Pages

Tuesday, 22 July 2014

கலக்கல் காக்டெயில்-151

இலங்கையில் சூனா சாமி 


ஆப் கி பார் மோடி சர்க்கார் ஆனவுடன் இலங்கை வெளியுறவுக் கொள்கையில் பெரிய மாற்றம் ஏற்படும் என்று நினைத்தவர்களுக்கு அவர்களின் நடவடிக்கைகள் தமிழ்நாட்டை மத்திய அரசு எந்த நிலையில் வைத்துக்கொண்டிருக்கிறது எனபது வெட்டவெளிச்சமாகிறது. இப்பொழுது சூனா சாமி தலைமையில் ஒரு குழு இலங்கை சென்று ராஜபக்ஷேவை சந்தித்து "கவலை படாதே நைனா, நாங்க எல்லாம் உங்க தோஸ்துதான்" என்று சொல்லியிருக்கிறார்கள்.

மேலும் ஐ. நா. மனித உரிமை குழு தலைவர் நவநீதம் பிள்ளை அவர்களின் குழுவிற்கு விசா மறுத்ததன் மூலம் மத்திய அரசு மனித உரிமை மீறல் விஷயத்தில் தங்களது நிலையை தெளிவாக வெளிப்படுத்தியிருக்கிறது.
சார்க் நாடுகளும் இந்த விஷயத்தில் ஒருங்கிணைந்து இலங்கை மீதான சர்வதேச விசாரணையை எதிர்க்கின்றன.

கழகங்கள் சொல்லிக்கொண்டு இருக்கின்ற "வடக்கு வாழ்கிறது தெற்கு தேய்கிறது" என்ற கூற்றை நமது மத்திய அரசு நிரூபித்துக்கொண்டிருக்கிறது.

நமது முதலமைச்சர்கள் இன்னும் மீனவ பாதுகாப்பிற்கு கடிதம் எழுதிக்கொண்டிருக்கிறார்கள்.

மொத்தத்தில் இரண்டு கழகங்களுமே தமிழ் ஈழத்தை வைத்து அரசியல் செய்துகொண்டிருக்கின்றன, மற்றபடி மீனவ நலன் எல்லாம் சும்மா உட்டாலக்கடிதான்.

இன்று கூட 38 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்திருக்கிறது.

ஈழப்படை நமது மீனவர்களை சுடுவதற்கு இப்பொழுது அதிகாரபூர்வ லைசென்ஸ் கொடுத்துவிட்டார்கள்.

கர்நாடகா அணை திறப்பும் விளக்கமும்

சமீபத்தில் ஹோகநேக்கல்லில் தண்ணீர் ஆர்பரித்து விழுவதாலும் நீர்வரத்து அதிகமாக உள்ளதாலும் பரிசல் சவாரி நிறுத்தப்பட்டுள்ளது, ஆதலால் சுற்றுலாப்பயணிகள் ஏமாற்றமடைந்துள்ளனர் என்று எல்லா தொலைக்காட்சிகளிலும் செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன.

காவிரி ஆற்றில் மழை பிடிப்பு பகுதிகளில் தென்மேற்கு பருவமழை பெய்து கொண்டிருப்பதாலும்  க்ரிஷனராஜா சாகர் மற்றும் கபினி அணைகளின் நீர்வரத்து அதிகமாக இருப்பதாலும்  அணைகளின் பாதுக்காப்பு கருதி மதகுகள் திறக்கப்படுவதாக தொலைக்கட்சிகள் கூறிக்கொண்டிருக்க, கர்நாடக சட்டசபையில் நீர்பாசனத்துறை அமைச்சர் எம்.பி.பாட்டீல் அவர்களோ வேறு விளக்கம் கொடுத்துக் கொண்டிருக்கிறார்.

காவிர் நடுவர்மன்ற தீர்ப்புப்படி ஜூன், ஜூலை, ஆகஸ்டு மாத தவனைகளான முறையே 10, 34, 50 டி.எம்.சி  கொடுப்பதற்காக திறந்து விடுவதாக கூறியிருக்கிறார்.

காவிரியை வைத்து நல்லா அரசியல் பன்றாங்கப்பு.

ரசித்த நகைச்சுவை

ஆடித்தள்ளுபடி கடையில் மனைவிகளை தொலைத்த இரண்டு கணவர்கள் சந்தித்துகொண்டனர்.

முதல்வர்:  என்ன சார் தேடுறீங்க?.

இரண்டாமவர்: என் மனைவியைக் காணோம் தேடிக்கொண்டிருக்கிறேன். சரி நீங்க யாரை தேடுறீங்க?

முதல்வர்: என் மனைவியையும் காணோம்? சரி உங்க மனைவி எப்படி இருப்பாங்க சொல்லுங்க சார்?

இரண்டாமவர்: நல்லா அழகா த்ரிஷா மாதிரி இருப்பாங்க சார், சரி உங்க மனைவி எப்படி இருப்பாங்க அடையாளம் சொல்லுங்க.

முதல்வர்: அவ தொலையட்டும் கழுதை, வாங்க நாம இரண்டுபேரும் சேர்ந்து உங்க மனைவியைத் தேடலாம்!!!!!!!!!!!.

ரசித்த கவிதை

தலை(வர்)கள்!! 


நிலைபோல் வாழ்க்கை இருக்குமென்றே
    நிமிர்ந்த நெஞ்சாய் வலம்வருவர்!
விலைபோல் ஏறி இறங்காமல்
    விதியை வெல்வோம் எனநினைப்பர்!
அலைபோல் ஆட்சி வந்துபோயும்
    ஆளும் வழக்கை மாற்றமாட்டார்!
இலைபோல் மரத்தில் தலையசைக்கும்
    இனமாய் நம்மை எண்ணிடுவார்!

மலைபோல் உயர்ந்த மனமுடையோர்
    மறுவி விட்டார் நம்மிடையே!
சிலைபோல் நாமும் நின்றிருந்தால்
    சின்னப் புழுவும் சீறியெழும்!
உலைபோல் கொதித்த மனத்துடனே
    ஒன்றி ஓங்கிக் குரல்கொடுத்தால்
தலைபோல் இருந்த வாலெல்லாம்
    தாவிக் குதித்தே ஓடிவிடும்!!

நன்றி: அருணா செல்வம்.

ஜொள்ளு





6 comments:

  1. ஆட்சிகள் மாறினாலும் அரசியல் மாறவில்லை என்பது மீனவர்கள் விஷயத்தில் தெளிவாகிவிட்டது! நல்ல பகிர்வு! நன்றி!

    ReplyDelete
  2. பழைய ஜோக் கும்மாச்சி! அருணா செல்வம் கவிதை அருமை

    ReplyDelete
  3. /ஈழப்படை நமது மீனவர்களை சுடுவதற்கு இப்பொழுது அதிகாரபூர்வ லைசென்ஸ் கொடுத்துவிட்டார்கள்./

    என்ன கொடுமையடா சாமி!

    கர்நாடகா இப்பொழுது தண்ணியைத் திறந்துவிட்டே ஆகவேண்டும்.
    இல்லையென்றால் அணை தானாகவே திறந்துகொள்ளும் என்பது
    அவர்களுக்குத் தெரியாதா?

    நகைச்சுவை அருமை.

    இன்று என்னுடைய பாடலா....?
    ஆஹா.... நன்றி நன்றி. மிக்க நன்றி கும்மாச்சி அண்ணா.

    ReplyDelete
  4. தலைவர்கள் பேசிக்கொள்வர்
    ஆனால்
    பாதிப்பது மீனவர்களே!

    ReplyDelete
  5. ஆப் கி பார் மோடி சர்கார் வந்தாலும் ஒண்ணும் ஆகப் போறதில்லை! அரசியல் வாதிங்க அரசியல்வாதிங்கதான்....என்னிக்கு மாறி இருக்காங்க?
    ஜோக்கு ரொம்ப நாள் கழிச்சு கேட்க நல்லாத்தான் இருக்கு....கவிதை அருமை!

    ReplyDelete

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.