கிட்டத்தட்ட ஐந்து வாரங்கள் விடுமுறையில் "நம் தமிழ் கூறும் நல்லுலகத்திற்கு" சென்று வந்தேன். முதலில் மருமகனின் கல்யாணத்திற்காக குற்றாலம். திருநெல்வேலி மாவட்டத்திற்கு முதல் முறையாக செல்கிறேன். திருநெல்வேலியின் பசுமை வயல்கள் நமக்கு பட்டிகாட்டான் யானையை பார்ப்பது போல. சென்னையிலும் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் பெரும்பான்மையான நாட்களை கழிக்கும் நமக்கு பசுமைக்கு அர்த்தம் தெரியாது. குற்றாலம் ஐந்தருவியிலும் மற்றும் பிரதான அருவியிலும் ஷயரோகக்காரன் உச்சா மாதிரி தண்ணீர் வருகிறது. நாம் போன நேரம் அப்படி.
சென்னையில் தேர்தல் வருவதற்கான அறிகுறிகள் சுவரெங்கும் தெரிகின்றன. அம்மாவின் அல்லக்கைகள் வைத்திருக்கும் பிளக்ஸ் போர்டுகளும், மற்றும் சுவரொட்டிகளும் அம்மாவை ஏகத்திற்கு ஏற்றிவிடுகின்றன. நாளைய பிரதமரே, வருங்கால பாரதமே, மற்றும் அம்மா அம்மா என்று அம்மா புகழ் பாடுகின்றன. இதில் "பாசறை தாயே" என்று ஒரு ப்ளக்ஸ் போர்டு. இதற்கு பொருள் விளங்கவில்லை. எனக்கு தெரிந்தவரையில் "பாசறை" என்றால் கிடங்கு என்று பொருள். தமிழ் பண்டிதர்களிடம் கேட்டால் இதற்கு சற்று விரிவான விளக்கம் கிடைக்கும். அடுத்தது "நிரந்தர பாரத பிரதமரே" என்று ஒரு சுவரொட்டி. அம்மா நாற்பது வேட்பாளர்களையும் அறிவித்த பின் தெரிகிறது இந்த சுவரொட்டிகளின் நோக்கம்.
ஐயா அல்லக்கைகளோ தளபதிக்கு நன்றாக கொடி பிடிக்கின்றனர். அங்கும் ஏகத்திற்கு சொம்படிக்கிறார்கள். தளபதிக்கு அடிக்கும் சொம்பின் உச்சம் "கலைஞரின் முகவரியே". இதன் அர்த்தம் யாருக்கு புரியுமோ தெரியவில்லை. உண்மையில் கலைஞருக்கு நன்றாகவே புரியும். சமீபத்தில் நடந்த நேர்காணலில் சொம்படித்தவர் சென்றிருந்தால் வறுத்தெடுத்திருப்பார்.
மற்றபடி சென்னை டாஸ்மாக் புண்ணியத்தில் நடை பாதை ஞானிகள் நித்திரையில் நன்றாகவே விழித்திருக்கிறது.

11 comments:
ப்ளக்ஸ் போர்டினால் எத்தனை சிரமங்கள்...
So, Back to Form நு சொல்லுங்க!ரொம்ப நல்ல அருமையான ஊருக்குப் போய் வந்திருக்கீங்க! திருநெல்வேலி அல்வா? அதை ஏன் கேக்கறீங்க! சென்னைல நடைபாதை பாலங்கள கூட விட மாட்டாங்க! எல்லா தலைவர்களும் அதுல வித விதமான போஸ் கொடுத்கிட்டு இருப்பாங்க!
“உச்சா மாதிரி தண்ணீர் வருகிறது.“ வித்தியபசமான கற்பனை!
“பாசறை“ - என்றால்.... போர் நிமிர்த்தமாக அங்கே கட்டப்படும் இடத்தின் பெயர்.
பாசறை தாயே என்றால்......?
தெரியவில்லை கும்மாச்சி அண்ணா.
அரசியல் தந்திரங்களில் கலைஞருக்கு குருவாக ஜெ மாறிக் கொண்டிருக்கின்றார்.
துளசிதரன் வருகைக்கு நன்றி. back to form ஆ எனபது உங்களது ஆதரவில் தான் தெரியும். ஐந்து வாரங்கள் பதிவுலகம் பக்கம் வராததால் இழந்தது நிறைய, எல்லோருடைய பதிவுகளையும் தேடிக் கண்டுபிடித்து படிக்க வேண்டும்.
அருணா வருகைக்கு நன்றி. புகழ்ச்சியில் என்ன செய்வது என்று தெரியாமல் தொண்டர்கள் தவித்துகொண்டிருக்கிறார்கள்.
பாசறை விளக்கத்திற்கு நன்றி.
ஜோதிஜி உங்கள் கருத்து உண்மை.
இந்த கூத்தை எல்லாம் நீங்கள் வசிக்கும் நாட்டில் பார்க்க முடியுமா ?இதுக்காக நாங்க பெருமை படுகிறோம் கும்மாச்சி ,பெருமை படுகிறோம் !
த ம 1
பகவான்ஜி வருகைக்கு நன்றி.
காசா பணமா.........வார்த்தைதானே, அள்ளி விடலாம், அம்மாவின் கடைக்கண் பார்வை விழுந்தால் போதும், பணம் காசு கொட்டும்!!
ஜெயதேவ்தாஸ் வருகைக்கு நன்றி.
Post a Comment
படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.