Pages

Monday, 10 March 2014

நாற்பது நாற்பது.................கவுஜ


தேர்தல் வருது தேர்தல் வருது
நாடாளுமன்றத் தேர்தல் வருது

அம்மாவுக்கு நாற்பது
ஐயாவுக்கு முப்பது
கேப்டனுக்கு இருபது
மருத்துவருக்கு பத்து
வைகோவுக்கு ஐந்து
தாமரைக்கு நாலு
அரிவாளுக்கு இரண்டு
கூட்டணிக்கு ஒன்று
கூடாத அணிக்கும் ஒன்று

தொண்டருக்கு கட்டிங் 
குண்டருக்கும் கட்டிங் 
கேப்டனுக்கு கட்டிங்
கேனையனுக்கும் கட்டிங்

வாக்காளருக்கு ஆயிரம்
குடிமகனுக்கு க்வாட்டர்


வாக்குறுதிகள் வண்ணம் பூசி
வலம் வரும் நம் நாட்டில்  
கொள்கைகள் கொடிகட்டி
கோட்டை நடுவே பறந்திட

தேர்தல் முடிந்த பின்
கூட்டணிகள் மாறும்
நாற்பதுவும் விலைபேசி
நாடாளுமன்றம் ஏறும்
வாக்களித்த மக்களுக்கு
வாய்க்கரிசி போடும்.







16 comments:

  1. இதே தான் நடக்கிறது...! மாறாதோ...?

    ReplyDelete
  2. கலக்கல் கவுஜ! ஐந்தாண்டுக்கு ஒருமுறை நடக்கும் கூத்து! நாம்தான் ராஜபார்ட் என்றாலும் ராஜபார்ட்டை இப்போது யார் மதிக்கிறார்கள்?

    ReplyDelete
  3. தனபாலன் வருகைக்கு நன்றி.

    ReplyDelete
  4. நாற்பதும் நமதே ,நாறுவதும் நமதேவா ?
    த ம 3

    ReplyDelete
  5. பகவான்ஜி வருகைக்கு நன்றி.

    ReplyDelete
  6. கவுஜ நல்லா கீது அண்ணாத்த.
    அப்போ.... ஆத்தாவுக்குத் தான் மொதோ எடமா...?
    சர்தான்.
    த.ம.5

    ReplyDelete
  7. வாக்களித்த மக்களுக்கு
    வாய்க்கரிசி போடும்.//

    ஹ ஹா ஹா ஹா சூப்பரு....!

    ReplyDelete
  8. சூப்பர் கவுஜ! வாக்களித்த மக்களுக்கு
    வாய்க்கரிசி போடும்.//

    ஓட்டு போடற நமக்கு வேட்டுதான் அப்படிங்கறீங்க! சரிதான் இதுதானே நடக்குது இங்க! ஏமாறும் மக்கள் இருக்கும்வரை ஏமாற்றத்தானே செய்வார்கள்!

    ReplyDelete
  9. தேங்க்ஸ் அருணா தங்கச்சி, ஐயாவா அம்மாவுக்கு மொதோ இடமா அல்லாம் தெரியவரும்.

    ReplyDelete
  10. மனோ பாராட்டிற்கு நன்றி.

    ReplyDelete
  11. துளசிதரன் வருகைக்கு நன்றி.

    ReplyDelete
  12. ராஜி வருகைக்கு நன்றி.

    ReplyDelete
  13. kalakkal kavitha.. - Natarajan, Singapore

    ReplyDelete
  14. உள்ளக் கிடக்கையில் உள்ள உணர்வே
    வீறு கொண்டெழுந்து வந்ததிங்கே அருமையான
    சொற் பிரோயகத்தைத் தாங்கி அர்ஜுனன் விட்ட
    அம்பாக தேருதல் முடிவு !! மாற்றுக் கருத்து ஏதுமின்றி
    மனதார வாழ்த்துகின்றேன் சகோதரா இன்னும்
    இன்னும் இது போன்ற புரட்சிக் கவிதைகள் உங்களிடம்
    இருந்து வர வேண்டும் .த .ம 7

    ReplyDelete
  15. வருகைக்கும், பாராட்டிற்கும் நன்றி சகோதரி.

    ReplyDelete

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.