Friday, 23 May 2014

கேடுகெட்டவளும், கோச்சடையானும் பின்னே சுவற்றை கீறியவர்களும்

ஒரு அழகிய பெண் ஒரு உயரமான அபார்ட்மெண்டின் 20வது மாடியிலிருந்து கீழே விழுந்துவிட்டாள்.

அவளை பதினைந்தாவது மாடியிலிருந்து ஒருவன் பிடித்துவிட்டு, என்னை கல்யாணம் செய்துகொள்கிறாயா? காப்பாற்றுகிறேன் என்றானாம், அதற்கு அவள் சீ போடா பொறுக்கி என்று சொல்லவே அவளை கீழே விட்டுவிட்டான்.


அடுத்து 10வது மாடியில் ஒருவன் பிடித்து எனக்கு முத்தம் கொடு உன்னை காப்பாற்றுகிறேன், அதற்கு அவள் சீ போடா நாயே என்று  திட்ட அவனும் அவளை கீழே விட்டுவிட்டான்.

பின்னர் ஐந்தாவது மாடியில் ஒருவன் அவளை பிடிக்க அந்தப் பெண் அவனிடம் என்னை கீழே விட்டுவிடாதே உன்னை நான் கல்யாண செய்துகொள்கிறேன், முத்தம் கொடுக்கிறேன் என்று சொல்ல, அவன் அட சீ இவள் கேடுகெட்டவளாக இருப்பாள் போலிருக்கிறது "சாவுடி" என்று அவளைக் கீழேபோட்டுவிட்டான், அவளும் இறந்து விட்டாள்.

நீதி: எல்லா ஆளையும் தப்பாக நினைத்தால் சாவவேண்டியதுதான்.

முகநூலில்படித்தது, என்னமா யோசிக்கறாய்ங்க.


கோச்சடையான் இப்போ வரும், அப்போவரும் என்று இழுத்தடிக்கப்பட்டு ஒரு வழியாக வந்துவிட்டது. இந்த படம் வருவதற்கு முன்பாகவே இந்தப்படம் பிளாப்பு, பொம்மைப்படம் என்று ஏகப்பட்ட விமர்சனங்கள்.

இப்பொழுது படம் வெளியே வந்து "பொம்மைபடம்" என்று சுவற்றில் நகத்தால் கீறியவர்களுக்கு ஆப்படிப்பதுபோல் விமர்சனங்கள் வந்து கொள்ளவே ஓடி ஒளிந்திருக்கிறார்கள்.

இந்தியன் எக்ஸ்பிரஸ் " Rajinikanth is finally back 10 reasons you must watch Koachadaiyan" என்று எழுதி படத்திற்கு இன்னும் ஆவலை தூண்டிவிட்டிருக்கிறது. இந்தியன் எக்ஸ்பிரஸ் சொல்லும் பத்துகாரனங்களில் முக்கியமானது கே. எஸ். ரவிகுமாரின் திரைகதை-வசனம், ரஜினி, ஏ.ஆர். ரஹ்மான் மூவரும் இது ஒரு பொம்மை படம் என்ற மாயை விலக்கியுள்ளார்கள்.

படத்தில் நாகேஷின் அறிமுகம்,ருத்ரதாண்டவம், அதை தொடர்ந்து வரும் கப்பல் சண்டை, பின்னர் க்ளைமாக்சில் ரஜினியின் வசனங்கள் முதலியவை மிகவும் நன்றாக இருப்பதாக சொல்லுகிறார்கள்.

வெளிநாட்டிலிருந்து வந்த விமர்சனங்களோ படத்தின் தொழில்நுட்பத்தை சிலாகித்திருக்கிறது. மேலும் இது ஒரு எல்லா வயதினருக்கான படம் என்று திட்டவட்டமாக சொல்லுகிறார்கள்.


ரஜினி பொம்மைக்கே இந்த மவுசா?......

Follow kummachi on Twitter

Post Comment

6 comments:

”தளிர் சுரேஷ்” said...

முகநூல் கதை சூப்பர்! சூப்பர் ஸ்டாருக்காக கோச்சடையான் பார்க்க வேண்டும்! என்னதான் சொதப்பினாலும் என் ஆல்டைம் பேவரிட் அவர்தான்!

கும்மாச்சி said...

சுரேஷ் வருகைக்கு நன்றி, படம் எதிர்பார்த்த அளவு மோசம் இல்லையாம், நன்றாகவே இருக்கிறதாம்.

அருணா செல்வம் said...

இந்தப் படத்தை நான் எப்படியாவது திரையரங்கில் பார்க்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன் கும்மாச்சி அண்ணா.

கும்மாச்சி said...

அருணா வருகைக்கு நன்றி. 3Dயில் பாருங்கள்.

திண்டுக்கல் தனபாலன் said...

மவுசு என்றும் சொல்லலாம் வெறியை...!

கும்மாச்சி said...

தனபாலன் வருகைக்கு நன்றி.

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.