காதல் கவிதை இச்சைகளை
கனவுகள் வந்து கலைத்திடுதே
மோதல் செய்த விளைவுகளால்
புனையும் ஆசை புதைந்திடுதே
மோதல் செய்த விளைவுகளால்
புனையும் ஆசை புதைந்திடுதே
இயற்கை பாக்கள் இயற்றிடவே
மனது தவிக்கும் காலங்களில்
செயற்கை செயல்களின் விளைவுகள்
தனது கோரமுகம் காட்டிடுதே
எண்ணங்கள் சிறகடிக்கும் வேளையில்
கவிதைகள் வடிக்கும் ஆசைகளை
திண்ணம் கொண்டு அடக்கினால்
புவியில் தமிழ் பிழைத்திடுமே.
18 comments:
புவியில் தமிழ் பிழைத்திட கவிதை வடித்து சொன்ன விதம்தான் கொஞ்சம் இடிக்கிறது !
த ம +1
பகவான்ஜி வருகைக்கு நன்றி.
நல்ல கவிதை
நயமுடன் சொன்னீர்
நன்றி சகோதரரே.
வருகைக்கு நன்றி சகோதரி.
கவிதை அழகாக உள்ளது.
இறுதி வரி மற்ற வரிகளுடன் முரண்படுகின்றதோ?! கும்மாச்சி?
கவிதையின் நடையழகு அருமை நண்பரே..
எனது பதிவு தற்போது ''பாம்பனிலிருந்து... பாம்பாட்டி.''
துளசிதரன் வருகைக்கு நன்றி.
தமிழ் என் போன்ற பதிவர்களிடமிருந்து பிழைக்கட்டும் என்று கடைசி வரிகளில் அந்த முரணை வைத்தேன்.
கில்லேர்ஜி வருகைக்கு நன்றி.
முரண் சொல்லும் கவிதை அருமை! வாழ்த்துக்கள்!
வருகைக்கு நன்றி சுரேஷ்.
கவிதைகள் வடிக்கும் ஆசைகளை
திண்ணம் கொண்டு அடக்கினால்
புவியில் தமிழ் பிழைத்திடுமே.
ம்..... இப்படித்தான் திண்ணம் கொண்டு அடக்க வேண்டும் கும்மாச்சி அண்ணா....)))
be careful - நான் என்னைய சொன்னேன்:))
கடைசிவரி எனக்கா, உங்களுக்கா? நமக்கா பாஸ்:))
வணக்கம்
அழகிய கவிகண்டு என் ஆழ்மனதில் ஆனந்தம் பொங்கியது..
என்னாலும் இடைவிடாது ஓதும் கவி...
நன்றாக உள்ளது பகிர்வுக்கு நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
சகோதரி மைதிலி, கடைசி வரி என்னைப் போன்ற பதிவர்களிடமிருந்து தமிழை பிழைக்க வைக்க எழுதப்பட்டது.
வருகைக்கு நன்றி.
நன்று! நன்றி!
வருகைக்கு நன்றி ஐயா.
சிறந்த பாவரிகள்
தொடருங்கள்
Nice one to enjoy. Thanks.
Post a Comment
படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.