ஆப் கி பார் மோடி சர்க்கார் பட்ஜெட் இப்பொழுது நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுக்கொண்டிருக்கிறது.
வழக்கம்போல புதியதாக ஒன்றும் சொல்லிக்கொள்ளும்படியாக இல்லை. போன ஆட்சி செட்டியார் பட்ஜெட்டை கொஞ்சம் டிங்கர் பண்ணி, பட்டி தட்டி ஜிகினா ரிப்பன் கட்டி அனுப்பியிருக்கிறார்கள்.
மாதந்திர சம்பளகாரர்களுக்கும் மற்றும் அன்றாடங்காயச்சிகளுக்கும் ஒன்றும் இதனால் பயனில்லை. சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு என்று செட்டியார் ஆரம்பித்தவுடன் நாடாளுமன்றத்தை ஸ்தம்பிக்க வைத்த அதே கூட்டம் இப்பொழுது எல்லாவற்றிலும் அந்நிய முதலீடு என்று கிழவியை தூக்கி மனையில் வைக்கிறார்கள்.
சரி எப்படியோ போகட்டும் நம் அரசியல் வாதிகள் இந்த பட்ஜெட் பற்றி என்ன சொல்லுவார்கள்.
அம்மா: நாட்டை வளர்ச்சி பாதையிலே கொண்டு செல்லக்கூடிய நல்ல நிதிநிலை அறிக்கை, இதனால் ஏழைமக்கள் பயனுருவார்கள், தமிழ்நாட்டை வளர்ச்சிப் பாதையில் செலுத்தக்கூடிய நல்ல அம்சங்கள் உள்ளன.
கலைஞர்: வடக்கு வாழ்கிறது தெற்கு தேய்கிறது, இந்த நிதி நிலை அறிக்கையில் தமிழ் நாட்டிற்கு ஒன்றும் இல்லை. ஏழைகளை வஞ்சிக்கும் நிதிநிலை அறிக்கை இது. அம்மையார் சொத்துக்குவிப்பு வழக்கை மனதில் கொண்டே இதை நல்ல பட்ஜெட் என்கிறார் என்பதை மக்களாகிய நீங்கள் நன்று அறிவீர்கள்.
ராமதாஸ்: எனது மகன் அன்புமணி கூறிய அறிவுரைகளை ஏற்காமல் மத்திய அரசு இந்த நிதிநிலை அறிக்கையை தயார் செய்துள்ளது. இதனால் சாதாரண ஏழை குடிமக்களை இன்னும் ஏழையாக்கும் நிதி நிலை அறிக்கை மேலும் வன்னியர்களுக்கு என்று எந்த ஒரு நிதியும் ஒதுக்காததை பா.ம.க வன்மையாகக் கண்டிக்கிறது.
கேப்டன்:இந்த நிதிநிலை அறிக்கை நாட்டை வளர்ச்சிப்பாதையிலே கொண்டு செல்லும் என்று அந்தம்மா சொல்லுது. ஒன்று புரிஞ்சுக்கங்க மக்கழே சரக்குக்கு வரியை குறைக்கவில்லை என்றால் எந்த நாடும் வளர்ச்சிப் பாதையில் செல்ல முடியாது. நாளுக்கு நாள் அந்தம்மா சரக்கு விலைய ஏற்றி ஏழை வயிற்றில் அடிக்குது அப்புறம் எங்கே வளர்ச்சி.
மக்கள்: இவனுங்களுக்கு இதே பொழைப்பா போச்சி.

13 comments:
ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறவில்லை என்பதையே சொல்லுகிறது பட்ஜெட்! பகிர்வுக்கு நன்றி!
/மாதந்திர சம்பளகாரர்களுக்கும் மற்றும் அன்றாடங்காயச்சிகளுக்கும் ஒன்றும் இதனால் பயனில்லை./
கும்மாச்சி அண்ணா.... இவர்களெல்லாம் இந்தியர் இல்லையா....?
அருணா வருகைக்கு நன்றி.
Periya etrangal illai
கோவிந்தா... கோவிந்தா...
தனபாலன் வருகைக்கு நன்றி.
சதீஷ் குமார் வருகைக்கு நன்றி.
சிறந்த பதிவு
வரவேற்கிறேன்
//ஆப் கி பார் மோடி சர்க்கார்// அதெல்லாம் எலெக்சனுக்கு முன்பு.
இப்ப எலெக்சனுக்கு பிறகு "ஆப்பு வைக்குது பார் மோடி சர்க்கார்"
காசிராஜளிங்கம் ஐயா வருகைக்கு நன்றி.
அது என்னங்க? கேப்டன் எங்க பேசினாலும்... "சரக்கு' என்ற வார்த்தையை உபயோக படுத்துகிறார்.
விசு வருகைக்கு நன்றி.
ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் எங்களுக்கு கவலை இல்லை.....இதுதான் மக்களின் நிலை.....யாருமே குரல் கொடுக்கப் போவதில்லை.....எல்லா கட்சிகளின் ஆட்சியும் இப்படித்தான் இருப்பதால்....
Post a Comment
படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.