அம்மா உப்பு
அம்மா உணவகம், அம்மா குடிநீர் என்ற வரிசையில் அடுத்ததாக அம்மா "உப்பு". அம்மா ஆட்சிக்கு வந்து அம்மா உணவகம் தொடங்கி அதில் மலிவுவிலையில் இட்லி, பொங்கல், தயிர்சாதம் ,சாம்பார்சாதம், பின்னர் சப்பாத்தி என்று விநியோகித்தார்கள்.பின்னர் மலிவு விலை என்ற பெயரில்குடிநீர் விநியோகம் தொடங்கி தண்ணீர் வியாபாரிகளுக்கு வழி செய்தார்கள்.
இப்பொழுது யார் கம்பெனி உப்போ "அம்மா உப்பு" என்ற பெயரில் சந்தைக்கு வருகிறது. இதன் பின்னணி அம்மா மட்டும் அறிந்த ரகசியம்.
இன்னும் இப்படியே போனால் அம்மா புளி, அம்மா பருப்பு, அம்மா ஊறுகாய், அம்மா மாவு, அம்மா காபி, அம்மா டீ என்று ரவுண்டு கட்டி அடிக்க வாய்ப்புண்டு..
எல்லா பொருளும் மலிவு விலையில் கொடுக்கும் அம்மா சரக்கும், மின்சாரமும் ஏன் தரத்தயங்குகிறார்கள்?.
தமிழ்நாட்டை தலைமேல் வைத்து தாங்கும் தாயே குடிமகன்களில் கோரிக்கைக்கு செவி சாயுங்கள். அவர்கள் அரசுக்கு செலுத்தும் கப்பம் மட்டும் இல்லையென்றால் உங்களது அம்மா திட்டமெல்லாம் "சும்மா" வாகிவிடும்.
ஆதலால் நாட்டின் குடிமகன்களுக்கு தாயுள்ளம் கொண்டு மலிவுவிலையில் அம்மா க்வாட்டரும், அம்மா லெக் பீசும், அம்மா மீன் வருவலும் வழங்க ஏற்பாடு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
இவன்:சரக்கடித்து சந்தில் விழுந்துகிடக்கும் "டாஸ்மாக் கபாலிகள் சங்கம்".
அபதாரம்
ஆதாரம் தெரியும் , சேதாரம் தெரியும், ஏன் தலைவரோட மூன்றாம் தாரம் கூட தெரியும், அது என்ன அபதாரம்?
மத்திய கிழக்கு நாடுகளில் "ரேடியோ ஹலோ" ஏப்.எம் மிகவும் பிரபலம். இருபத்தி நான்கு மணி நேரமும் தமிழிசை ஒளிபரப்பி எங்களது தமிழ் தொடர்பை அடிக்கடி உறுதி செய்துகொண்டிருக்கிறார்கள்.
அதன் தொகுப்பாளினிகளில் ரேவா, குமுதா அவர்களின் தமிழ் உச்சரிப்பு நன்றாக இருக்கும். குமுதா அவர்களின் குரலில் தமிழ் தனி நடை போட்டு வரும். அலுவலகம் செல்ல காரில் கிட்டத்தட்ட நாற்பது நிமிடங்கள் ஆகும், அந்த நேரங்களில் தமிழ் இசைதான் வழித்துணை.
இன்றைக்கு காலையில் அலுவலகம் கிளம்பியவுடன் ஏதோ ஒரு பக்கி ஆர் ஜே மொக்கை போட ஆரம்பித்தான், பாட்டுகளுக்கு நடுவே நாட்டு நடப்பு செய்திகளையும் கொடுத்துக்கொண்டிருந்தான், அவ்வாறு சொல்லும் பொழுது நமது நாட்டில் கங்கையை தூய்மைபடுத்தும் திட்டமாக கங்கையை அசுத்தப்படுத்துபவர்களுக்கு சிறை தண்டனையும் பத்தாயிரம் ருபாய் "அபதாராம்" என்று அறிவித்துக்கொண்டிருந்தான்.
நான் அலுவலகம் வந்தும் சேரும் வரை கிட்டத்தட்ட ஐந்து முறையாவது அபத்தாரத்தை சொல்லியிருப்பான்.
தமிழ் தெரிந்து அறிவிப்பாளரா வாங்கப்பு.....................இல்லை என்றால் எங்காவது ஆங்கில எஃப்.எம் இல் சேர்ந்து தமிழ் தொண்டாற்றுங்க.
ரசித்த கவிதை
கண்ணாமூச்சி விளையாட்டு
எனது ஊரின்
பழங்காலச் சித்திரம் ஒன்று
என்னிடத்தில் இருக்கிறது
மெருகு குறையாமல்
குட்டி வாடகை சைக்கிளில்
ஊரைச் சுற்றி பழகியபோது
கிடைத்தது.
இன்றைய ஊரின் சித்திரத்தையும்
என் சித்திரத்தையும்
ஒப்பிட்டுப் பார்க்கவே பிடிக்கவில்லை
சீ...........ச்சீய்..........
மலையில் தியானத்தோடு
சந்தையின் இரைச்சலா?
வேண்டுமானால்
நாங்கள் இருவர் விளையாடிய
கண்ணாமூச்சி விளையாட்டில்
கடைசி வரைக்கும் என்னால்
கண்டுபிடிக்கவே முடியாமல் போய்விட்ட
வரதராஜனிடமும்
இதே போல் ஒரு படம்
நெஞ்சுக்குள் இருக்கும்
அதனுடன் ஒப்பிட்டு அழகு பார்க்கலாம்
அவன் எங்கேதான் ஒளிந்திருக்கிறானோ.
--------------------------------------------------------------ச.முத்துவேல்
ஜொள்ளு

12 comments:
இன்னும் இப்படியே போனால் அம்மா புளி, அம்மா பருப்பு, அம்மா ஊறுகாய், அம்மா மாவு, அம்மா காபி, அம்மா டீ என்று ரவுண்டு கட்டி அடிக்க வாய்ப்புண்டு..//
தூய்மைபடுத்தும் திட்டமாக கங்கையை அசுத்தப்படுத்துபவர்களுக்கு சிறை தண்டனையும் பத்தாயிரம் ருபாய் "அபதாராம்" என்று அறிவித்துக்கொண்டிருந்தான்.
சுவாரஸ்யமாக சொல்லி முடிக்கப்பட கொடுமைகள் அருமை சகோதரா :)))//
தமிழ்நாட்டை தலைமேல் வைத்து தாங்கும் தாயே குடிமகன்களில் கோரிக்கைக்கு செவி சாயுங்கள். அவர்கள் அரசுக்கு செலுத்தும் கப்பம் மட்டும் இல்லையென்றால் உங்களது அம்மா திட்டமெல்லாம் "சும்மா" வாகிவிடும்.
உண்மைதான் ! அருமையான இப் பகிர்வுக்கு வாழ்த்துக்கள் சகோதரா .
சகோதரி வருகைக்கும் பாராட்டிற்கும் நன்றி.
கண்ணாமூச்சி விளையாட்டை ரசித்தேன்.
வருகைக்கு நன்றி ராஜி
மத்திய கிழக்கு நாடுகளில் "ரேடியோ ஹலோ" ஏப்.எம் மிகவும் பிரபலம். இருபத்தி நான்கு மணி நேரமும் தமிழிசை ஒளிபரப்பி எங்களது தமிழ் தொடர்பை அடிக்கடி உறுதி செய்துகொண்டிருக்கிறார்கள்.- Is this channel avable on net? if yes Link please.......
ஜெயதேவ் வருகைக்கு நன்றி. சுட்டி கிடைத்தால் அனுப்புகிறேன்.
ம் ...
எஸ்.ரா. வருகைக்கு நன்றி
“அம்மா உப்பு“
“அம்மா உப்பு, அம்மா உப்பு என்கிறார்களே..... அம்மா ஏற்கனவே உப்பி தான் இருக்கிறார்கள். இன்னுமா உப்ப வேண்டும்......)))
முகநுர்லில் படித்து சிரித்தேன் கும்மாச்சி அண்ணா.
அருணா வருகைக்கு நன்றி, நகைச்சுவையை நானும் ரசித்தேன்.
கண்ணாமூச்சி விளையாட்டை ரசித்தேன்...
தனபாலன் வருகைக்கு நன்றி.
Post a Comment
படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.