அம்மான்னா சொம்மாவா?
எல்லோரும் எதிர்பார்த்த அல்லது எதிர்பாராத முடிவுகள் வந்து விட்டன. கிட்டத்தட்ட ஒரு மாதகாலம் எல்லா தலைகளும் ஓடி ஓடி அல்லது பறந்து பறந்து செய்த பிரச்சாரத்தின் முடிவுகள் பதினாறாம் தேதி தெரியவந்தது.
நாற்பதையும் பிடிக்கவில்லை என்றாலும் அம்மா எதிர் பார்த்த முப்பத்திமூன்று தொகுதிகளுக்கு அதிகமாகவே மேலும் நாலு தொகுதிகள் கிடைத்துவிட்டன. மத்திய சென்னை, வடசென்னை வேலூர் தொகுதி நீங்கலாக மற்ற எல்லா தொகுதிகளிலுமே கிட்டத்தட்ட இரண்டு லட்சம் ஒட்டு வித்தியாசத்தில் அ.தி.மு.க வேட்பாளர்கள் வெற்றிபெற்றனர். தி.மு.க ஒன்று இரண்டு தொகுதிகள் தவிர மற்ற எல்லா இடங்களிலும் இரண்டாவது இடத்தை பெற்று ஒரளவிற்கு மானத்தை காப்பாற்றி கொண்டது என்று தான் சொல்லவேண்டும்.
எல்லா கட்சிகளுக்கும் போக்கு காட்டி கேப்டன் அடித்த கூத்து பல இடங்களில் காணாமல் போய்விட்டது.
என்னதான் மின்வெட்டு தண்ணீர் பிரச்சனை என்றாலும் தமிழக மக்கள் தங்கள் நியாபக மறதியை புறந்தள்ளி இந்த முறை "அம்மாதான்" என்று அழுத்தமாகவே முடிவை எழுதிவிட்டனர்.
மோடி அலை, டாடி அலையை தாண்டி லேடி அலை தமிழகத்தில் வீசிவிட்டது.
அம்மாவிற்கு இப்பொழுது நல்ல காலம். தமிழகத்திற்கும் நல்ல காலமா என்பது போக போகத்தான் தெரியும்.
சரக்கடிக்க நேபாளம் போகவேண்டி இருக்குமோ?
மோடி பிரதமரானவுடன் நாடெங்கும் மதுவிலக்கு வந்துவிடுமோ? என்று குடிமகன்களுக்கு சந்தேகம் வந்துவிட்டது. குஜராத்தில் பூரண மதுவிலக்கு உள்ளது. அதேபோல மோடி நாடெங்கும் மதுவை ஒழித்தால் வளரும் சமுதாயத்திற்கு ஒரு பெரிய சேவையாக இருக்கும்.
என்ன குடிமகன்கள் சரக்கு தேடி நேபாளத்திற்கும், சிறிலங்காவிற்கும் போகவேண்டி வரும்.
இப்பொழுது சமூக வலைதளங்களில் இந்த டாபிக்தான் ஓடிக்கொண்டிருக்கிறது.
அவனவனுக்கு ஆயிரம் கவலைகள். குடிமகன்களுக்கு ஒரே கவலைதான்.
ரசித்த கவிதை
நம் சந்திப்பு
ஜொள்ளு

நிகழாமல் போனது
பறவைகள்
தலையில் தோளில்
எச்சமிடலாமெனவோ
என்னவோ
மரத்தடியை ஏற்கனவே
தவிர்த்திருந்தோம்
சற்றே மனம் பகிர்ந்து .
புல்தரை
மீதமர்ந்த உடனேயே
கலையத்தவிக்கும்
இரும்புப் புற்றை கண்ணுற்றோம்
வேறு சில பூச்சிகளும்
சமன் குலைந்து
இடம் பெயர்ந்தன
படித்துக் கொண்டிருந்த பக்கத்தை
உடன் எடுக்கத் தோதுவாய்
உன் சுட்டு விரலை
நெடுநேரமாய் ஒரு
புத்தகத்துக் குள்ளேயே
வேறு வைத்திருந்தாய்
துணைத் தலைப்புகளையே
பார்த்துகொண்டிருந்ததில்
வாசிக்க முயன்று தோற்றத்தில்
படவிழா சினிமாவின்
மற்ற நல்ல பரிமாணங்களை
தவற விட்டது போல்
நம் சந்திப்பு
நிகழாமல் போனது
நாம் சந்தித்த அன்று-------------------கலாப்ரியா
ஜொள்ளு
5 comments:
நம்ம ஊரிலேயே “காய்ச்ச“ மாட்டார்களா கும்மாச்சி அண்ணா....?
சமுதாயத்திற்கு ஒரு பெரிய சேவை விரைவில் நிறைவேற வேண்டும்...
கவிதை அருமை...
அருணா மதுவிலக்கு வந்தால் காய்ச்சல் தொழில் கொடிகட்டி பறக்கும், உடன்பிறப்புகள் ரத்தத்தின் ரத்தங்கள் எல்லாம் காய்ச்சு காய்ச்சு என்று காய்ச்சுவார்கள்.
கவிதை அருமை! மதுவிலக்கு வரும் என்பது சந்தேகமே! வந்தால் நல்லதுதான்!
இரண்டுவருடம் கழித்து அம்மா என்ன சாக்கும் சொல்லமுடியாது. ஆனாலும் அம்மா தோத்தபோதும் திமுக போல் கேவலமாகத் தோற்கமாட்டார்.
Post a Comment
படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.