Friday, 4 July 2014

கலக்கல் காக்டெயில்-149

மவுலிவாக்கம் சொல்வது என்ன?

மவுலிவாக்கத்தில் பதினொரு மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில் கிட்டத்தட்ட அறுபது உயிர்கள் இது வரை பலியாகியிருக்கிறது. தேடுதல் பனி இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. வெறும் அரைமணிநேர மழைக்கே கட்டிடம் பாதி கட்டிக்கொண்டிருக்கும் நிலையில் இடிந்து விழுந்துள்ளது.

இப்பொழுது அரசு தனது இருப்பை காட்டிக்கொள்ள ஒரு ஒய்வு பெற்ற நீதிபதியை அழைத்து காசு கொடுத்து "இன்னா நடந்துதுன்னு கண்டு பிடி நைனா?" என்று ஆணையிட்டிருக்கிறது. மறுபுறம் சென்னை பெருநகர் வளர்ச்சிக்குழுமமும் எல்லா அதிகாரிகளையும் முடுக்கி இப்பொழுது கட்டிக்கொண்டிருக்கும் அடுக்குமாடிக்கட்டிடங்கள், கட்டி முடித்தவை, ஒப்புதல் இல்லாமல் கட்டப்பட்டவை எவை எவை என்று ஒரு ஆய்வறிக்கை தயார் செய்ய உத்தரவிட்டுள்ளது.

ஒப்புதல் இல்லாமல் கட்டப்படுவது சென்னையில் காலம்காலமாக நடந்து கொண்டிருக்கிறது.

எனது நண்பர் கட்டிட தொழிலில் உள்ளார். அவரிடம் இதை பற்றி விசாரித்த பொழுது இதெல்லாம் இங்க சாதாரணம் என்றார். நாம் ஒப்புதல் வாங்கிக்கட்டலாம் என்றால் நமது வரைபடத்தை சமர்ப்பித்தவுடன் ஒரு அதிகாரி வருவார், பார்வையிட்டு விட்டு கட்ட ஆரம்பிக்கலாம் சார், ஒப்புதல் வாங்கிக்கோங்க என்பார் ஆனால் ஒப்புதல் சான்றிதழ் மட்டும் கைக்கு வரவே வராது. அவை அதற்கப்புறம் சந்திப்பதே குதிரை கொம்பு. இதெல்லாம் அவர்களின் நிரந்தர வருமானத்திற்கு வழி என்றார். உண்மைதான்.

இப்பொழுது ஆய்வு செய்யும் அதிகாரிகள் கூடிய விரைவில் ஒருஅடுக்குமாடி கட்டிடம் வாங்கினால் ஆச்சர்யப்படுவதற்கில்லை.

யார்யா இந்த ஷரப்போவா?

டென்னிஸ் வீராங்கனை மரியா ஷரப்போவாவிடம் சச்சின் தெரியுமா என்று கேட்டதற்கு யார் பா அவரு எனக்கு தெரியாது என்று சொல்லப்போக நமது சச்சின் வெறியர்கள் சமூக வலைதளங்களில் ஷரப்போவாவை நார் நாராக கிழித்துவிட்டார்கள்.

அட அப்ரசண்டிகளா அதுக்கு ஏண்டா? மெர்சல் ஆவுறீங்க,பதிலுக்கு  எங்களுக்கு கூடத்தான் "ஷரப்போவா"  காலு, தொடை மட்டும் தான்   மற்றபடி அந்தம்மா மூஞ்சி தெரியாதுன்னு சொல்லிட்டு போவ  வேண்டியதுதானே.

ரசித்த கவிதை 
குழந்தை வரைந்த ஓவியம்


குழந்தை
வட்டமும் சில கோடுகளும்
வரைந்து
அம்மா என்றது
வட்டத்திற்குள்
மேலும் ஒரு கோட்டை
படுக்க வைத்து
அப்பாவையும் கைப்பிடித்தது
அம்மாவுக்குப் பக்கத்தில்
மேலும் ஒரு வட்டத்தை வைத்து
தானே மூன்றாவதானது
படைத்தவர்களை ஒன்றாகவும்
படைப்பைத் தனியாகவும்
காட்சிப் படுத்திய குழந்தையின்
கன்னத்தில் முத்தமிட்ட தாய்
அம்மாவுக்கு
முத்தம் தாவென யாசிக்கையில்
குழந்தை முத்தமிட்டது
தான் படைத்த அம்மாவிற்கு


ஜொள்ளு


Follow kummachi on Twitter

Post Comment

13 comments:

Yarlpavanan said...

சிறந்த பகிர்வு
தொடருங்கள்
அடிக்கடி வருவேன்!

கும்மாச்சி said...

ஜீவலிங்கம் வருகைக்கு நன்றி

அருணா செல்வம் said...

மவுலிவாக்கமா....? நான் “மலிவாக்கம்“ என்று படித்துவிட்டேன்.

குழந்தை கவிதை அருமை.
கடைசி படம் சூப்பர் கும்மாச்சி அண்ணா.

”தளிர் சுரேஷ்” said...

குழந்தை கவிதை மிக அருமை! ஜொள்ளு படம் மாறிப்போனமாதிரி தெரியுது!

கும்மாச்சி said...

அருணா வருகைக்கு நன்றி.

திண்டுக்கல் தனபாலன் said...

கவிதை அருமை...

ஆய்வு செய்யும் அதிகாரிகள் - 1 or அடுக்குமாடி கட்டிடம் - உண்மை...

கும்மாச்சி said...

தனபாலன் வருகைக்கு நன்றி.

J.Jeyaseelan said...

nice post

கும்மாச்சி said...

ஜெயசீலன் வருகைக்கு நன்றி.

யாஸிர் அசனப்பா. said...

செம, குறிப்பாக கவிதை

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

மைதிலி கஸ்தூரி ரெங்கன் வலைச்சரத்தில் இன்று தங்களைப் பற்றி விவாதிக்கிறார். தங்களின் பதிவுகளை அவ்வப்போது படித்துவருகிறேன். வாழ்த்துக்கள்.
www.drbjambulingam.blogspot.in
www.ponnibuddha.blogspot.in

கும்மாச்சி said...

ஜம்புலிங்கம் ஐயா நன்றி.

Bavyakutty said...

அருமை.. அருமை..அருமை.. பகிர்வினிற்கு நன்றி..

நண்பர்கள் தின வாழ்த்து அட்டைகளை இலவசமாக பதிவிறக்கம் செய்ய: Happy Friendship Day 2014 Images

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.