ப.சி யும் கேப்டனும் சிங்கப்பூரில் ரகசியமாக சந்தித்தாக செய்திகள் வருகின்றன. மறுபுறம் சுதீஷ் பாரதிய ஜனதா கட்சியிடம் பேச்சு வார்த்தை நடத்திக்கொண்டிருக்கிறார்.

இந்த குழப்பங்களை எல்லாம் வாக்காளர்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அநேகமாக இந்த நாடாளுமன்றத் தேர்தலுக்குப்பின் இரண்டு மூன்று கட்சிகளுக்கு சங்குதான்போல.

ரசித்த கவிதை

ஓட்டம்

இனி
நிற்க நேரமில்லை
சோட்டாபீம்
ஓடத்தொடங்கிவிட்டான்

வழி நெடுகக்
காத்திருக்கும்
துப்பக்கிக்காரனை
பெரும் பூதத்தை
நெருப்பை
கழுகை
தலைக்கு மேலே
தொங்கும் பாம்பை
தாண்டிப் போயாக வேண்டும்

ஓட்டம் தொய்வுறும் வேளைகளில்
சில சலுகைகள்

நின்று நிதானிக்க அனுமதியில்லை

வென்றால்
அடுத்த கட்ட ஓட்டம்
தோற்றால்
ஆரம்பத்திலிருந்து மறுபடியும்

இவ்வாறே
அமைந்திருக்கின்றன
எல்லா விளையாட்டுகளும்
சமயத்தில்
வாழ்க்கை உள்பட

சோட்டா பீம் ஓடத் தொடங்குகிறான்
----------------------------------சுஜாதா செல்வராஜ் 

ஜொள்ளு 




Follow kummachi on Twitter

Post Comment

10 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

(பதிவில் உள்ள) எல்லா விளையாட்டுகளும் ரசிக்க வைத்தன...

கும்மாச்சி said...

தனபாலன் வருகைக்கு நன்றி

SNR.தேவதாஸ் said...

என்ன வெகு நாட்களாக தங்களது பதிவு இல்லை.
பாராளுமன்றத் தேர்தலுக்கு காங்கிரசில் விருப்ப மனுக் கொடுக்கும் பணியில் இருந்தீர்களோ?
வாழ்க வளமுடன்
கொச்சின் தேவதாஸ்

கும்மாச்சி said...

தேவதாஸ் வருகைக்கு நன்றி. விடுமுறையில் நாட்டிற்கு சென்று வந்ததால் பதிவுகள் எழுத முடியவில்லை.

நம்பள்கி said...

tamilmanam+3

Unknown said...

சோக்கா கீதுபா காக்குடெய்லு...! இன்னாபா ரெம்ப நாளாச்சு நம்ப கடையாண்ட வந்து...?

அல்லாம் போட்டாச்சு... போட்டாச்சு...!

கும்மாச்சி said...

நம்பள்கி வருகைக்கு நன்றி.

கும்மாச்சி said...

முட்டாநைனா வருகைக்கு நன்றி. கடையாண்ட வரேன்பா, ஊருக்கு போய்வந்ததுல பிஸி ஆயிட்டேன்பா.

Thulasidharan V Thillaiakathu said...

காக்டெயில் சூப்பர் பா. கவிதை ரொம்பவே அருமை! யதார்த்தம்!

”தளிர் சுரேஷ்” said...

கவிதை சூப்பர்! கேப்டன் போடும் ஆட்டம் கட்சிகளுக்கு எரிச்சல் வருகிறதோ இல்லையோ நமக்கு வருகிறது! நன்றி!

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.