Pages

Tuesday, 22 April 2014

டீ வித் முனியம்மா பார்ட்-6

யோவ் மீச ஒரு டீபோடு

இன்னா லிங்கசாரு நேரத்தே வன்னு, முனியம்மை  இன்னும் வந்தில்லா.......

டேய் மீச எனிக்கி தெரியாதா, அம்மை கிம்மன்னு..............

நாடார் வியாவாரம் எப்புடி?

இன்னா வியாவாராம் எலிக்சன் டைமு அல்லாம் டாஸ்மாக்கான்டதான் நிக்குது.

தா முனியம்மாவும் பயமும் வந்திட்டாக...........

டேய் மீச முனியம்மாக்கு ஸ்டாங்கா ஒரு டீ,வயக்கம்போல பயத்துக்கு சைனா டீ.

இன்னா முனிம்மா எலிக்சன் நிலவரம் எப்படிகீது?

இன்னா பாய் இன்னியோட மைக்கு வச்சுகினு கூவறத நிப்பாட்டிடுவானுங்க.......அப்பாலதான் கீது இந்த வட்டம் மாவட்டம் அல்லாம் போசொல்ல வரசொல்ல கால கைய பிடிப்ப்பானுங்கோ.........

நாடார் டாஸ்மாக்க மூணு நாளைக்கி மூடிகிரானுங்களே நம்ம ஜனம் இன்னா செயவானுங்கோ?

அடப்போ லிங்கம், அதுக்குதான் மூணு நாலு சரக்க கோணியில அள்ளி முடிச்சிகினானுங்க அல்லாரும்.................ஒரே நாள்ல வியாவாரம் முன்னூறு கோடியாம்............

அப்படியா சொல்ற முனியம்மா............

அஹான் பாய். மவனுங்க சோறு துண்ணாம வேணா இருப்பானுங்க சரக்கு இல்லாம ஆவாது...........இவனுக எல்லாம் தாய்ப்பால மறக்க சொல்லவே குடிக்க ஆரம்பிச்ச்சவனுங்க..................

அத்தவுடு முனியம்மா அம்மா நாப்பதும் நமதேன்னு கூவிகினு இருந்திச்சே அடிச்சிடுமா.............

இன்னா நாடார் அப்படி சொல்லிகின, பயம் கூட அம்மா நாப்பது அடிச்சி பிரதமர் ஆகி டாஸ்மாக்கு, அம்மா இட்லி, சாம்பார் சோறு  அல்லாம் நாடு முயுக்க குடுக்கும்னு கீறான்........இப்போ பதினைந்துக்கே அம்மாக்கு டப்பா டான்சு ஆடுதாம்.........இதுல சந்துல சிந்து பாடுறவரு ஐயாதாணு சொல்லிகிரானுங்க.........


கரூர்ல அல்லாருக்கும் வேட்டி சேலை அம்மா கட்சிக்காரனுங்க வீடு வீடா போய் கொடுக்குரானுங்களே மெய்யாலுமா?

ஆமாம் பாய், அங்கன தம்பிதுரை நிக்குறாரு, அவரு போனதபா கெலிச்ச பொறவு அந்தப்பக்கமே போவலையாம், அதால ஜனம் காண்டாகீதான். அம்மா பிரச்சாரத்துக்கு போனப்போ அல்லக்கைங்கள சுலுக்கு எடுத்துகீறாங்க.  இப்படியே வுட்டா............சின்னசாமி பூந்துருவாறுன்னு அம்மாக்கு காப்ரா ஆவுதான்.............அதான் அம்மா இந்தாண்ட வர சொல்ல துட்டு, வேட்டி  சேலன்னு வுடுரானுங்கோ.

ஆனா ஜனம் இப்ப எல்லாம் உசாராயிட்டானுங்க...........ஓட்டுக்கு ஆயிரம் ரூவா கொடுத்தா.............கணுக்கு போட்டு நாளிக்கி அம்பத்தினாலு காசு அஆவுது............த்தா...........சிக்னலுல  நிக்கிற பிச்சைக்காரன் இத்தபோல பத்து பங்கு அரை நிமிட்ல சம்பாரிப்பான்..........

இந்த முறை சினிமாகாரானுங்க ஜனநாயக தொண்டு ஆட்டல போல கீது..

அஹான் நாடாறு உசாராயிட்டானுங்க.......ஏதோ மார்க்கெட்டு போனவளுங்கதான் மைக்கு பிடிச்சிகினு கூவராளுங்க............அப்பாலிக்க அங்க கைய வச்சான் இங்க கைய வச்சான்னு பொலம்புவாளுங்க........

முனியம்மா சினிமா நூசு இன்னா............

ஏதோ ரெண்டு போனியாவாத டைரக்டரும் ஒரு பிகரும் காணாலாம் கட்டப்போவுதாம்.................

அப்படியா யாரு முனியம்மா?

டேய் பயம் படம் காட்டுறேன் நீயா பாத்துக்க.............









8 comments:

  1. Very nice dialogues.thanks.

    ReplyDelete
  2. Very nice dialogues. Interesting. Thanks

    ReplyDelete
  3. வருகைக்கு நன்றி சார்.

    ReplyDelete
  4. Very nice dialogues.thanks.

    ReplyDelete
  5. கும்மாச்சி!, சூப்பரா கீதுப்பா. கீப் அப்பூ! நெறைய எளுதனும்.சரியா.
    ஆமா, முனீம்மா கணக்கு என்னா சொல்லுது எலீக்சன் முடுவு பத்தீ?.
    -பொன்சாமி.

    ReplyDelete

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.