Pages

Wednesday, 13 August 2014

குடி உயரக் கோன் உயரும்!!!


தமிழா 
உனக்கென்ன 
தலைக்கு மேலா 
வேலை?
ஆயிரம் ஆயிரம் 
இலவசங்கள்
சரக்கை கொடுத்து, 
கொறிக்க  
சைடு டிஷும் கொடுத்து
கலந்தடிக்க தண்ணியும் 
இன்ன பிற பொருளையும் 
இறைத்து 
தாலிக்கு தங்கம் 
வீட்டிற்கு மனை 
பிழைப்பிற்கு ஆடு, மாடு,
கோழி 
உழைப்பினி 
தேவையில்லை.

வருத்தரைக்க மசாலா 
வறுத்தெடுக்க எண்ணெய்
உவர்ப்பிற்கு 
மலிவு விலையில் 
உப்பு.

களித்திருக்க 
தொலைகாட்சி பெட்டி
நரம்புகளின் நாட்டியம் 
வரம்பு மீற
விளக்கணைக்க மின்வெட்டு 
சரசத்திற்கு கட்டில் 
தலையணை மெத்தை
பிறக்கும் சிசுவிற்கு 
பதினாறு பொருட்கள் 
நிறைந்த பெட்டகம்
இனி என்ன
பிணி வந்தால் 
பிழைத்து  எழ 
மாற்றாக
மலிவு விலையில் 
மருந்து.

அம்மா ஆட்சியில் 
சும்மாவே கிடைக்கும்
தமிழா இனி நீ 
தனியாக உழைக்கத் 
தேவையில்லை

நீர் உயர 
நெல் உயரும்
நெல் உயரக் 
கோன் உயரும் 
கோன் உயரக் 
குடி உயரும்-
என்று இயம்பியவளோ 
இன்றிருந்தால் -இங்கு 
குடி உயரக் 
கோன் உயரும்
நீரும் நெல்லும் 
தாமாக 
உயர்ந்து நிற்கும்
என்றே எடுத்துரைப்பாள்.

ஆதலினால் தமிழா நீ 
வைகறையில் துயிலெழுந்து 
கைக் காசில் 
சரக்கடித்து 
விளக்கணைத்து 
களித்திருப்பாய்.













10 comments:

  1. வணக்கம்
    எல்லோரையும் சிந்திக்கவைக்கும் கவிதை பகிர்வுக்கு நன்றி
    என்பக்கம்
    ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: இதயத்தை திருடியது நீதானே.....:      

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  2. ரூபன் வருகைக்கு நன்றி.

    ReplyDelete
  3. எல்லாம் இலவசம்!..... எங்கே சென்று கொண்டிருக்கிறோம்.....

    ReplyDelete
  4. வெங்கட் நாகராஜ் வருகைக்கு நன்றி.

    ReplyDelete
  5. கவிதையாலேயே தலையில் கொட்டியிருக்கிறீர்கள் அருமை.

    ReplyDelete
  6. படித்தேன், அழுவதா...சிரிப்பதா அன்று தெரியவில்லை.

    ReplyDelete
  7. விசு வருகைக்கு நன்றி.

    ReplyDelete
  8. nalla kavithai

    ReplyDelete
  9. அட இவ்வளவு இலவசங்கள் தருகிறார்களா.....? பேஷ் பேஷ்.

    ReplyDelete
  10. சிறந்த பாவரிகள்
    தொடருங்கள்

    ReplyDelete

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.