Pages

Tuesday, 1 July 2014

ஐயா,அம்மா, கனவான்களே..............

இன்று காலையில் கூகிளிருந்து மின்னஞ்சல் வந்தது. எனது கும்மாச்சி தளம் இந்த மாதம் இருபத்தியேழாம் தேதி நிறைவடைந்துவிடும். நீங்கள் உங்களது  தளத்தை புதுப்பிக்க உங்களது கடனட்டை விவரங்களை சரிபார்க்கவும் என்று சொடுக்கியும் கொடுத்திருந்தார்கள்.

https://support.google.com/a/answer/4377734



இதை சொடுக்கி அந்தப் பக்கத்திற்குப்போனால்,எனது மின்னஞ்சல் முகவரியும் கடவுச்சொல்லும் கேட்டது, அதை கொடுத்து சொடுக்கியபின் திரும்பவும் அதே பக்கமே வருகிறது.

இதில் எப்படியோ தேடிக்கண்டு பிடித்து கூகிள் அட்மின் கன்சோலுக்கு செல்லலாமென்றால் எத்துனை முறை எனது மின்னஞ்சல் முகவரியும் கடவுச்சொல் கொடுத்தாலும் திரும்பவும் ஒரே பக்கத்திலேயே பப்பரப்பா என்று நிற்கிறது. திரும்பத்திரும்ப கடவுச்சொல்லை கேட்டு கழுத்தருத்துக்கொண்டிருக்கிறது.

நான் எனது கும்மாச்சி தளத்தை பிளாக்கர் மூலமாக பெற்றுக்கொண்டேன். பின்னர் இரண்டு வருடங்கள் "Google Wallet" மூலமாக தானாகவே புதுப்பிக்கப்பட்டது.

தற்பொழுது கூகிள் ஒரு முறை கூகுள் கன்சோல் சென்று உங்களது பில்லிங் விவரங்களை சரிபார்க்கவும் என்று சொல்கிறது.

காலையிலிருந்து அன்னந்தண்ணி  உண்ணாமல் இந்த கூகிள்   கன்சோலில் நுழைய முயற்சித்துக் கொண்டிருக்கிறேன், இன்னும் கோட்டை கதவு திறக்கவில்லை. இதில் பின்வழியாக நுழைய ஏதாவது கதவுகள்உள்ளதா, இல்லை நமது மின்னஞ்சல் கணக்கு வழியாக நுழைய முடியுமா?

இந்த துறையில் விஷயம் தெரிந்தவர்கள் யாராவது உதவி செய்தால் அவர்களது எல்லா பதிவுகளும் கோடானுக்கோடி ஹிட் பெற்று பிரபல ப்ளாகர்களின் எழுத்தில் சிக்கி சின்னாபின்னாமாகாமல் இருக்க எல்லாம் வல்லவனை வேண்டிக்கொள்கிறேன்.


 

7 comments:

  1. டாட்.காம் வாங்கியவர்கள் நிறைய பேர் இப்படித்தான் கஷ்டப்படுகிறார்கள்! தொழில்நுட்ப பதிவர்கள் உதவலாமே!

    ReplyDelete
  2. அடடா.... இப்படியெல்லாம் கூட இதில் கஷ்டம் வருமா.....?

    கும்மாச்சி அண்ணா...
    சீக்கிரமாக அந்தத் தொழில் நுட்பத்தைக் கற்றுக் கொண்டு எங்களுக்கும் சொல்லித் தாருங்கள்.

    ReplyDelete
  3. Visit : http://www.bloggernanban.com/2013/11/renew-blogger-domain.html

    ReplyDelete
  4. அருணா வருகைக்கு நன்றி.

    ReplyDelete
  5. தனபாலன் வருகைக்கும், சுட்டி கொடுத்து உதவியதற்கும் நன்றி.

    ReplyDelete
  6. எப்படி சரி செயடேர்கள் என்று பதிவைப் போட்டால் நாங்களும் எச்சரிக்கையோடு இருப்போம் .செய்வீர்களா ?
    தம 3

    ReplyDelete
  7. பகவான்ஜி வருகைக்கு நன்றி. கோட்டை கதவுகளை திறந்தவுடன் நிச்சயம் பதிவு போடுகிறேன்.

    ReplyDelete

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.