களிமண்ணால் செய்திடுவோம் கணபதியே
கண்கள் மூடி கும்பிடுவோம் கணபதியே
குடையொன்று வைத்திடுவோம் கணபதியே
கொழுக்கட்டை படைத்திடுவோம் கணபதியே
கடலை சுண்டல் அளித்திடுவோம் கணபதியே
கற்பூரம் காட்டிடுவோம் கணபதியே
கரிய முகக் கடவுளான கணபதியே
கருணையுடன் கேளும் ஐயா கணபதியே
கட்டைவண்டியில் ஏற்றி உன்னை கணபதியே
கடலில் கொண்டு போடப் போறோம் கணபதியே
கலகங்கள் வராமல் இருக்க கணபதியே
காக்கிசட்டை துணையிருப்பார் கணபதியே
12 comments:
அற்புத கீர்த்தி வேண்டின்
ஆனந்த வாழ்க்கை வேண்டின்
நற் பொருள் குவிதல் வேண்டின்
நலமெல்லாம் பெருக வேண்டின்
பொற்பதம் பணிந்து பாரீர்
பொய்யில்லை கண்ட உண்மை.
விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள் நண்பா.....
அன்புடன்
கில்லர்ஜி.
நன்றி கில்லர்ஜி.
விநாயக சதுர்த்தி வாழ்த்துகள்.
விநாயக சதுர்த்தி வாழ்த்துக்கள் கும்மாச்சி அண்ணா.
நன்றி அருணா.
வணக்கம்
முதல்வனைப் போற்றும் முதற்கவி கண்டு மகிழ்ந்தேன்.. பகிர்வுக்கு நன்றி
த.ம 1வது வாக்கு
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
விநாயகச் சதுர்த்தி வாழ்த்துக்கள்! எளிமையான அருமையான கவி!
துளசிதரன் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி.
அது சரி இந்தக் காலத்தில் சாமிக்குக் கூடத்தான் காவலர்கள் தேவைப்படுகினர் :)))
வாழ்த்துக்கள் சகோதரா ரசித்து மகிழ வைத்த சிறந்த நற் கவிதைக்கு .
வருகைக்கு நன்றி சகோதரி.
விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்.
சிறந்த பாவரிகள்
தொடருங்கள்
உண்மை! கவிதை அருமை!
Post a Comment
படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.