Pages

Monday, 31 March 2014

நான் ஒளரல ஓரளலங்கண்ணா...சொல்றாங்க

ராஜபக்சேவிற்கு தைர்யம் இருந்தால் எங்கள் அம்மாமுன்னே வந்து நிற்க சொல்லுங்க...........அதே மாதிரி மோடிக்கும் சொல்றேன், எங்கம்மாதான் பிரதமர் அதுல எதாவது வில்லங்கத்துக்கு வந்தே மந்திரிகளையே எந்திரின்னு சொல்ற எங்கம்மா உன்னையும் கட்சியை விட்டு நீக்கிடுவார்கள் ஜாக்கிரதை...................அ.தி.மு.க தேர்தல் பிரச்சாரத்தில் சிங்கமுத்து.

அன்பான மீனவ நண்பர்களே, நீங்க படகுல போய் மீன் பிடிக்கிறதுனாலேதானே சிலோன் ஆர்மிக்காரன் உங்களை அடிக்கிறான் அதுக்கும் எங்கம்மா ஒரு திட்டம் வச்சிருக்காங்க. படகுக்கு பதிலா உங்களுக்கு ஹெலிகாப்டர் தரப்போறாங்க.  எங்கள் அம்மா வெற்றி பெற்றால் மீனவர்கள் இனி ஹெலிகாப்டரில் சென்று மீன் பிடிக்கலாம்.....அ.தி.மு.க தேர்தல் பிரச்சாரத்தில் நடிகை  விந்தியா.

நான் இன்னும் தி.மு.க. காரன்தான்.........இந்த தேர்தலில் தி.மு.க படுதோல்வி அடைந்து நான்காவது இடத்திற்கு தள்ள என்னுடைய தொண்டர்கள் எல்லோரும் உழைக்கவேண்டும்.....................மு.க.அழகிரி.

நன்றி மறந்தவர்கள் யாராக இருந்தாலும் மன்னிக்க மாட்டேன். அது அண்ணனாக இருந்தாலும், தம்பியாக இருந்தாலும் அல்லது மகனாக இருந்தாலும் கழகம் மன்னிக்காது. எனக்கு கொள்கைதான் முக்கியம் குழந்தை குட்டிகள் அல்ல................சிந்தாதிரிப்பேட்டை கூட்டத்தில் கலைஞர்.

ஜெயலலிதா மக்களுக்கு கொடுத்த ஆடு, மாடுகள் குட்டிகள் போடும். அதனால் ஏழைகளின் வாழ்வாதாரம் உயரும். ஆனால் கருணாநிதி கொடுத்த டி.வி. குட்டி போடுமா? ரிப்பேர் தான் ஆகும்...........தேர்தல் பிரச்சாரத்தில் ராமராஜன் 
காங்கிரஸ் ஆதரவு என்று கருணாநிதி முன்பே சொல்லியிருந்தால் தேர்தல் களம் மாறியிருக்கும்.................ப. சிதம்பரம்.

ஜெயலலிதா அச்சம் என்பது மடமையடா என்ற பாடலை பாட வேண்டாம்: ப.சிதம்பரம் #எலக்சன்ல நிற்க பயந்துட்டு போற உங்களப் பத்தி அவங்க பாடலை..பயப்படாதீக.----------ட்விட்டரில்  படித்தது.

இன்னும் மூன்று மாதத்தில் தமிழகம் மின்மிகை மாநிலமாக மாறிவிடும், எங்களுக்கு ஒட்டு போட்டால் இந்தியா ஒளிரும், தமிழகம் மிளிரும் செய்வீர்களா? செய்வீர்களா?--------------ஜெயலலிதா.
தமிழகத்தில் காங்கிரஸ் காலூன்ற ஒரு வாய்ப்புக் கிடைத்துள்ளது..........தமிழககாங்கிரஸ் தல......ஞானதேசிகன்.
நம்ம கேப்டனையே மிஞ்சுடுவாய்ங்கப்போல.........




16 comments:

  1. // குழந்தை குட்டிகள் அல்ல // என்பது தான் சிறந்த நகைச்சுவை...!

    ReplyDelete
  2. செம அருமை !!!! தேர்தல் முடியும் வரை தினம் தினம் காமெடி தான்...

    ReplyDelete
  3. தனபாலன் வருகைக்கு நன்றி.

    ReplyDelete
  4. விமல்ராஜ் வருகைக்கு நன்றி.

    ReplyDelete
  5. செம எண்டர்டெயின்மெண்ட்! பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
  6. சுரேஷ் வருகைக்கு நன்றி.

    ReplyDelete
  7. நம்மைப் பத்தி நாமே பில்டப் குடுக்கலைன்னா வேற யாருதான் குடுப்பாங்க? -இது தான் பாலிசி...................

    ReplyDelete
  8. ஜெயதேவ் வருகைக்கு நன்றி.

    ReplyDelete
  9. தேர்தல் முடியறவரை நகைச்சுவைக்கு பஞ்சம் இருக்காது

    ReplyDelete
  10. அவங்கவங்க ஔரியதை அழகாக சொல்லி இருக்கிறீர்கள் கும்மாச்சி அண்ணா.

    ReplyDelete
  11. முரளிதரன் வருகைக்கு நன்றி.

    ReplyDelete
  12. வருகைக்கு நன்றி அருணா........

    ReplyDelete
  13. இன்னும் ஒரு மாசத்துக்கு காமெடிச் சேனல் எதும் பார்க்க வேணாம். நியூஸ் சேனல் பார்த்தாலே போதும் வயிறு குலுங்க சிரிக்கலாம்.

    ReplyDelete
  14. இதையும் சேத்துக்குங்க

    நான் பிரதமரானல் இந்தியா ஐந்தே வருடங்களில் வல்லரசு நாடாகிவிடும். எனது கட்சியிலும் பாராளுமன்றத்திலும் எல்லோரும் எனது பெயரைச் சொல்லத் தொடங்குவார்கள் -
    கட்சித் தலைவர்

    கோபாலன்

    ReplyDelete
  15. ராஜி உண்மை செம காமெடிதான்..........

    ReplyDelete
  16. கோபாலன் வருகைக்கு நன்றி.

    ReplyDelete

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.