Pages

Tuesday, 29 July 2014

தங்கிலீஷ் பேசும் தமிழா.

சுத்தமான தமிழ் பேசுவது என்பது இன்றைய காலகட்டத்தில் மிகப்பெரிய சவாலாக உள்ளது. நம் அண்டை மாநிலத்தவர்கள் ஆங்கிலம் கலக்காத அவர்கள் தாய் மொழி பேசுவதை கேட்கையில் நமக்கு நம் தமிழ் தமிழர்களாலேயே எப்படி கலப்படம் செய்து சிதைக்கப்பட்டிருக்கிறது என்பது வேதனை.

பொதுவாகவே இரண்டு பேர் தமிழில் பேசினால் ஒரு வாக்கியத்தில் குறைந்தது ஒரு ஆங்கில வாரத்தையோ அல்லது வடமொழி வார்த்தையோ கண்டிப்பாக இடம்பெற்றிருக்கும்.

உதாரணமாக எந்த ஓட்டலுக்குப் போகலாம்? பரோட்டா குருமா சாப்பிடுவோமா? பாக்கி சில்லறை வாங்கிட்டயா?இதை மேலோட்டமாகப் பார்த்தால் எல்லாம் தமிழ் போல் தோன்றும் அதற்குக் காரணம் காலகாலமாக இப்படிப் பேசியது பிற மொழிக்கலப்பை மறைந்து போக செய்துள்ளது.

இலங்கை தமிழர்களும், மலேசிய தமிழர்களும் ஒரளவிற்கு பிறமொழிக் கலப்பில்லாமல் தமிழ் பேசுகிறார்கள். சமீபத்தில் மலேசியா சென்றபொழுது காலையில் என்னை அழைத்துப்போக வந்த தமிழ் ஓட்டுனர் என்னிடம் காலையில் பசியாறி விட்டீர்களா? என்று கேட்டதை புரிந்துகொள்ள என் போன்ற சென்னை தமிழர்களுக்கு சற்று நேரமாகும்.

சமீபத்தில் இணையத்தில் நாம் அன்றாடம் உண்ணும் உணவுகளின் தமிழ் பட்டியலை பார்த்தேன். அவற்றை படித்ததில் அதை நடைமுறைப் படுத்தி நமது அன்றாட பேச்சு வழக்கில் கொண்டு வருவது ஒன்றும் கடினமில்லை என்றே தோன்றுகிறது.

சப்பாத்தி----------------------கோந்தடை
புரோட்டா--------------------புரியடை
நூடுஸ்------------------------குழைமா
கிச்சடி-------------------------காய்சோறு, காய்மா
கேக்----------------------------கட்டிகை, கடினி
சமோசா----------------------கறிப்பொதி, முறுகி
பாயசம்-----------------------பாற்கன்னல்
சாம்பார்----------------------பருப்புக்குழம்பு, மென்குழம்பு
பஜ்ஜி-------------------------தோய்ச்சி, மாவேச்சி
பொறை----------------------வறக்கை
கேசரி------------------------செழும்பம், பழும்பம்
குருமா-----------------------கூட்டாளம்
ஐஸ்கிரீம்-------------------பனிக்குழம்பு
சோடா-----------------------காலகம்
டீ-------------------------------தேநீர்
சட்னி-------------------------அரைப்பம், துவையல்
கூல்ட்ரிங்க்ஸ்-------------குளிர் குடிப்பு
பிஸ்கட்----------------------ஈரட்டி, மாச்சில்
போண்டா-------------------உழுந்தை
சர்பத்-------------------------நறுமட்டு
சோமாஸ்-------------------பிறைமடி
பஃப்ஸ்-----------------------புடைச்சி
பன்---------------------------மெதுவன்
ரோஸ்ட்--------------------முறுவல்
லட்டு------------------------கோளினி
ஃப்ரூட் சாலட்-------------பழக்கூட்டு
ஜாங்கிரி---------------------முறுக்கினி
ரோஸ் மில்க்---------------முளரிப்பால்
காபி---------------------------குழம்பி

இதை சடுதியில் மாற்ற நினைத்தால் பேசும் நபர்  பித்து பிடித்தவர் போல் மற்றவருக்கு தோன்றும்..............என்ன செய்வது?

இருந்தாலும் மெல்ல சாகும் தமிழை இன்னும் கொஞ்ச காலம் பிழைக்க வழி செய்யலாம்.



24 comments:

  1. மெல்ல சாகும் தமிழை இன்னும் கொஞ்ச காலம் பிழைக்க வழி செய்யலாம்.
    தங்களின் ஆதங்கம் நியாயமானதே நண்பா....

    ReplyDelete
  2. நல்ல பகிர்வு.///இலங்கைத் தமிழர்(நாம்)கள் கூட,ஆங்கிலம்(தங்கிலிஷ்)கலந்து தமிழில் பேசுவர்(வோம்).(உ+ம்) பஸ் ஸ்ராண்டு(ஹால்ட்)க்குப் போகிறேன்!(பேரூந்து தரிப்பிடத்துக்குப் போகிறேன்.)

    ReplyDelete
  3. யோகராசா வருகைக்கு நன்றி.

    ReplyDelete
  4. #சமீபத்தில் மலேசியா சென்றபொழுது #
    அதுக்குத்தான் இவ்வளவு பில்டப்பா ?
    தம் 3

    ReplyDelete
  5. பகவான்ஜி, சரியா சொன்னீங்க, பயணக்கட்டுரையாக எழுதினா போனி ஆவாது, அதான்...............வருகைக்கு நன்றி.

    ReplyDelete
  6. நல்ல பதிவு கும்மாச்சி..தங்கள் ஆதங்கமும் சரிதான்.....ஆனால் இத்தனை வார்த்தைகளும் எப்படி உடனடியாக .....கற்கலாம் தான்....கணினி, மடிக் கணினி...என்பதெல்லாம் முதலில் கேட்க கடினமாக இருந்தாலும்,இப்போது மிகவும் எளிதாக உபயோகிக்க முடிந்தது போல.......

    .தமிழ் நாட்டில் எல்லாமே அம்மா உணவகம், அம்மா மருந்தகம் எனும் போது பதிவர் கிங்க் ராஜ் அவர்கள் மதர் போட்டுக்கு "அம்மா பலகை" என்று சொல்லி இருந்தார்....அதை வாசித்ததும்...முதலில் தோன்றியது பள்ளிகளில் உள்ள கரும்பலகைகள் எல்லாம் "அம்மா பலகை" ஆகியதோ என்றுதான்........

    ReplyDelete
  7. துளசிதரன் வருகைக்கிற்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

    ReplyDelete
  8. இலங்கை தழர்களும் (தமிழர்களும்)
    ஓரளிவிற்கு (ஓரளவிற்கு).
    பிழை இல்லாமல் எழுதுங்க. நன்றி!!!

    ReplyDelete
  9. This comment has been removed by the author.

    ReplyDelete
  10. எழுத்துப்பிழையை சுட்டிகாட்டியதற்கு நன்றி. தவறு திருத்தப்பட்டுவிட்டது.

    ReplyDelete
  11. வருகைக்கு நன்றி.

    ReplyDelete
  12. அழகிய தமிழில் உணவுகளின் பெயர்களை பகிர்ந்தமை சிறப்பு! ஆனால் இப்படிக் கேட்டால் உணவகம் நடத்துபவர்கள் முழிக்காமல் இருந்தல் சரி! நல்லதொரு பதிவு! நன்றி!

    ReplyDelete
  13. சுரேஷ் வருகைக்கு நன்றி.

    ReplyDelete
  14. மெதுவன்... என்ன இது ஆம்பள பேராட்டம் இருக்கு :))

    ReplyDelete
  15. புடைச்சி கேட்டா....கடைக்காரன் புடைச்சிடாம இருந்தாச் சரி

    ReplyDelete
  16. கலாகுமரன் வருகைக்கு நன்றி.

    ReplyDelete
  17. என்னப்பா கும்மாச்சி தமிழ்தாய் படம் இருக்குமே என்று நினைத்து வந்தேன் என்னை இப்படி ஏமாற்றி விட்டாயே.....ஹும்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

    ReplyDelete
  18. மதுரை தமிழன், சரியா பாருங்க தமிழ்த்தாய் படம் மேலே இருக்கு.

    வருகைக்கு நன்றி.

    ReplyDelete
  19. மற்றவர்களை எல்லாம் குறை சொல்லாமல் வீட்டில்
    குழந்தைகளிடம் பெற்றோர்கள் தமிழில் பேசினாலே தமிழ் மேலும் மேலும் வளரும் கும்மாச்சி அண்ணா.

    ReplyDelete
  20. உண்மை அருணா.

    வருகைக்கு நன்றி.

    ReplyDelete
  21. itho ippadi tamilil type pannave mutiyamal thanglshil type pannum nilamai thaan ullathu. nice article

    ReplyDelete
  22. ஜெயசீலன் தமிழில் தட்டச்சு செய்வது மிகவும் சுலபம். அதற்கான மென்பொருட்கள் நிறைய உள்ளன.

    ReplyDelete
  23. I respect your feeling 👌 - Tamizan to live, stay & enjoy longer, as Tamizan ☝

    ReplyDelete
  24. நல்ல மொழி பெயர்ப்பு , தொடர்ச்சியாக தூயதமிழில் பேசினால் மறை கழன்றவரை போல தான் பார்ப்பார்கள் என்பதே உண்மை !

    ReplyDelete

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.