Friday, 2 May 2014

கலக்கல் காக்டெயில்-144

இரண்டு மாநிலங்கள் (Two states)

சமீபத்தில் வந்திருக்கும் இந்திப் படம். ட்ரெய்லரிலேயே முத்தக் காட்சிகள் வைத்து ஒரு பரபரப்பை ஏற்படுத்திய படம். சேத்தன் பகத்தின் Two states என்ற நாவல் தான் படமாக்கப்பட்டுள்ளது.

நாயகன் கிருஷ் (அர்ஜுன் கபூர்) அனன்யா (அலியா பட்) எம்.பி.எ ஒன்றாக படித்துக் கொண்டிருக்கும் பொழுது லவ்வுகிறார்கள். கிருஷ் ஒரு பஞ்சாபி, அனன்யா நம்மூரு பெண். இவர்கள் கல்யாணம் செய்துகொள்ள முடிவு செய்யும் பொழுது இரு வீட்டாரின் வெவ்வேரு மாநில கலாச்சார பிரச்சினைகளால் எதிர்ப்பு கிளம்ப, எப்படி இரு வீட்டாரையும் சம்மதிக்க வைத்து ஒன்று சேருகிறார்கள் என்பதே கதை களம். கதை களம் ஒன்றும் புதியதல்ல நாம் ஏற்கனவே சந்தித்ததுதான். இருந்தாலும் மிகவும் சொற்பமான கேரக்டர்களை வைத்து மிகவும் அழகாகவே சொல்லப்பட்ட கதை. கிரிஷின் அம்மாவாக அம்ரீதா சிங்கும்,அனன்யாவின்அம்மாவாக ரேவதியும்கொடுத்த பாத்திரத்தை நன்றாகவே செய்திருக்கிறார்கள். கிரிஷின் அப்பாவாக வரும் ரோநிட் ராய் படம் முழுவதும் இறுகிய முகத்துடன் வந்து கடைசியில் நெகிழ வைக்கிறார்.

இயக்குனர் அபிஷேக் வர்மன் நன்றாகவே செய்திருக்கிறார்.சென்னை காட்சிகளை சென்னையிலேயே எடுத்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். படத்தில் காட்டப்படும் மயிலாப்பூர் ஏரியா புனே ராஸ்தா பேட் ஏரியாவை வைத்து செட் அமைத்ததுபோல் தோன்றுகிறது.

படத்தின் நாயகி அலியா பட் செம க்யூட்.

வெகு நாட்களுக்கு பிறகு நான் ரசித்த இந்தி படம்.

கொடநாட்டில் கோயில் கொண்ட தாயே...........

தேர்தலில் அம்மா பறந்து பறந்து பிரச்சாரம் செய்த அலுப்பு நீங்க கொடநாட்டில் எழுந்தருளி சேவை சாதிக்கிறார்!!!!!!!!!!!!!.

தேர்தல் முடிந்த கையோடு நேற்று முதல் சென்னையில் சுழற்சி முறையில் மின்வெட்டு அமல்படுத்தப்பட்டது. கத்திரி வெயில் துவங்கும் முன்பு அம்மா எல்லோருக்கும் கொடுத்த அன்பு பரிசு.

அடுத்ததாக தண்ணீர் பஞ்சம் தொடங்கப்போகிறது. இனி டேங்கர் லாரி அடிக்கும் ரத்தத்தின் ரத்தங்கள் காட்டில்மழைதான். போன வருடம்  வெயில் காலம் முடிந்தவுடன் எட்டாயிரம் லிட்டர் தண்ணீருக்கு மூவாயிரம் ரூபாய் வரைக் கேட்டார்கள், அதற்கும் மூன்று நாட்கள் காத்திருக்க வேண்டும். இந்த தண்ணி லாரிகள் பழைய மகாபலிபுரம் தெருவில் உள்ள ஐ.டி. கம்பனிகளுக்கு தண்ணி அடிப்பதில் ரொம்பவும் பிசி ஆக இருக்கிறார்கள். ஆதலால் இந்த வருடம் இன்னும் அதிகம் கேட்க வாய்ப்புள்ளது.

இப்பொழுது அம்மா கொடநாட்டு பக்கம் போனதால் மற்ற மந்திரி அல்லக்கைகள் தலைமை செயலகம் பக்கம் வருவதில்லையாம். தலைமை செயலகம் இப்பொழுது ஆள் நடமாட்டம் இல்லாமல் பெருச்சாளிகள் நடமாட்டம் அதிகமாக உள்ளதாம். 

அம்மா மலையேறிய தாயே விரைவில் மலை இறங்கு.

ரசித்த கவிதை 

நோய்மை

இரவு வருவதும் பகல் போவதும்
தெரிவதில்லை
நேற்றைக்கும் இன்றைக்கும்
வித்தியாசமில்லை.
கிழமைகளும், தேதிகளும் வெறும்
பெயர்களும், எண்களுமாகிறது
அறைக்குள்ளே இருப்பவளின் புலன்கள்
அதிகம் உபயோகப்படுவதில்லை
உறக்கத்தின் ஆழமும், விழிப்பின்
மேற்பரப்பும் ஒன்றாகிவிடுகிறது
வானத்தைப் பார்க்க முடிவதில்லை
காலத்தைப் பிரிக்க முடிவதில்லை.
முடிவில்லாத சுழற்சியினுள்
மூழ்கிக்கிடக்கிறது வாழ்வு
என் முகமே மறந்துபோனதொரு
காலமற்ற வெளிக்குள்
என்னைக் கடக்கிறது
நோய்மை.-----------------------------------நர்மதா குப்புசாமி


ஜொள்ளு 




Follow kummachi on Twitter

Post Comment

7 comments:

ராஜி said...

இதெல்லாம் கொஞ்ச நாட்கள்தான். சீக்கிரம் தமிழகத்தின் தலைநகரம் சென்னையாகிடும். கலங்காதீங்க சகோ.

கும்மாச்சி said...

ராஜி வருகைக்கு நன்றி.

அம்பாளடியாள் said...

மின்வெட்டும் தண்ணீர் பஞ்சமும் கொடுக்கும் துயரம் எப்போது தான் அடங்குமோ !ஆட்சிக்கு வரும் போது ஒவ்வொருத்தரும் குடுக்கின்ற வாக்குறுதிகள் மட்டும் வாயப் பிளக்க வைக்கும் முடிவில் உச்சி அடிதான் .மலை ஏறின அம்மா விரைவில் இறங்கி வந்தாவது நன்மை பிறக்கட்டும் .வாழ்த்துக்கள் சகோதரா பகிர்வுக்கு மிக்க நன்றி .

கும்மாச்சி said...

சகோதரி வருகைக்கு நன்றி.

அருணா செல்வம் said...

திரும்பவும் மின் வெட்டு துவங்க விட்டதா....?

விசிறி, ஆட்டுக்கல் எல்லாம் வெளிவருகிறதா....? சூப்பர்.
பகிர்விற்கு நன்றி கும்மாச்சி அண்ணா.

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

//எட்டாயிரம் லிட்டர் தண்ணீருக்கு மூவாயிரம் ரூபாய்// பரவாயில்லையே.

கும்மாச்சி said...

எஸ்.ரா வருகைக்கு நன்றி.

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.