கட்ஜும் கருணாநிதியும்
உச்சநீதிமன்ற நீதிபதி மார்கண்டேய கட்ஜுக்கும் கலைஞருக்கும் என்ன வாய்க்கா வரப்பு பிரச்சினை என்று தெரியவில்லை. உச்சநீதிமன்ற நீதிபதி நியமன விஷயத்தில் பிரதமரை கலைஞர் மிரட்டினார் என்று தொடங்கி அடுக்கடுக்காக அவர் மீது குற்றச்சாட்டுகளை அள்ளி விட்டுக்கொண்டிருக்கிறார்.
கலைஞரின் குடும்ப சொத்து விவரங்களைக் கேளுங்கள் என்றும் "அம்மா குட், ஐயா பேட்" என்ற ரேஞ்சில் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக கலைஞரை தாக்கிக்கொண்டிருக்கிறார்.
அவர்களுக்குள் கொடுக்க வாங்கல், வாய்க்கா வரப்பு பிரச்சினை இருக்குமோ?
பாரத் ரத்னா
கிரிகெட் வீரர் சச்சினுக்கு பாரத் ரத்னா விருது என்ற பேச்சு அடிபட ஆரம்பித்தவுடனே தொடங்கியது இந்த விருதின் தரம் பற்றிய சர்ச்சை. இந்த முறை நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், வாஜ்பாய் என்று பல பெயர்கள் அடிபட்டுக்கொண்டிருக்க அதைப் பற்றிய விவாதங்கள் தொடங்கியிருக்கின்றன. மகாராஷ்டிர காங்கிரஸ் வேறு இரண்டு பெயர்களை பரிந்துரை செய்திருக்கிறது. தமிழகத்திலிருந்து யாரோ? தெரியவில்லை.
வர வர பாரத் ரத்னா "விஜய் டீ.வி அவார்ட்ஸ்" ரேஞ்சுக்கு வந்து விட்டது.
கொடிபிடிக்காத ஒரே விலையேற்றம்
சரக்கு விலை ஏறுகிறதாம், மழைக்கால கூட்டத்தொடரில் சட்டசபையில் அறிவிக்கப்பட்டது.
இந்த விலையேற்றம் ஒன்றிற்கு மட்டும்தான் யாரும் போராட்டமோ கொடியோ பிடிக்க மாட்டார்கள்.
ஆனால் குடிகாரர்களுக்கென்று ஒரு சங்கம், பின்னர் கட்சி என்று வரும் நாள் வெகு தூராத்தில் இல்லை.
ரசித்த கவிதை
பார்வை
"வயது முற்றிய
கொலுசுக் கால்களின்
உஷ்ண உரசலை
அதற்கும் மீறிய
அந்தரங்க வலிகளை
சக ஆணின் சபலப் பார்வையால்
வேகமாய்ச் சுற்றிய
விரல்களின் கோபத்தை
சிரிப்புடன் சிதறிய
துணிகளின் துணுக்கை
என்
பனிகொட்டும் இரவில்
எல்லாம் யோசித்தபடி
விழித்துக்கொண்டிருந்தது
ஏற்றுமதி நிறுவனத்தின்
தையல் இயந்திரம்"
-----முத்துக்குமார்
ரசித்த கீச்சுகள்
ஜொள்ளு

புத்துணர்ச்சியுடன் மீண்டும் களம்
இறங்குகிறார் விஜயகாந்த் - செய்தி.#ஆமா இவரு முதுமலை காட்டுக்கு போன யானை
பாரு..புத்துணர்ச்சியா வர்றாரு..!!--------சுபாஷ்
என்னுடைய முதல் பிள்ளை, முரசொலி -கலைஞர்
கருணாநிதி # மத்த புள்ளைங்களால மனக்கஷ்டம், மூத்த புள்ளையால பணக்கஷ்டம் -//----------கருத்து
கந்தன்.
டாஸ்மாக்கினால் தமிழகத்தில் கள்ளச்சாராய
சாவு குறைந்துவிட்டது.- நத்தம்விசுவநாதன் #ஆமாம், கற்ப்பழிப்பு
சாவுதான் அதிகமாகுது.----------தில்லு தொர.
நான் என்ன அவள மாதிரியா, ஓரே ஒருத்தன தான்
வச்சிருக்கேன்,தெருச்சண்டையில் ஒரு குண்டம்மா # இதுல என்னம்மா
பெரும----------ப்ரியா
ஜொள்ளு
9 comments:
கொடிபிடிக்காத ஒரே விலையேற்றம்.....ஹா ஹா ஹா...
இதற்காக கொடிபிடித்து கோஷம் போட்டால் எப்படி இருக்கும்.... யோசித்துப் பார்த்தேன் கும்மாச்சி அண்ணா...
அருணா வருகைக்கு நன்றி.
கொடி பிடிக்காத ஒரே விலையேற்றம்...??? காய்கறி, மளிகை சாமான் விலையேற்றத்துக்கும் யாரும் கொடி பிடிக்கலையே!!!!??
பாரத ரத்னா சத்தியமாக விஜய் டிவி அவார்ட்ஸ் ரேஞ்சுக்கும் கீழே போயிருச்சோனு தோணுது......பெட்டிக்கடைல தொங்கற செய்தி விளம்பரம் போல....
கவிதை அருமை!
துளசிதரன் வருகைக்கு நன்றி.
வணக்கம்
எல்லாம் வியாபாரமாகிவிட்டது. நன்றாக சொல்லியுள்ளீர்கள் பகிர்வுக்கு நன்றி
த.ம 3வது வாக்கு
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
பாரதரத்னா -விஜய் அவார்ட்ஸ். lol !!!
கவிதையும் கீச்சுக்களும் அருமை சகோ!!
சிறந்த கருத்துப் பகிர்வு
//ஆனால் குடிகாரர்களுக்கென்று ஒரு சங்கம், பின்னர் கட்சி என்று வரும் நாள் வெகு தூராத்தில் இல்லை.// அதல்லாம் ஆரம்பித்து வெகு நாட்கள் ஆகிவிட்டது BBC TAMIL NEWS :மது அருந்துவோரின் உரிமைக்குரலும்; மதுவிலக்கு கோருவோரின் நியாயங்களும் http://www.bbc.co.uk/tamil/india/2014/08/140801_prohibition.shtml
அருமையான கவிதை தோழா..
Post a Comment
படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.