கோச்சடையான் வெளிநாடுகளில் போன வியாழக்கிழமையே வெளிவந்து விட்டது. அப்பொழுது கடல் நடுவே ஆணி பிடுங்கிக்கொண்டிருந்ததால் பார்க்க முடியவில்லை. இரண்டு வாரம் விடுமுறையில் நாட்டிற்கு செல்வதால் அங்கு பார்த்துக்கொள்ளலாம் என்று இருந்து விட்டேன்.
இன்று சாந்தம் திரையரங்கில் படத்தை ரஜினி ரசிகர் கூட்டத்தோடு பார்க்க முடிந்தது.
ஏற்கனவே கோச்சடையான் பற்றி நம் பதிவர் பெருமக்கள் ஏகத்திற்கும் விமர்சனம் எழுதிவிட்டனர் ஆதலால் புதிதாக எழுத ஒன்றும் இல்லை.
படத்தை பற்றிய எதிர்மறை விமர்சனங்கள் படம் வெளிவரும் முன்பே அவரவர்கள் குத்தி குத்தி கிழித்து விட்டதால் படம் "பூட்ட கேசு" என்றுதான் நினைத்திருந்தோம். ஆனால் படம் பார்த்த பொழுது ஒரு புது அனுபவம்.
படத்தில் அனிமேஷனில் நிறைய குறைகள் இருந்தாலும் படம் நல்ல திரைக்கதை, ரஜினியின் காந்தக்குரல், ஏ.ஆர். ரஹ்மானின் இசையில் நம்மை கட்டிப்போடுகிறது.
இது பொம்மை படம் என்று சொன்னவர்களுக்கு, படத்தை கட்டாயம் ஒரு முறை பாருங்கள், நிச்சயம் ரசிப்பீர்கள்.
இந்திய திரைப்பட வரலாற்றில் புதிய தொழிநுட்பத்தில் முதல் சோதனை முயற்சி. படம் முடிந்த பின்னும் கடைசியில் படம் எவ்வாறு உருவானது என்று காண்பிப்பதை மக்கள் கடைசிவரை பார்த்துவிட்டு போவதிலிருந்து இது இந்த புதிய தொழில்நுட்பத்திற்கு கிடைத்த வெற்றி என்று சொல்லல்லாம்.