Tuesday, 30 September 2014

ஜாமீன் கடலிலேயே இல்லையாம்!!!

சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பும் அதை தொடர்ந்து மக்கள் நடத்திய அறவழி பேருந்து எரிப்பு, கடையடைப்பு, சூறையாடல் போராட்டத்தையும் தமிழகமே ஏன் இந்த உலகமே கண்டு வியந்தது.

பதினெட்டு வருட காலம் இழுத்தடிக்கப்பட்ட பொழுது கண்டும் காணாமல் இருந்த அல்லக்கைகள் இப்பொழுது தீர்ப்பு நாள் தசரா விடுமுறைக்கு முன்பு வந்ததை கடுமையாக விமர்சித்துக் கொண்டிருக்கிறார்கள்.

போதாத குறையாக இன்று சினிமா உலகம் வேறு மௌன உண்ணாவிரதப் போராட்டம் நடத்திக்கொண்டிருக்கிறார்கள். அவர்களின் மேடைக்கு பின்னால் "தர்ம தேவதைக்கே அநீதியா?" என்று பேனர் வேறு. அம்மாவின் அல்லகைகள் தெய்வத்தை மனிதன் தண்டிப்பதா என்று போஸ்டர் அடித்து ஓட்டிக்கொண்டிருக்கிறார்கள். அம்மா திரும்ப வந்தால் திரைப்பட சமூகத்திற்கு அள்ளி அள்ளி கொடுப்பார்கள் என்று சொம்படிக்கும் போராட்டம்.

அம்மா காவிரி நதி நீர் கேட்டு போராடியதால்தான் கர்நாடக அரசு அவரை பழி வாங்கிவிட்டதென்று அல்லக்கைகள் கூறிக்கொண்டிருக்கிறார்கள். இவர்களின் அரசியல் அறிவை என்னவென்று கூறுவது?.

அ.தி.மு.க வின் கொள்கை பரப்புச் செயலாளர் இன்னும் ஒரு படி மேலே போய் இது இலங்கை அரசின் சதி என்கிறார். அம்மா வெளியே வந்தால் இன்னொரு இன்னோவா எதிர் பார்க்கிறார் போலும்.

புதிய அமைச்சரவை பதவி ஏற்ற நிகழ்ச்சி இது வரை உலகமே கண்டிராத அழுவாச்சி காவியம். அம்மா இதை தொலைகாட்சியில் பார்த்தார்களாம், அதிகமாக அழுதவர்களுக்கு அடுத்த "லட்டு" கிடைக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

இந்த வழக்கின் போக்கை அறிந்தவர்களுக்கு இந்த தீர்ப்பு ஒன்றும் வியப்பை ஏற்படுத்தியிருக்காது. முதலமைச்சராக இருக்கும் பொழுது தன்னுடைய பேரிலேயே சொத்துக்கள் வாங்குவது நல்லதல்ல என்று அறிவுரை கூறிய ஆடிட்டர்களை அடித்து உதைத்ததற்கு இப்பொழுது அனுபவித்துக் கொண்டிருக்கிறார்.

மேலும் இது ஒன்றும் நீதியரசர் குன்ஹாவின் தனிப்பட்ட கருத்து அல்ல, இதற்கு முன் இந்த வழக்கை விசாரித்த மற்ற நீதிபதிகளின் கருத்தைக்கொண்டும் எழுதப்பட்ட தீர்ப்பு. ஆதலால் இப்பொழுது தீர்ப்பு எழுதிய நீதிபதியையோ அல்லது மற்றவர்களையோ குறை சொல்லுவது அடித்த கணவனை விட்டு விட்டு சிரித்த கொழுந்தன் மேல் கோபம் கொள்ளுவதுபோல் உள்ளது.

இன்று போடப்பட்ட ஜாமீன் மனுவின் விசாரணையும் அக்டோபர் 6ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டிருக்கிறது. இதற்கு காரணம் வழக்கின் ஆவணங்கள் இன்னும் கர்நாடக உயர்நீதிமன்றத்திற்கு தரப்படவில்லையாம். இதை வைத்து ஜாமீன் கேட்டுப் பார்த்த ராம் ஜெத்மால்நியின் கோரிக்கையும் நிராகரிக்கப் பட்டுவிட்டது.

இந்த தீர்ப்பு எந்த மேல் முறையீட்டிலும் மாறாது என்பதை அம்மாவிற்காக வாதாடிய வழக்கறிஞர்களே நன்கு அறிந்திருப்பார்கள்.

அப்படியே தீர்ப்புகள் திருத்த நேரலாம் என்றால் அதற்கு அரசியல் காரணங்கள்தான் பொறுப்பாக இருக்கும் என்பதை நாம் போகப் போக உணர நேரிடும்.

கூக்குரலாலே கிடைக்காது
எந்த கோர்டுக்குப் போனாலும் ஜெயிக்காது

என்ற கண்ணதாசனின் வரிகளுக்கு பொழிப்புரை எழுதிக்கொண்டிருக்கிறது முன்னாள் தமிழக முதலமைச்சரின் நிலை.





Follow kummachi on Twitter

Post Comment

Sunday, 28 September 2014

மகளிரணியும், ம(த)ர்ம தரிசனமும்

பதினெட்டு வருடங்களாக நமது நீதித்துறையை கேலிப்பொருளாக்கி எள்ளி நகையாடியவர்களுக்கு எமனாக வந்தது இந்த தீர்ப்பு.

1991-1996 வரை பதவியில் இருந்த பொழுது முதலமைச்சர் முறைகேடாக சொத்து சேர்த்ததாக சுப்ரமணிய சுவாமி அவர்களால் தொடரப்பட்ட வழக்கு எத்துணையோ விசாரணைகள், சாட்சியங்கள், பிறழ்சாட்சியங்கள் என்று களம் கண்டு நொண்டிக்கொண்டிருந்தது. இந்த வழக்கு எப்பொழுது முடியும் என்ற விரக்தி நிலைக்கு தள்ளப்பட்டு பின்னர் ஒரு வழியாக உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படி ஓரளவிற்கு வேகம் பிடித்தது.

இது கர்நாடகா சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்ட பின்னரும் வாய்தா  மேல் வாய்தா வாங்கி இழுத்தடிக்கப்பட்டது.


இந்த வழக்கை முதலிலிருந்தே தொடர்ந்து கண்காணித்து கொண்டு இருந்தவர்களுக்கு இந்த தீர்ப்பு ஒன்றும் ஆச்சர்யமில்லை. மல்லிக்கர்ஜுனையா நீதிபதியாக இருந்த பொழுது தீர்ப்பின் போக்கை எல்லோராலும் ஓரளவிற்கு யூகிக்கமுடிந்தது. பின்னர் அவரின் மாற்றம், ஜான் மைக்கேல்டி . குன்ஹா அவர்கள் பொறுப்பேற்ற பொழுது அவரின் கண்டிப்பு நடவடிக்கைகள் ஆளும் கட்சியின் வயிற்றில் புளியைக் கரைக்க ஆரம்பித்தது. இருந்தாலும் இது பொய்யாக புனையப்பட்ட வழக்கு என்று சொல்லிக்கொண்டிருந்தார்கள். முதலமைச்சர் வேண்டும் தெய்வங்களும், மத்தியில் ஆட்சிமாற்றமும் தீர்ப்பின் போக்கை மாற்றிவிடும் என்று மனப்பால் குடித்துக்கொண்டிருன்தனர்.

நேற்றைய தினம் முதலமைச்சரும் அவரது அல்லக்கைகளும் நீதிமன்ற வளாகத்திற்கு வந்த விதம் கர்நாடக காவல்துறையை மிரள வைத்திருக்க வேண்டும்.

கடைசியில் தீர்ப்பு வெளியிட வெகு நேரமாகியது. ஆனால் காலையில் பதினொரு மணிக்கே ரத்தத்தின் ரத்தங்கள் வெடி வைத்தும், இனிப்பு கொடுத்தும் "அம்மா நிரபராதி" என்று தீர்ப்பு எழுதியது வழக்கின் நகைச்சுவைக்காட்சி.


தீர்ப்பு வெளியான பின் ரத்தத்தின் ரத்தங்கள் மன்னிக்கவும் பொதுமக்கள் தங்களது கண்டனத்தை கடைகளை மூடியும், மூடாத கடைகளை சூறையாடியும், பேருந்தை எரித்தும் அமைதி வழியில் போராட்டம் நடத்தினர். இந்த அமைதிப் போராட்டத்தை நமது தமிழக காவல்துறையும் பார்த்துக்கொண்டிருந்தது. (இந்த அறவழி போராட்டத்தை தூண்டியதாக எதிர்கட்சி தலைவர் மீது வழக்கு போடப்பட்டிருப்பது உபரி செய்தி).
அமைதி வழியில் கண்டனம் தெரிவித்த காட்சி 

அம்மாவிடம் இத்துணை நாள் பம்மியிருந்த அணில்குஞ்சுகளும், பெருச்சாளிகளும் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

சமூக வலைதளங்களில் பலவிதமான கருத்துக்கள் பரிமாறப்பட்டன. இத்துணை இலவசங்கள் கொடுத்த அம்மாவிற்கு சிறையா என்று பரிதாபட்டனர் சில அப்ரசண்டிகள். இந்த இலவசம் ஏதோ அம்மா தான் அடித்த அறுபத்தியாறு கோடியிலிருந்து கொடுத்ததாக நினைத்துக்கொண்டிருப்பார்கள் போலும்.

மகளிரணி ரத்தத்தின் ரத்தங்கள் தீர்ப்பு வந்தவுடன் ஆடிய ருத்ராதாண்டவத்தை ஊரே கண்டு களித்தது. இந்த வழக்கை தொடர்ந்து வைத்த சூனா சாமியை நினைத்தால் பாவமாக இருக்கிறது. முன்பு ஒரு முறை அவர் கோர்டுக்கு வந்த பொழுது மகளிரணியின் தர்ம தரிசனம் ஏனோ எல்லோர் கண் முன்னும் வந்து போகிறது.

மொத்தத்தில் இந்த தீர்ப்பு மக்கள் சொத்தில் ஆட்டையைப்போடும் யாவருக்கும் ஒரு எச்சரிக்கை. அது ஐயாவோ அம்மாவோ யாராக இருந்தாலும் சரி. இனி அரசியல்வாதிகளின் நடத்தையை சிறிதேனும் மாற்றும் வாய்ப்பு இந்த சரித்திரப் புகழ்பெற்ற தீர்ப்பு ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது.






Follow kummachi on Twitter

Post Comment

Tuesday, 23 September 2014

கலக்கல் காக்டெயில்-157

இசை மேதை மேன்டலின் ஸ்ரீநிவாஸ்

சென்னை உரத்தொழிற்சாலையில் பனி புரிந்துகொண்டிருந்த காலம். மேற்கு மாம்பலத்தில் வாசம். ராமநவமி உத்சவம் மேற்கு மாம்பலம் அயோத்தியா மண்டபத்தில் மிகவும் பிரபலம்.

கல்லூரி நாட்களில் பகலில் தூங்கி இரவில் படிப்பது வழக்கம். ராமநவமி உத்சவத்தின் பொழுது படிப்பதற்காக விடுமுறை விடப்படும் நாட்களில் கிட்டத்தட்ட எல்லா இசை கச்சேரிகளுக்கும் இரவு எட்டு மணிக்கு மேல் ஆஜராவது வழக்கம். ஆனால் வேலைக்கு சென்ற பிறகு விடுமுறை நாட்களில்தான் கச்சேரி கேட்கமுடியும். அந்த வருடம் நிகழ்ச்சி நிரலில் மேன்டலின் ஸ்ரீநிவாஸ் என்று போட்டிருந்தது. புது பெயர் என்பதால் சற்று அலுப்புடந்தான் கச்சேரி கேட்க சென்றேன். கச்சேரி முதலில் ஹம்சத்வணி ராகத்தில் தொடங்கிய பொழுது வாசிப்பவர் கண்ணுக்கு தெரியவில்லை. வயலின் வித்வான் ஜாம்பவான் லால்குடி. கிட்டத்தட்ட நான்கு மணி நேர கச்சேரியில் சிறுவன் அசத்தினான்.

கச்சேரி முடிந்தவுடன் காரியதரிசி வேட்டிக்கட்டிக்கொண்டு அமர்ந்து வாசித்த சிறுவனை குழந்தை போல் தூக்கி கூட்டத்தினருக்கு காட்டினார். பிற்பாடு அதே ஸ்ரீநிவாசை பதினைந்து வருடங்களுக்குப் மத்திய கிழக்கு நாடுகளில் கச்சேரி செய்ய வந்த பொழுது நேரில் சந்தித்தேன். பின்னர் அவரது கச்சேரியை ரசித்த பொழுது அவரின் அபார வளர்ச்சி புரிந்தது. நேரில் சந்தித்த பொழுது அவரது பணிவு வியக்க வைத்தது. தனது புகழை புத்திக்கு ஏற்றிக் கொள்ளாத பணிவு.
இவரை போன்ற மேதைகள் ஆயிரம் வருடத்திற்கு ஒரு முறைதான் பிறப்பார்கள். அவரது அகால மரணம் இசைக்கு நேர்ந்த ஒரு பெரிய விபத்து.

உள்ளாட்சி தேர்தலும் அம்மா மனநிலையும்

எதிர்பார்த்தது போலவே அம்மா கட்சிதான் எல்லா இடத்திலும் வெற்றிக்கொடி நாட்டியது. தமிழக பி.ஜே.பி க்கு தமிழ் நாட்டில் காலூன்றியத்தில் சற்று மகிழ்ச்சிதான்.

ஆனால் அம்மா இதையெல்லாம் கொண்டாடும்  மனநிலையில் இல்லை எனபது ஊரறிந்த உண்மை.

பெங்களூரு வழக்கு முடிந்து தீர்ப்பின் எதிர் பார்ப்பு தலையை தின்று கொண்டிருக்கிறது. இரண்டு மாநில காவல்துறையுமே உஷார் படுத்தப்பட்டுள்ளது.

ஒட்டு மொத்த இந்தியாவுமே எதிர்பார்க்கும் தீர்ப்பு இது. இந்த தீர்ப்பும் இந்தியாவின் அரசியல் நிதர்சனத்தை தோலுரிக்கக் காத்திருக்கிறது.

ரசித்த கவிதை

சாபம்

அசிங்கமாக
இருப்பதாய்ச் சொல்லி
ஆற்றங்கரையிலிருந்து
அப்புறப்படுத்தினார்கள்
எங்கள் வீடுகளை.
அழகூட்டுவதாய்ச் சொல்லி
அங்கேயே
கட்டிக்கொண்டார்கள்
அவர்களின் மாடிகளை.
கடலுக்குப் போய்விடும்
கவலை வேண்டாமெனச் சொல்லி
கழிவுகளைக் கொட்டினார்கள்.
குளிர்பான ஆலைக்கு
வேண்டுமென
குழாய் பதித்து
நீரை உறிஞ்சினார்கள்.
அப்போதெல்லாம்
ஆற்று மணலில்
அழுது புரண்டபடி
'மாரியாத்தா கேட்பாள்’ என
மண்ணை வாரித் தூற்றுவாள்
அம்மா.
இன்று
அவள்
வாரித் தூற்றிய மண்ணையும்
வாரிக்கொண்டு போகிறார்கள்
லாரிகளில்.
என்ன செய்வார்கள் இனி...
அம்மாவும்
மாரியாத்தாவும்!
----------------------நன்றி: கண்மணிராசா


ஜொள்ளு




Follow kummachi on Twitter

Post Comment

Saturday, 20 September 2014

முற்றும் துற............. இருந்தாலும் மூடிட்டு இரு...........

வலை கீச்சுதே..............இந்த வாரம் ரசித்த கீச்சுகள்.........

மேக்கப் போடாத பெண்ணும் டாப் அப் பண்ணிவிடாத பையனும் கடைசிவரை வீட்டுலேதான் இருக்கணும்---------------சி.பி.செந்தில்குமார்

மக்கள் சினிமாக்கு அடிமை ஆயிட்டாங்க......சினிமாக்காரங்க கவர்மெண்டுக்கு அடிமை ஆயிட்டாங்க----------அரண்மனை கனல்.


ஒரு பெண் மற்றொரு பெண்ணை முன்பக்கமாகப் பார்த்தும் பின்பக்கமாகப் பார்த்தும் பொறாமைக் கொள்ளக்கூடிய விஷயங்கள் உண்டு-பெரிய கண்கள்/நீண்ட கூந்தல்----------------புகழ்

தீயினால் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே பீரினால் வந்த தொப்பை--டாஸ்மாக்கடி(மை)கள்----------கருத்து கந்தன்.

இந்த படத்த வாங்கி நம்ம டீவிலேயும் போடாம மத்த டீவிலேயும் போடவிடாம மக்களுக்கு நல்லது பண்றோம்---ஜெயா டிவி மக்கள் நல திட்டங்கள்-----------ஆல்தோட்ட பூபதி.

இன்னா செய்தாரை  ஒருத்தல் அவர்நாண நாதாரி எனக் கூப்பிட்டுவிடல் ----------------தமிழ்ப்பறவை 

கிளிஷேக்களில் சுவாரசியமானவை சுந்தர் சியின் கிளிஷேக்கள் மட்டுமே# குளிச்சுட்டு டவலோட வரீங்க மேடம்....அப்படியே அவுந்துருது----------ராஜன் ராமநாதன். 

23 ஆண்டுகளில் 24 ட்ரான்ஸ்பர்களாம்.......!! இதைவிட  வேறென்ன பதக்கம் தந்து பாராட்டிவிட முடியும் இவர்கள் சகாயம் அவர்களின் நேர்மைக்கு-----------நாட்டுப்புறத்தான்.

நானும் பச்சை தமிழன்தான், எனக்கும் தமிழ் உணர்வு உள்ளது....ஏ. ஆர். முருகதாஸ்--#அப்போ உங்க பேரை முருகனடிமைன்னு மாத்திக்கோங்க-----நாட்டி நாரதர்.

அதாகப்பட்டது சித்தர் ஒருத்தர் ஏன்னா சொல்றார்னா........."முற்றும் துறை இருந்தாலும் மூடிட்டிரு........"P----------------டவுட் 

பப்லூ பய படம் பாத்தா மாதிரியே குஸ்பக்காகிட்ட  பிட்ட போடுறான் பாருங்க மக்களே...RT வேணும்னா கேளு நாயே----------இளநி வியாபாரி.

நாளை முதல் கழகம் சார்பாக தினமும் ஒரு டுவிட்டுக்கு சிறந்த ட்விட்டுக்கான விருது வழங்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்!!---------சந்து முன்னேற்றக்கழகம்.

படத்துல அணிலுக்கு பல role இதுல drainage cleaning, சவரம் பண்றது, light repairing &சாமியாராங்குறத கண்டுபிடிக்குறதுல வச்சிருக்காங்க டுஸ்டு-----ருகஷாந்த்.

14 கழுதை வயசாச்சு இன்னமும் குஸ்புவுக்கு பாமாலை சாத்திக்கிட்டு இருக்கு இங்கன :) மாமி தேடப்போகின்றார் ஆத்துக்கு போங்களேன் :)-----------ராதை.

என்னது கத்தி டீசர் சரியில்லையா. சரிப்படாது சரிப்படாது ஆரம்பிங்கடா துப்பாக்கி டீசர்தான் மாஸ் # கட்சிக்காரனே இப்படி பேசினா என்ன அர்த்தம்----------நாட்டி நாரதர்.

ஒருத்தன் பேரு கதிரேசன் இன்னொருத்தன் பேரு ஜீவானந்தம் இது போதாதா........இதவிட விஜய்கிட்ட என்ன டிபரன்ஸ் எதிர்ப்பாக்குறீங்க டபுள் ஆக்சன்ல------------பாரதி.

நன்றி: சந்தில் சிந்து பாடும் தோழமைகளுக்கு 



Follow kummachi on Twitter

Post Comment

Friday, 19 September 2014

டீ வித் முனியம்மா பார்ட்-21

முனியம்மா இன்னா இன்னிக்கி முந்தியே வந்து குந்திகினு கீற.....

இன்னாடா பயக்கட செல்வம் புச்சா கேக்குற, உன்னிய மாறி பொயுதன்னிக்கம் கடில குந்திகினு ஈ ஓட்ட சொல்றியா? வியாவாரம் ஓவரு, வந்துகிணன்.

டேய் மீச சூடா ஒரு டீ போடுறா.........

டேய் எனிக்கும் ஒரு சைனா டீ போடு..

தோடா லிங்கம் சாரு, நாடாரும் பேசிகினு வந்துகினு கீறாங்க பாரு, பாய் எங்கேடா ஆலியே காணோம்.

அவரு வந்துருவாரு..........லோகு மார்கெட்டுக்கு போயிகிறான், வந்துருவான்.

சரி இன்னா நூசு போட்டுக்கிறான், அத்தே சொல்லு முனியம்மா.....

டேய் பழம் இந்தவாரம் நெரிய சினிமா மேட்டரு கீதுடா........

இந்நாடு சினிமாவா? அரசியல் ஒன்நியம் இல்லியா?

டேய் போடா டோமரு. தமிய நாட்டுல அல்லாம் ஒண்ணுதான்.

அப்பால அரசியலிலுல இன்னா நூசு முனியமா.

இருக்குது லிங்கம் சாரு, உ.பி, ராஜஸ்தான், பீகார், இடைத்தேர்தல், கோயமுத்தூர், தூத்துக்குடி உள்ளாட்சி இடைத்தேர்தல், அம்மா வழக்கு, சகாயம் விசாரணை குழுன்னு நெறைய மேட்டரு கீது...

அஹான் முனிம்மா உ.பி ல பி.ஜே.பி அடிவாங்கிக்கிரானுங்க, ராஜச்தான்லேயும் அடி வாங்கிக்கிரானுங்க.

காங்கிரஸ் காரன் கூட கெலிச்சிகிரானுங்க போல.

அதான் சொல்லிக்கிரானுங்க, காங்கிரசுக்கு ராகுல் பையன் இந்த தபா போல அதான் கெலிச்சிகிரானுங்க. பி.ஜே.பி ல மோடி போவல அதான் மேட்டரு.

தமியு நாட்டுல நடந்த உள்ளாட்சி தேர்தலுல ஒரே அடி தடி, மண்டை உடச்சுகினு கள்ள ஒட்டு போட்டு டப்பா டான்சு ஆடிகிரானுங்க.

அதெல்லாம் வயக்கம்தான் முனிமா.

அம்மா சொத்து குவிப்பு வயக்குல தீர்ப்பு 27ம் தேதிக்கு மாத்திகிறாங்க. கோர்ட்டு இடத்தகூட அம்மா கேட்டுதுன்னு மாத்திகிரானுங்க.
அம்மா சொத்த பத்தி பேப்பருல போட்டுக்கிறான் பாரு நமக்கு படிக்க சொல்ல டாவு தீர்ந்து போவுது. சொம்மா பறந்து பறந்து சொத்த வலிச்சி போட்டுகீது போல.

இன்னா ஆவும் முனிமா.

இன்னா ஆவும் நாடார் அல்லாம் துட்டு பேசும். அம்மா சுத்தமுன்னு சொல்லுவாங்க.

அப்படிங்கற முனிமா....

வாடா லோகு, டேய் லோகு நீ லுச்சா பையன் உனுக்கு தெரியாது, என் செர்விசுல எத்தினி வயக்கு நான் பாத்துகீறேன்.

முனிம்மா கிரானைடு கேசுல விசாரிக்க சொல்லி சகாயம் சார போட்டாங்களே நம்ம ஊரு கோர்ட்டு, மேட்டறு  இன்னாச்சு?.

லோகு அந்தாளு விசாரிக்கக்கூடாதுன்னு அம்மா பெரிய கோர்ட்டுல பெட்டிசனு போட்டுது. அதேல்லாம் கடியாது நீ கம்முன்னு கெடன்னு சொல்லிட்டானுக.

அம்மா எந்த கோர்டுக்கு போனாலும் ஆப்படிக்கிரானுங்க.

முனிம்மா ஆலிவுட்டுல இருந்து வந்து போனாரே ஆர்னால்டு ஸ்க்ரூ டிரைவரு இன்னாத்துக்கு வந்தாரு?

டேய் பழம் இன்னாடா ஸ்க்ரூட்ரைவரு, ஸ்பான்நேரு அவரு பேரு ஆர்னால்டு ஸ்வார்ச்னேகருடா, நம்ம நாய் சேகரு மாறியே பேரு வச்சிகினு கீறாரு.

அப்டியா?

அவரு சங்கரு படத்துக்கு பாட்ட வெளியே வுட சொல்ல வந்துகிராறு, ஆனா நடுவாலேயே காண்டாய் எஸ்கேப் ஆயிட்டாரு.

ஏனாம்?

அவர கூடத்துல குந்த வச்சி, ரொம்ப லேட்டாக்கிகிரானுங்க.

அவரு மெர்சலாயிட்டாரு, அப்பால மேடைக்கு போயி ரெண்டு வார்த்த பேசலான்னு போய்கிராறு, அதுக்கு வியா எடுக்குறவனுங்க நீ போய் கூட்டத்துல குந்து அப்பால உன்னயே  கூப்புடுவோமுன்னு சொல்லிகிறாங்க, அவரு போடா..........த்தா ன்னு போய்கினே இருந்துகிராரு.

இன்னா சங்கரு படத்த கதைய அவனவன் சொல்லிகினு கீறான்.

ஆமாண்டா ட்ரைலர் பாத்தே கதைய சொல்லுவானுங்க நம்மாளுங்க.

அப்பால கத்தி, சுத்தி லைகா, ராஜபக்ஷே படம் வர உடமாட்டோம் அப்படின்னு டகில்  பாச்சா காமிச்சிகினு கூவிகினு இர்ந்தாணுங்கலே இன்னாச்சு? முனியம்மா.

டேய் படத்த அம்மா டீ.வி வாங்கி அவனுகளுக்கு ஆப்பு வச்சிட்டுது. அல்லாம் துட்டுடா..........காசு, பணம், துட்டு, மணி..........மணி

அப்ப ஈயம், தமியு அல்லாம் சொம்மனங்காட்டியாக்கும்.

தமியு நாட்டுல அல்லாரும் அத்த வச்சி காலத்த ஒட்டிகிரானுங்க, சினிமா காரனும் அதுல ஒரு கை பாக்குறான். இதெல்லாம் சொம்மாடா. இப்போ படத்துக்கு நெல்லவெளம்பரம்னு சொல்லு.

ஆமாண்டா லோகு அது நம்ம ஜனத்துக்கு எங்க பிரியுது, தீவாலி அன்னிக்கி போயி டிக்கட்டுக்கு அடிச்சிகுவானுங்க.............பேமானிங்க.

சரி முனிம்மா பேப்பர குடு, நடுப்பக்கத்துல இன்னா போட்டுகிறான்.











Follow kummachi on Twitter

Post Comment

Thursday, 18 September 2014

கத்தியும், கத்தியவர்களும் கடுக்கா கொடுத்தவளும்

கத்தி படம் தொடங்கப்பட்டதிலிருந்தே பிரச்சினைகளும் தொடங்கியது. இந்த படத்தை தயாரிக்கும் லைகா நிறுவனம் ராஜபக்ஷேவின் பினாமி என்றும் இந்தப் படத்தை தடை செய்யவேண்டும் என்று ஏதோ ஒரு மாணவர் அமைப்பு மற்றும் சில இயக்கங்களும் தொண்டை கிழிய கத்திக்கொண்டிருந்தார்கள்.

இதனால் நடிகருக்கும் இயக்குனருக்கும் லடாய், வீட்டுக்கு வந்தவரை பேசாமல் அனுப்பினார் என்று உபரி கதைகளும் உதயமாகின. மேலும் வழக்கம்போல் இதுவும் ஒரு மார்க்கெட்டிங் தந்திரம் என்ற ஒரு சாரரும் சந்தேகித்தனர்.

குறுக்கே பூந்து கும்மியடித்த ஒரு புரட்சி இயக்குனரும் தன் பங்கிற்கு படக்குழுவிற்கு ஆதரவளித்து வாங்கிக்கட்டிக்கொண்டார். மேற்படி பிரச்சினைகளால் ஊடகங்களும் நன்றாக கல்லா காட்டிக்கொண்டிருந்தன.

இன்று இசை வெளியீடு என்று இருந்த பொழுது, நேற்றையதினம்  இந்த படத்தை எதிர்க்கும் இயக்கங்கள் எல்லாம் ஒன்றாக சேர்ந்து சென்னை மாநகர போலிஸ் கமிஷனரிடம் ஒரு மனுவைக் கொடுத்து இசை வெளியீட்டு  நிகழ்ச்சியை தடை செய்யவேண்டும் என்று கேட்டுக்கொண்டன.

ஈது இப்படி இருக்க அடப் போங்கையா எல்லோரும் வேலையைப் பாருங்கள் என்று இந்த படத்தை அம்மா தொலைக்காட்சி வாங்கிவிட்டதாகவும், மேலும் இசை வெளியீட்டு நிகழ்ச்சியை ஒளிபரப்பும் உரிமையையும் அம்மா தொலைக்காட்சியே வாங்கிவிட்டதாகவும் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.
பிச்சிபுடுவேன் பிச்சி...........

மொத்தத்தில் ஈழப்போராட்டம் என்பது இங்கு வியாபராமாகப் போய்விட்டது. இனி லைக்காவாவது, ராஜபக்ஷேயாவது................எல்லாம் அம்மாடா, காசுடா, போடா............




Follow kummachi on Twitter

Post Comment

Monday, 15 September 2014

கலக்கல் காக்டெயில்-156

அம்மா கவுன்ட் டவுன் ஸ்டார்ட்ஸ் நௌ

பெங்களுரு சொத்து குவிப்பு வழக்கின் தீர்ப்பு நாள் நெருங்கிக்கொண்டிருக்கிறது. ஒட்டு மொத்த இந்தியாவே இந்த வழக்கின் தீர்ப்பை எதிர்ப்பார்த்து காத்திருக்கிறது. பதினெட்டு வருடங்களாக வாய்தா மேல் வாய்தா வாங்கி இழுக்கடிக்கப்பட்டு ஒரு வழியாக எல்லோருடைய வாதங்களும் முடிந்து நீதிபதி குன்ஹா தீர்ப்பை மிக்க பாதுகாப்புடன் எழுதிக்கொண்டிருக்கிறார்.

அடுத்து என்ன நடக்கப்போகிறது? என்று ஆளுங்கட்சி வட்டாரம் கூட்டம் மேல் கூட்டம் போட்டு யோசித்துகொண்டிருக்கிறார்கள். தீர்ப்பிற்காக அம்மா அல்லக்கைகள் பெங்களுருவில் டேரா அடித்திருக்கிறார்கள்.

என்ன நடக்கும்? மிஸ்டர்  விசுவாசம்  தயாராகிக்கொண்டிருக்கிறார்.

மொத்தத்தில் இந்த தீர்ப்பு நமது அரசியல் கூத்துக்களுக்கும், நீதியின் நம்பகத்தன்மைக்கும் வைத்திருக்கும் பரீட்சை.

அம்மா நிரபராதி என்றால் என்ன அறிக்கைகள் வரும், அல்லது குற்றவாளி என்றால் எங்கு பற்றி எறியும், எதற்கும் தலீவர் இந்தமுறை லுங்கிக்கு உள்ளே அண்ட்ராயர் போட்டுக்கொண்டு தயாராக இருப்பது அவருக்கும் நமக்கும் நல்லது...............மிடில.......ப்பா.

குப்புறப் படுத்த நித்தி

கடந்த இரண்டு வாரங்களாக பத்திரிகைக்காரர்களுக்கு பெங்களுருவில் ஒரே கொண்டாட்டம்தான். ஒரு பக்கம் சொத்துகுவிப்பு வழக்கு, மறுபக்கம் நித்திக்கு ஆண்மை பரிசோதனை. மெத்தப்படித்த ஆர்த்தி அறுபத்திமூன்று முறை கற்பழித்ததாக குற்றம் சாட்டியதால் நித்திக்கு மேற்படி பரிசோதனை செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

நித்தி முதலில் முரண்டு பிடித்து குப்புறப்படுத்துக் கொண்டாலும் பிற்பாடு சோதனைகளுக்கு ஈடு கொடுத்திருக்கிறார். ஒன்பது மணிநேர பரிசோதனையாம், நின்று விளையாடி இருக்கிறார் போல.

இந்த சோதனை நடந்த விதத்தையும், அதன் முடிவுகளையும் வைத்து ஊடகங்கள் கல்லா கட்டிகொண்டிருக்கின்றன.

ஆக மொத்தம் நமக்கு பரபரப்புக்கு பஞ்சமில்லை.

ரசித்த கவிதை

இன்பமே சூழ்க எல்லோரும் வாழ்க !!...



அன்பைப் பொழிவோம் எந்நாளும்
அதுவே வாழ்வின் பயனாகும் !
இன்பம் துன்பம் எல்லாமும்
இறைவன் விட்ட வழியாகும் !

அன்னல் காந்தி மகானைப்போல்
அகிலம் போற்ற வாழ்ந்திடுவோம்
இன்னல் வந்த போதினிலும்
இயல்பாய் என்றும் இருந்திடுவோம் !

தன்னைத் தந்து உழைப்பவரின்
தன்மானத்தை மதித்திடுவோம்
எண்ணக் கருத்தை எவர் சொல்லினும்
ஏற்றுக்கொண்டு சரி செய்வோம் !

பஞ்சம் வந்த போதினிலும்
பகிர்ந்து உண்ணப் பழகிடுவோம்
தஞ்சம் என்று வருவோர்க்கெல்லாம்
தளராதிங்கே உதவிடுவோம் !

வள்ளல் குணத்தை வளர்த்திடுவோம்
வாழ்வில் இன்பம் கண்டிடுவோம்
தெள்ளத் தெளிவாய்ப் பொருள் விளங்கத்
திறமை கொண்டு வாதிடுவோம் !

உள்ளம் மகிழ்வாய் இருந்திடவே
உழைப்பை நாளும்  நம்பிடுவோம்
அள்ள அள்ளக் குறையாத
அறிவை என்றும் வளர்த்திடுவோம் !

தானம் தர்மம் செய்திடுவோம்
தரத்தை நாளும் உயத்திடுவோம்
கானம் இசைத்து மகிழ்ந்திடுவோம்
கனவில் கூட அமைதி கொள்வோம் !    

நன்றி: அம்பாளடியாள்.

ஜொள்ளு





Follow kummachi on Twitter

Post Comment

Friday, 12 September 2014

அம்மா "எல்லாம்" சும்மாவா?

"உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்"

மகாகவியின் வாக்கு. ஆனால் நமது அரசாங்கம் அவை இரண்டையும் கல்லறையில் புதைத்துவிட்டது என்பது தற்பொழுது மத்திய அரசு வெளியிட்ட பொருளாதார வளர்ச்சி அறிக்கையில் வெட்ட வெளிச்சமாகியது.

கடந்த சில வருடங்களாக மிகவும் பின் தள்ளியிருந்த பீகார் மாநிலம் பொருளாதார வளர்ச்சியில் முதலிடம் வகிக்கிறது, கடந்த ஆண்டில் கிட்டத்தட்ட பதினொரு விழுக்காடு வளர்ச்சி பெற்றுள்ளது. மற்ற எல்லா மாநிலங்களுமே நல்ல வளர்ச்சியைக் கண்டுள்ளது. நமது தமிழகம் மூன்று புள்ளி சொச்ச விழக்காடு வளர்ச்சி பெற்று கடைசியில் உள்ளது என்பது வேதனை.

இதற்கு காரணம் ஒன்று யாருக்கும் தெரியாத ரகசியம் இல்லை. மாநில அரசின் தவறான கொள்கைகளும், முக்கியமாக மின்வெட்டுமே காரணம் என்பது ஊரறிந்த உண்மை. நமது மாநிலத்தில் முதலீடு செய்பவர்களை அடுத்த மாநில முதல்வர்கள் வளைத்து வளைத்து பிடித்து போட்டது வரலாறு. சென்னைக்கும் அதன் அருகே உள்ள வெளிநாட்டு நிறுவனங்களுக்கும் தங்கு தடையின்றி மின்சாரம் ஒரு சில காரணங்களால் அளிக்கப்பட்டது என்பது முதல்வருக்கே வெளிச்சம்.

எல்லா தொழிற்சங்கங்களும் மற்றும் நிர்வாகிகளும் இந்த மின்வெட்டை காரணம் கூறுகின்றனர். தமிழ் நாட்டின் தொழில் நகரங்களான கோவையும், திருப்பூரும் தங்களது தனித்தன்மையை இழந்து இரண்டு வருடங்களாகிறது. அம்மா வந்தால் பணப்புழக்கம் இருக்காது என்ற கூற்று "மாயை" என்று நம்பிக்கொண்டிருந்தவர்களும் இபோழுது உண்மை நிலை கண்டு வாயடைத்து நிற்கின்றனர்.

இந்த அரசு ஒட்டு வேட்டையை மனதில் கொண்டே இலவசங்களும், மற்றும் மலிவு விலை அம்மா திட்டங்களும் அரங்கேற்றின. அமைச்சர்களின் செயல்பாடுகள் பற்றி சொல்லவே  வேண்டாம். இதற்கு சிறந்த உதாரணம் "சகாயம்" பனி இடைமாற்றம். அம்மா சட்டசபையில் பேசும்பொழுது அவர்களுக்கு நேர் பின்னால் அமர்ந்து பெஞ்சு தட்டும் அமைச்சரே இதற்கு காரணம் என்று ஊடகங்கள் கதறுகின்றன. அமைச்சர் சொன்ன ஆட்களுக்கு தீபாவளி விற்பனையில் ஒப்பந்தம் கொடுக்கப்படவில்லை, என்று லஞ்சம் தவிர்த்து நெஞ்சம் நிமிர்த்து என்ற அதிகாரிக்கு இப்பொழுது பள்ளிக்குழந்தைகளின் வினாடிவினா வளர்ச்சிக்கு பொறுப்பு.

ஆனால் அம்மா ஆட்சியில் ஒன்று அபார வளர்ச்சி பெற்று கோட்டை ஏறி கோடி நாட்டியது என்பதை இந்த புள்ளிவிவரம் தெரிவிக்க வில்லை.

சாராய உற்பத்தியில் நமக்குதான் முதலிடம். இது ஏன் வளர்ச்சியில் சேர்க்கப்படவில்லை.

சரக்கடித்து சிந்திப்போம்.




Follow kummachi on Twitter

Post Comment

Thursday, 11 September 2014

பாரதியை நினைவுகொள்வோம்

செப்டம்பர் 11ம் தேதி என்றால் நமக்கு நினைவுக்கு வருவது புரட்சி கவி பாரதியார்தான்.

எண்பத்திமூன்று வருடங்களுக்கு முன்பு இதே நாளில்தான் சுப்ரமணிய பாரதியின் தமிழ் மூச்சு நின்றது, இன்று அவரது நினைவாக இரண்டு கவிதைகளை நினைவு கொள்வோம்.

"பூட்டைத் திறப்பது கையாலே-நல்ல
மனந் திறப்பது மதியாலே"
பாட்டைத் திறப்பது மதியாலே-இன்ப
வீட்டைத் திறப்பது பெண்ணாலே

ஏட்டைத் துடைப்பது கையாலே-மன
வீட்டைத் துடைப்பது மெய்யாலே
வேட்டை யடிப்பது வில்லாலே-அன்புக்
கோட்டை பிடிப்பது சொல்லலே

காற்றை யடைப்பது மனதாலே-இந்தக்
காயத்தைக் காப்பது செய்கையாலே,
சோற்றைப் புசிப்பது வாயாலே-உயிர்
துணி வுறுவது தாயாலே.


சென்றதினி மீளாது, மூடரே! நீர்
எப்போதும் சென்றதனையே சிந்தை செய்து
கொன்றழிக்கும் கவலையெனும் குழியில் வீழ்ந்து
குமையாதீர்!சென்றதனைக் குறித்தல் வேண்டாம்
இன்றுபுதி தாய்ப்பிறந்தோம் என்று நீவிர்
எண்ணமதைத் திண்ணமுற இசைத்துக் கொண்டு
தின்றுவிளை யாடியின்புற் றிருந்து வாழ்வீர்;
தீமையெல்லாம் அழிந்துபோகும், திரும்பிவாரா.



Follow kummachi on Twitter

Post Comment

Wednesday, 10 September 2014

சரக்கடிக்கும் தியாகிகள்

சமீபத்தில் ஜூனியர் விகடனில் "குடிகாரர்கள் விழிப்புணர்வு சங்கம்" தலைவர் செல்ல பாண்டியன் அவர்களை பேட்டி கண்டு ஒரு கட்டுரையை வெளியிட்டிருந்தது. அந்த கட்டுரை ஒரு எகத்தாள தொனியில் இருந்தாலும் அதில் உள்ள சில நியாயமான உண்மைகள் சிந்திக்க வைக்கிறது.

இந்த மாதிரி கோரிக்கைகள் வைக்கத் தூண்டியது அரசியல் வாதிகள் தான். ஒட்டு கேட்க இவர்களுக்கு சரக்கும், கோழிகுருமாவும் கொடுத்து பழக்கப் படுத்திவிட்டார்கள். இப்பொழுது குடிகாரர்களுக்காக ஒன்றுமே செய்யவில்லை என்று இவர்கள் ஆதங்கம்.

முதலில் இவர்களது வாகனங்களுக்கு தனி நிறத்தில் நம்பர் ப்ளேட் கேட்கிறார்கள். அந்த நிற நம்பர் வண்டியை மட்டும் போலிஸ் பிடிக்கவே கூடாதாம். பின்னே எல்லா வண்டியையும் பிடித்து ஊது ஊது என்றால் குடிகாரர்கள் என்ன செய்வார்கள், வாரம் ஒரு முறை குடித்தாலே மாதம் முழுவதும் நாறும் சரக்கை அரசாங்கம் அநியாய விலைக்கு விற்கிறது.

ஒவ்வொரு டாஸ்மாக் அருகிலும் ஒரு டாக்டர் இருக்கணும். குடியினால் வரும் பாதிப்புகளுக்கு இலவச சிகிச்சையும் மருந்தும் கொடுக்கப்பட வேண்டும்.

வாங்கும் சரக்கிற்கு சரியான பில் கொடுக்க வேண்டும். குடியினால் இறப்பவர் குடும்பத்தை அரசாங்கமே தத்தெடுத்துக்கணும். சினிமாவில் குடிக்கிற சீன வைத்தால் அந்தப் படத்தில் வரும் வருவாயில் 25 விழுக்காடு குடிகாரர்களுக்கு தரவேண்டும்.

குடிகாரகளுக்கென்று ஒருவருக்கு ஐந்து லட்சரூபாய் இன்சூரன்சு பாலிசி அரசு தரவேண்டும். சரக்கை ஆலையிலிருந்து எடுத்து வரும்பொழுது விபத்துக்குள்ளானால் இன்சூரன்ஸ் உள்ளது ஆனால் குடிகாரர்களுக்கு இல்லை. நியாயம்தானே.

மேலும் ஒரு லிட்டர் சரக்கு உற்பத்தியாக 12 ரூபாய்தான் செலவாகிறது, ஆனால் ஒரு க்வாட்டர் எனபது ரூபாய்க்கு விற்கப்படுகிறது, ஆதலால் அரசு விலை குறைப்பு செய்யவேண்டும், ஒரு க்வாட்டர் இருபது ரூபாய்க்குமேல் விற்கக்கூடாது.

மேலும் இந்த டாஸ்மாக் கடைகள் ஒரு மாட்டுத்தொழுவத்தைவிட கேவலமான நிலையில் உள்ளது. சரக்கடிக்குமுன் ஒருவன் அங்கு வெகுநேரம் மூச்சை பிடித்துக்கொண்டு நிற்க வேண்டியுள்ளது. அரசாங்கத்திற்கும் பெரிய அளவு வருவாய் ஏற்படுத்தும் இந்த இடத்திற்கு ஒரு குறைந்த பட்ச குளிர்சாதன வசதி கூட இல்லை. மின்சார துறையும், போக்குவரத்துத் துறையும் நஷ்டத்தில் இயங்கிக்கொண்டிருக்கும் பொழுது, குடி துறை அரசாங்கத்திற்கு கொள்ளை லாபத்தை கொடுத்துக்கொண்டிருக்கிறது.

குடிகாரங்களை தியாகின்னு அறிவிக்கனும் என்ற போஸ்டர்கள் வடசென்னை முழுவதும் ஒட்டப்பட்டிருந்ததாம். பின்னே அரசாங்கம் நடத்துவதற்கு உண்டான பெரும்பொருளை இவர்கள் தங்கள் குடலை உருக்கி, பெண்டாட்டி பிள்ளைகளின் ஏளனப் பேச்சையும், தெரு நாயோடு படுத்து உறங்கியும் ஈட்டிக்கொண்டுக்கின்றனர்.

நியாயமான கோரிக்கைதான், கூடிய விரைவில் இந்த சங்கம் ஒரு குடிகாரர்கள் முன்னேற்ற கட்சியாக உருவெடுத்து ஆட்சியைப் பிடித்தாலும் பிடிக்கலாம்.

நாம் விரும்பும் ஆட்சி மாற்றம் ஒருவேளை இவர்களால்தான் வருமோ?


Follow kummachi on Twitter

Post Comment

Tuesday, 9 September 2014

டீ வித் முனியம்மா பார்ட் - 20


முனிம்மா நேரத்தே வன்னு.........இய்யாலு லோகு எவ்விடே போயி......

டேய் மீச நீ இன்னாடா பொலம்பிகினு கீற, டீ போடுறா, ஓணத்துக்கு இன்னா செய்த.........

என்ன முனிம்மா நானு எந்த செய்யும்.......டீ அடிச்சு.......

லோகு இன்னாடா பயம் ஒருக்கா சைடு வாங்கிக்கினு வரான்.....

கோயம்பேடு போ சொல்ல காவால வியுந்துகினான் போல.

இன்னாடா செல்வம் இன்னா ஒரு சைடா நடக்குற.....

அடப்போ முனிம்மா, நேத்திக்கி சரக்கு எடுக்க போ சொல்ல ஒரே மயை, பஸ்ஸுகாரன் நடுரோடுல வண்டிய நிறுத்திகினு எறங்கு எறங்குன்றான், அப்படியே ரன்னிங்குல எறங்க சொல்ல காவால கால விட்டேனா, காலு சுளுக்கு ஆகிப்போயிடிச்சி. காபரேசன் காரனுங்க காவாவ மூடாம வச்சிகிரானுங்க பேமானிங்க.

முனியம்மா போர் வெல் அடிக்க சொல்ல மூடி போடாம போனா பைனடிப்பாங்க இதுக்கு யாருக்கு பைனடிப்பாங்க.

அடப் போ லிங்கம் சாரு, இதெல்லாம் கண்டுக்காம போய்க்கினு இருக்க சொல்லதான் இவனுங்க வேலய ஒயுங்க செய்ய மாட்டேங்குறானுங்க.

சரி முனிம்மா பெங்களூரு கேசு தீர்ப்பு வந்திடும் போல கீதே.

அஹான் பாய் கச்சிகாரனுங்க ஒட்டலில ரூம்பு போட்டு குந்திகிரானுங்க. பெங்களூரு, மாண்டியா, குத்ரேமுக்குன்னு அல்லா ஊருலயும் அம்மா கட்சிகாரனுங்க குந்திகிரானுங்க.

அப்படியா இது இன்னா இது?.

ஆமாண்டா லோகு, அம்மாவ ராங்கா எதுவும் செய்யல அப்படி கண்டி ஜட்ஜு சொன்னாருன்னா ஊருல ஒரே திரு வியாதான், கர்நாடகா போலீசுதான் பிதறல் எடுத்துகிரானுங்க.

அம்மா தப்புன்னு சொன்னா இன்னா செய்வானுங்க?

அப்டிகா தீர்ப்பு வந்தா நாடார், கச்சிகாரனுங்க வூடு கட்டி கலாட்டா செயவானுங்களான்னு, ஊரே நாறிடும்,   போலிசு பம்முது.

இந்த வாரம் இன்னா எல்லா நூசும் பெங்களுருலேய நடக்குது.

ஆமாண்டா  செல்வம் அந்த சாமிக்கி அண்ட்ராயர உருவிட்டானுங்க போல.
நித்தி ஒரே காண்டாய்கினாராம், திருவண்ணாமலைக்கி ஷிஃப்டு ஆவப்போராராம்.

முனிம்மா மதுரைல மருவாட்டி போஸ்டர் ஒட்டி தலீவர உசுப்புராங்காட்டியும்.

லிங்கம் சார் அது தலீவருக்கில்ல, தளபதிய உசுப்புரானுங்க. இளைஞரனிய  மீட்க வந்த கும்கியே ன்னு போஸ்டர் வச்சி அயகிரி மவனுக்கு கொம்பு சீவரானுங்க.

உள்ளாட்சி தேர்தலுல அம்மா கட்சி எதிர்க்க ஆளில்லாம கெலிச்சிகினு கீறாங்க.

ஆமாம் பாய் இப்போ உனுக்கு துட்டு வேணுன்னு வையி, அம்மா கட்சிக்கி எதிர வேட்பாளர் மனு கொடுத்த, உனுக்கு துட்டு குடுத்து வாங்கிடுவாங்க.

அடப்போ முனிம்மா அதெல்லாம் நமக்கு ஆவாது, நம்ம மாதிரி ஆளுங்கள டின்னு கட்டிடுவானுங்க.

அப்பால இன்னா சினிமா நூசு முனிம்மா.

செல்வம் இன்னாடா உனுக்கு அவசரம், அவன் அவன் ராஜபக்ஷே துட்டுல படம் எடுத்துகினு மெர்சல் ஆயிகிறான்.........நீ இனாடான்னா பொம்பளயாளுங்க படத்துக்கு அலைஞ்சிகினு கீற.





Follow kummachi on Twitter

Post Comment

Monday, 8 September 2014

கலக்கல் காக்டெயில்-155

சிஷ்யைகளும் ஆண்மை பரிசோதனையும்

நித்திக்கு இன்று ஆண்மை பரிசோதனை செய்யப்படுகிறது என்று செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த சோதனையை தவிர்க்க அவரது மேல் முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்ததால் இன்று நித்திம் சிஷயைகள் புடை சூழ மருத்துவ மனையில் ஆஜராகி பரிசோதனைக்கு தயாராகிவிட்டார்.

தனக்கு குழந்தைபோல உடல் தான் இருப்பதாக அவர் கூறியிருந்ததால், கடுப்பான கோர்ட்டு அவுத்துப்பாருங்கடா!!!!!! என்று ஆணையிட்டுவிட்டது.

நித்தி படு உஷார் பார்ட்டி தான், வெவரமாத்தான் சிஷயைகள் புடை சூழ போயிருக்கிறார்.

உள்ளாட்சி இடைத்தேர்தல்

கோவை, நெல்லை, தூத்துக்குடி மாநகராட்சி மேயர் பதவிக்கும் மேலும் எட்டு மாநகராட்சி கவுன்சிலர் பதவிகளுக்கும் உள்ளாட்சி இடைத்தேர்தல் நடக்க உள்ளது. வழக்கம்போல அம்மா தனது வேட்பாளர்களை அறிவித்துவிட்டார். ஐயாவும் மற்ற கட்சிகளும் எப்படியும் ஒன்றும் தேறாது என்று "போட்டியில்லை" என்று ஜகா வாங்கிவிட்டார்கள்.

இது ஒரு "பணநாயக படுகொலை". போட்டியே இல்லை என்றால் பணம் எப்படி புழங்குவது? ஜனநாகம் எப்படி பிழைப்பது?

இதெல்லாம் நியாயமில்ல சொல்லிப்புட்டோம், ஆமா!!

லஞ்சம் தவிர்த்து நெஞ்சம் நிமிர்த்து

மேற்படி வாசகத்தை தன் அறையில் வைத்திருந்ததாலும், மேலும் அமைச்சரின் உத்தரவுகளுக்கு பணிந்து போகததாலும் கோ ஆப்டெக்ஸ் நிர்வாகப் பதவியிலிருந்து ஐஏஎஸ் அதிகாரி சகாயம் இடமாற்றம் செய்யபட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

சகாயத்திற்கு இது ஒன்றும் புதிதல்ல, சகாயம் எல்லோரிடமும் சகாயமாகப் போகவேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்.

ரசித்த கவிதை

சருகு

சட்டைப் பையில் கைவிடும்போது
சில பயணச் சீட்டுகளோடு சேர்ந்து
சருகு ஒன்றும் இருந்தது.
கூர்ந்து கவனித்தபோது
அந்தச் சருகு
பொன்னிறத்தில் நரம்புகள் தெரிய
என் தாத்தாவின் சருமத்தை ஒத்திருந்தது.
இன்று பயணித்த ஊர்களில்
ஏதோ ஓர் ஊராக இருக்கும்
இந்தச் சருகுக்கு
அவ்வூரிலும் ஒரு தாத்தா இருப்பார்
இந்தச் சருகுபோல!
நன்றி -------------------------------------உழவன் 

ஜொள்ளு





Follow kummachi on Twitter

Post Comment