Pages

Friday, 28 March 2014

தொண்டு செய்யும் தொண்டா..........கவுஜ

தலைமைக்கு சொம்படிப்பாய்
தலைவனு(வி)க்கு தீக்குளிப்பாய்
கார் கதவை திறந்து வைப்பாய்
காலினிலே விழுந்திடுவாய்
கண்ணசைவில் கத்தி எடுப்பாய்
காசுக்கு கழுத்தறுப்பாய்
சைக்கிள் செயின் சுற்றிடுவாய்
சிறையினிலே அடைபடுவாய்
சுவரொட்டி வைத்திடுவாய்
வீடதனை துறந்திடுவாய்
பெண்டாட்டியை மறந்திடுவாய்
குழந்தைகளை குமுறிடுவாய்
பெற்றவர்களை பிழிந்தெடுப்பாய்
உற்றவர்களை துறந்திடுவாய்
ஓட்டுக்கு கூவிடுவாய்
வெயிலிலே காய்ந்திடுவாய்
க்வாட்டருக்கு கால் பிடிப்பாய்
தோரணங்கள் கட்டிடுவாய்
தொண்டனென்று பேரேடுப்பாய்
தவறாமல் சீட் கேட்பாய்
கிடைக்காமல் புலம்பிடுவாய்
தலைவனின் சந்ததிக்கு
தலைமேல் குடை பிடிப்பாய்
தொண்டு செய்ய பிறவி எடுத்தாய்
தொண்டனாகவே இறந்திடுவாய்


11 comments:

  1. சரியாகவும் முடித்துள்ளீர்கள்...

    உண்மைகள்...

    ReplyDelete
  2. தனபாலன் பாராட்டிற்கு நன்றி.

    ReplyDelete
  3. கலக்கல்... எனக்கும் கொஞ்சம் சொல்லிக் கொடுங்க...

    ReplyDelete
  4. கலக்கல்... எனக்கும் கொஞ்சம் சொல்லிக் கொடுங்க...

    ReplyDelete
  5. வருகைக்கும் பாராட்டிற்கும் நன்றி.

    ReplyDelete
  6. ஆஹா ..கூலிக்கு மாரடிக்கும் கூட்டம் இவர்கள் இப்படித் தான்
    இருப்பார்கள் என்று மிக அழகாகவும் ஆழமாகவும் சிந்தித்து
    வடித்த நற் கவிதைக்குப் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்
    சகோதரா .த .ம.3

    ReplyDelete
  7. வருகைக்கும் பாராட்டிற்கும் நன்றி சகோதரி.

    ReplyDelete
  8. தொண்டனின் இலக்கணம் அருமை! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  9. சுரேஷ் வருகைக்கு நன்றி.

    ReplyDelete
  10. இயைபுடன் கூடிய கருத்தான கவிதை.

    சூப்பர் கும்மாச்சி அண்ணா.

    ReplyDelete

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.