Pages

Monday, 12 May 2014

கலக்கல் காக்டெயில்-145

நீயா? நானா?

முல்லபெரியாறு நீர்மட்டத்தை 142 அடிக்கு உயர்த்தலாம் என்று உச்சநீதிமன்றம் கடந்த வாரம் தீர்ப்பளித்தது. இது எதிர்பார்த்த ஒன்றுதான். அதை தொடர்ந்து அம்மா டிவியும் ஐயா டிவியும் அல்லக்கைகளை வைத்து "தலை"க்கு சொம்படிக்கும் விழா தொடங்கியது. பின்னர் இரு தலைகளுமே இந்த வரலாற்று வெற்றிக்கு நான்தான் காரணமென்று அறிக்கை போர்கள் தொடங்கின.

காவிரி தீர்ப்பு கூட நமக்கு சாதகமாகத்தான் வந்தது. ஆனால் ஆற்றில் தண்ணீர் என்னமோ வரவில்லை. உச்சநீதிமன்றம் என்ன  இடைக்கால தீர்ப்புகள் வழங்கினாலும் அதை கர்நாடகத்தில் ஆட்சிக்கு வரும் எந்த அரசும் கண்டுகொள்வதில்லை. நமக்கு கிடைக்கவேண்டிய நியாயமான அளவு தண்ணீர் மறுக்கப்படுகிறது. அதே காட்சிதான் இப்பொழுது முல்லபெரியாறு விஷயத்திலும் நடக்கும்,  ஆதலால் இந்த தீர்ப்புகளுக்கு ஒன்றும் இந்த ஆர்பாட்டங்கள் தேவையில்லை.

உண்மையிலேயே நமக்கு கிடைக்கவேண்டிய தண்ணீர் கிடைத்து விவசாயிகள் விளைச்சலுக்கு சேதம் வராமலிருந்தால் தான் இந்த தீர்ப்புகளுக்கு அர்த்தம் உள்ளது.

இரும்புக்கரம் தேவை 

சென்னை சென்ட்ரலில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவம் பல கேள்விகளை நம்மிடையே எழுப்பியுள்ளது. வெடிகுண்டு சம்பவத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன் திருவல்லிகேனியில் பிடிபட்ட ஜாகீர் ஹுசேனுக்கும் சென்ட் ரல் சம்பவத்திற்கும் தொடர்பு இல்லை என்று சொல்லப்பட்டாலும், ஜாகீர் ஹுசேனிடமிருந்து பெறப்பட்ட தகவல்கள் அதிர்ச்சிகரமாக உள்ளது. இந்தியாவின் அமைதியை குலைத்து, பொருளாதார சீர்குலைவை ஏற்படுத்த பாகிஸ்தானும், ஸ்ரீலங்காவும் எப்படி செயல்படுகின்றன என்பது வெட்டவெளிச்சமாகிறது..

குறிப்பாக ஸ்ரீலங்கா நம்மிடமிருந்து ராணுவ உதவி முதல் பொருளாதார உதவி வரை எல்லாவற்றையும் பெற்றுக்கொண்டு நமக்கு எதிராக செயல்படுவதை நமது மத்திய அரசு உணர்ந்ததாக தெரியவில்லை.

மேலும் ஜாகீர் ஹுசேன் போன்ற தீவிரவாதிகளுக்கு புகலிடம் கொடுக்கும் புல்லுருவிகளை அரசு பிடித்து தக்க தண்டனை தரவேண்டும்.

இதெல்லாம் எப்பொழுது நடக்கும்?

ரசித்த கவிதை 

தென்றல் 


இரவுப் பொழுதில்,
இறகுகள் மறித்து,
இயற்கையெனும் விசிறி வீசும்,
ஈரக் காற்றிது....

கனவுகள் காணும் இரவின் முன்னே,
கவிதையாய் வரும் நினைவுச் சாரல்....
கசந்து நிற்கும் நினைவுகளெல்லாம்,
தென்றல் உந்தன் சுவாசம் பட்டு,
இன்சுவை நினைவாய் மாறாதோ....

அவளைப் பற்றி சிந்திக்கும் இவ்வேலையில்,
தென்றலின் நினைவிருக்காது எம் சித்தத்தில்....
அடர் குளிர் காற்று தந்து,
அவள் நினைவை உண்டாகுதே....

நிலாமகள் தூது இதுவோ,
நித்திரை முழுதும் தவழ்ந்திடுதே....
பூமி உலா வந்த பிறகும்,
ஓய்வதில்லை உந்தன் பணிகள் முற்றிலும்....!!!!----------------பிரதீப்

ஜொள்ளு






20 comments:

  1. கவிதையை மிகவும் ரசித்தேன் வாழ்த்துக்கள் சகோதரா :)

    ReplyDelete
  2. வருகைக்கு நன்றி சகோதரி.

    ReplyDelete
  3. முதலில் அய்யா மகிழ்ச்சி என்று மட்டும்தானே சொன்னார். லாவணி பாடியது முதல்வர்தானே? அவரது குற்றச்சாட்டுக்கு பதில் சொன்னால் இப்படி இருவருமே இப்படித்தான் என்று பொதுப்படுத்துவதுவதை எப்படி நியாயப்படுத்துவீர்கள்?

    அவர் பதிலே சொல்லாமல் இருந்தால் அது ஏற்புடையதா?

    ஊடகங்கள் செய்யும் அதே தவறை நாமும் செய்யலாமா?


    பாபு, Chennai

    ReplyDelete
  4. எஸ்.ரா. வருகைக்கு நன்றி.

    ReplyDelete
  5. அனானி அவர்களே உங்கள் கருத்து ஓரளவிற்கு உண்மை. ஆனால் இருவரும் எழவு வீட்டில்கூட அரசியல் செய்வார்கள் என்பதில் மாற்று கருத்து இருக்க முடியாது.

    ReplyDelete
  6. ராஜி வருகைக்கு நன்றி.

    ReplyDelete
  7. "தீபாவளி" ன்னாலே கொண்டாட்டம் தான். அதுலேயும் தாவணி போட்ட தீபாவளின்னா? .

    ReplyDelete
  8. ஒஹ் சேக்காளி அப்படி வரீங்களா?

    ReplyDelete
  9. புல்லுருவிகளை வளர்ப்பதே அரசு என்றால்...?

    ReplyDelete
  10. தனபாலன் வருகைக்கு நன்றி.

    ReplyDelete
  11. சூப்பர்! எல்லாவற்றிலும் அரசியல் செய்வது கழகங்களின் வேலைதானே!

    ReplyDelete
  12. சுரேஷ் வருகைக்கு நன்றி.

    ReplyDelete
  13. வணக்கம்,

    நிகண்டு.காம்(www.Nikandu.com) தமிழ் பதிவர் சமுக வலைத்தளம்
    வழியாக உங்கள் வலைப்பூக்கள், You Tube வீடியோக்கள், புத்தகங்கள் மற்றும் உங்கள் கருத்துகளை மன்றம்(Forum) வழியாக உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.

    www.Nikandu.com
    நிகண்டு.காம்

    ReplyDelete
  14. வெள்ளம் வரும் முன் அணைகட்டத் தெரியாதவர்களுக்குத்
    தண்ணீர் வந்தால் என்ன? வரவில்லை என்றால் தான் என்ன?

    இங்கே தண்ணீர் பிரட்சனை இல்லை என்றாலும் பலரது வீடுகளில் மழைநீரைச் சேமித்துத் தோட்டங்களில் பாய்ச்சும் முறை இருக்கிறது கும்மாச்சி அண்ணா.

    ReplyDelete
  15. I think the blast was intended for some other location. It happened in Central simply due to the high efficiency and punctuality of Indian Railways. You probably are reading too much in to the incident.

    ReplyDelete
  16. கவிதை அருமை!......ஜொள்ளு?!! ஹி! ஹி! ஹி!....தண்ணீரைப் பற்றி இங்கு யாருக்கய்யா கவலை?!!! "தண்ணீ" இருந்தால் போதுமே! அதுதான் நிறைய இருக்கேங்க! அப்புறம் ஏன்யா தண்ணிப் பிரச்சினை அப்படின்றீங்க?!!!!

    ReplyDelete
  17. அருணா வருகைக்கு நன்றி.

    ReplyDelete
  18. துளசிதரன் வருகைக்கு நன்றி.

    ReplyDelete

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.