Friday, 12 September 2014

அம்மா "எல்லாம்" சும்மாவா?

"உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்"

மகாகவியின் வாக்கு. ஆனால் நமது அரசாங்கம் அவை இரண்டையும் கல்லறையில் புதைத்துவிட்டது என்பது தற்பொழுது மத்திய அரசு வெளியிட்ட பொருளாதார வளர்ச்சி அறிக்கையில் வெட்ட வெளிச்சமாகியது.

கடந்த சில வருடங்களாக மிகவும் பின் தள்ளியிருந்த பீகார் மாநிலம் பொருளாதார வளர்ச்சியில் முதலிடம் வகிக்கிறது, கடந்த ஆண்டில் கிட்டத்தட்ட பதினொரு விழுக்காடு வளர்ச்சி பெற்றுள்ளது. மற்ற எல்லா மாநிலங்களுமே நல்ல வளர்ச்சியைக் கண்டுள்ளது. நமது தமிழகம் மூன்று புள்ளி சொச்ச விழக்காடு வளர்ச்சி பெற்று கடைசியில் உள்ளது என்பது வேதனை.

இதற்கு காரணம் ஒன்று யாருக்கும் தெரியாத ரகசியம் இல்லை. மாநில அரசின் தவறான கொள்கைகளும், முக்கியமாக மின்வெட்டுமே காரணம் என்பது ஊரறிந்த உண்மை. நமது மாநிலத்தில் முதலீடு செய்பவர்களை அடுத்த மாநில முதல்வர்கள் வளைத்து வளைத்து பிடித்து போட்டது வரலாறு. சென்னைக்கும் அதன் அருகே உள்ள வெளிநாட்டு நிறுவனங்களுக்கும் தங்கு தடையின்றி மின்சாரம் ஒரு சில காரணங்களால் அளிக்கப்பட்டது என்பது முதல்வருக்கே வெளிச்சம்.

எல்லா தொழிற்சங்கங்களும் மற்றும் நிர்வாகிகளும் இந்த மின்வெட்டை காரணம் கூறுகின்றனர். தமிழ் நாட்டின் தொழில் நகரங்களான கோவையும், திருப்பூரும் தங்களது தனித்தன்மையை இழந்து இரண்டு வருடங்களாகிறது. அம்மா வந்தால் பணப்புழக்கம் இருக்காது என்ற கூற்று "மாயை" என்று நம்பிக்கொண்டிருந்தவர்களும் இபோழுது உண்மை நிலை கண்டு வாயடைத்து நிற்கின்றனர்.

இந்த அரசு ஒட்டு வேட்டையை மனதில் கொண்டே இலவசங்களும், மற்றும் மலிவு விலை அம்மா திட்டங்களும் அரங்கேற்றின. அமைச்சர்களின் செயல்பாடுகள் பற்றி சொல்லவே  வேண்டாம். இதற்கு சிறந்த உதாரணம் "சகாயம்" பனி இடைமாற்றம். அம்மா சட்டசபையில் பேசும்பொழுது அவர்களுக்கு நேர் பின்னால் அமர்ந்து பெஞ்சு தட்டும் அமைச்சரே இதற்கு காரணம் என்று ஊடகங்கள் கதறுகின்றன. அமைச்சர் சொன்ன ஆட்களுக்கு தீபாவளி விற்பனையில் ஒப்பந்தம் கொடுக்கப்படவில்லை, என்று லஞ்சம் தவிர்த்து நெஞ்சம் நிமிர்த்து என்ற அதிகாரிக்கு இப்பொழுது பள்ளிக்குழந்தைகளின் வினாடிவினா வளர்ச்சிக்கு பொறுப்பு.

ஆனால் அம்மா ஆட்சியில் ஒன்று அபார வளர்ச்சி பெற்று கோட்டை ஏறி கோடி நாட்டியது என்பதை இந்த புள்ளிவிவரம் தெரிவிக்க வில்லை.

சாராய உற்பத்தியில் நமக்குதான் முதலிடம். இது ஏன் வளர்ச்சியில் சேர்க்கப்படவில்லை.

சரக்கடித்து சிந்திப்போம்.




Follow kummachi on Twitter

Post Comment

11 comments:

Thulasidharan V Thillaiakathu said...

நல்ல கேள்விகள்! பீஹாரே முன்னேறி இருக்கும் பொது தமிழ் நாடு? நல்ல பதிவு....

Unknown said...

அந்த வளர்ச்சி பேப்பரை யாரோ தலைகீழாக வைத்து படித்துவிட்டார்கள் என்று அம்மாவின் அடிமை சொல்லும்.

கும்மாச்சி said...

அசோக்ராஜ் வருகைக்கு நன்றி.

Anonymous said...

இதை விட அவலமாக ஆட்சி செய்ய முடியுமா என்று தெரியவில்லை ...
ஆட்சி திறமை என்பது வேண்டும். மோடி இடம் சென்று கற்று வரலாம்.
ஒய்வு எடுத்தால் அரசு இந்த நிலையில் தான் செல்லும்.
எதிர்ப்பவர் வாயை பணம் /அதிகாரம் கொண்டு எவ்வளவு நாட்கள் அடைக்க முடியும்.
வாய் பேச்சு இல்லாமல் தொழில் வளர முனைந்து உழைத்தால் நாடு வளம் பெறும்.
அமைச்சர்கள் மிகவும் திறமை அற்றவர்களாக, எதிர் கருத்து சொல்லாமல் இருந்தால் நாட்டிற்கு மிக சிரமம்.
எவ்வளவு தான் பெரிய அறிஞனாக இருந்தாலும் , இரண்டு , மூன்று மூளைகளுடன் போட்டி போடும் போது தோற்று விடும். பலர் சேர்ந்து தேர் இழுக்க வேண்டும்.

kingraj said...

சாராய உற்பத்தியில் நமக்குதான் முதலிடம். இது ஏன் வளர்ச்சியில் சேர்க்கப்படவில்லை. சரியா கேட்டீங்க ? இதை முதல்ல சேர்க்க சொல்லுங்க அப்புறம் தமிழகத்தை யாராலும் பின்னுக்கு தள்ள முடியாது.என்றுமே நாம தான் நம்பர் 1.

கும்மாச்சி said...

ராஜ் உண்மைதான், சாராயம் உற்பத்தியில் நம்மை யாரும் அடித்துக்கொள்ளமுடியாது.

KILLERGEE Devakottai said...

யோசிக்க வைத்தது தங்களது கேள்வி....

Anonymous said...

Valarchi illai endralum sari pannikalam, Jana nayagamae illai. Ethir katchi endru ondru irukka theriyalai. Pathirikaigal sutham, adutha super star yaar endru theermaanika vote eduppu mattum nadatha thuppu irukku, matrabadi aponnum laayaki illai.

Jim

கும்மாச்சி said...

கில்லர்ஜி வருகைக்கு நன்றி.

”தளிர் சுரேஷ்” said...

மிகவும் வருத்தப்பட வேண்டிய செய்தி! மிக அருமையாக ஆதங்கத்துடன் எழுதி உள்ளீர்கள்! நம்மால் அதைத்தவிர என்ன செய்துவிட முடியும்! நன்றி!

கும்மாச்சி said...

சுரேஷ் வருகைக்கு நன்றி.

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.