Tuesday, 30 September 2014

ஜாமீன் கடலிலேயே இல்லையாம்!!!

சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பும் அதை தொடர்ந்து மக்கள் நடத்திய அறவழி பேருந்து எரிப்பு, கடையடைப்பு, சூறையாடல் போராட்டத்தையும் தமிழகமே ஏன் இந்த உலகமே கண்டு வியந்தது.

பதினெட்டு வருட காலம் இழுத்தடிக்கப்பட்ட பொழுது கண்டும் காணாமல் இருந்த அல்லக்கைகள் இப்பொழுது தீர்ப்பு நாள் தசரா விடுமுறைக்கு முன்பு வந்ததை கடுமையாக விமர்சித்துக் கொண்டிருக்கிறார்கள்.

போதாத குறையாக இன்று சினிமா உலகம் வேறு மௌன உண்ணாவிரதப் போராட்டம் நடத்திக்கொண்டிருக்கிறார்கள். அவர்களின் மேடைக்கு பின்னால் "தர்ம தேவதைக்கே அநீதியா?" என்று பேனர் வேறு. அம்மாவின் அல்லகைகள் தெய்வத்தை மனிதன் தண்டிப்பதா என்று போஸ்டர் அடித்து ஓட்டிக்கொண்டிருக்கிறார்கள். அம்மா திரும்ப வந்தால் திரைப்பட சமூகத்திற்கு அள்ளி அள்ளி கொடுப்பார்கள் என்று சொம்படிக்கும் போராட்டம்.

அம்மா காவிரி நதி நீர் கேட்டு போராடியதால்தான் கர்நாடக அரசு அவரை பழி வாங்கிவிட்டதென்று அல்லக்கைகள் கூறிக்கொண்டிருக்கிறார்கள். இவர்களின் அரசியல் அறிவை என்னவென்று கூறுவது?.

அ.தி.மு.க வின் கொள்கை பரப்புச் செயலாளர் இன்னும் ஒரு படி மேலே போய் இது இலங்கை அரசின் சதி என்கிறார். அம்மா வெளியே வந்தால் இன்னொரு இன்னோவா எதிர் பார்க்கிறார் போலும்.

புதிய அமைச்சரவை பதவி ஏற்ற நிகழ்ச்சி இது வரை உலகமே கண்டிராத அழுவாச்சி காவியம். அம்மா இதை தொலைகாட்சியில் பார்த்தார்களாம், அதிகமாக அழுதவர்களுக்கு அடுத்த "லட்டு" கிடைக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

இந்த வழக்கின் போக்கை அறிந்தவர்களுக்கு இந்த தீர்ப்பு ஒன்றும் வியப்பை ஏற்படுத்தியிருக்காது. முதலமைச்சராக இருக்கும் பொழுது தன்னுடைய பேரிலேயே சொத்துக்கள் வாங்குவது நல்லதல்ல என்று அறிவுரை கூறிய ஆடிட்டர்களை அடித்து உதைத்ததற்கு இப்பொழுது அனுபவித்துக் கொண்டிருக்கிறார்.

மேலும் இது ஒன்றும் நீதியரசர் குன்ஹாவின் தனிப்பட்ட கருத்து அல்ல, இதற்கு முன் இந்த வழக்கை விசாரித்த மற்ற நீதிபதிகளின் கருத்தைக்கொண்டும் எழுதப்பட்ட தீர்ப்பு. ஆதலால் இப்பொழுது தீர்ப்பு எழுதிய நீதிபதியையோ அல்லது மற்றவர்களையோ குறை சொல்லுவது அடித்த கணவனை விட்டு விட்டு சிரித்த கொழுந்தன் மேல் கோபம் கொள்ளுவதுபோல் உள்ளது.

இன்று போடப்பட்ட ஜாமீன் மனுவின் விசாரணையும் அக்டோபர் 6ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டிருக்கிறது. இதற்கு காரணம் வழக்கின் ஆவணங்கள் இன்னும் கர்நாடக உயர்நீதிமன்றத்திற்கு தரப்படவில்லையாம். இதை வைத்து ஜாமீன் கேட்டுப் பார்த்த ராம் ஜெத்மால்நியின் கோரிக்கையும் நிராகரிக்கப் பட்டுவிட்டது.

இந்த தீர்ப்பு எந்த மேல் முறையீட்டிலும் மாறாது என்பதை அம்மாவிற்காக வாதாடிய வழக்கறிஞர்களே நன்கு அறிந்திருப்பார்கள்.

அப்படியே தீர்ப்புகள் திருத்த நேரலாம் என்றால் அதற்கு அரசியல் காரணங்கள்தான் பொறுப்பாக இருக்கும் என்பதை நாம் போகப் போக உணர நேரிடும்.

கூக்குரலாலே கிடைக்காது
எந்த கோர்டுக்குப் போனாலும் ஜெயிக்காது

என்ற கண்ணதாசனின் வரிகளுக்கு பொழிப்புரை எழுதிக்கொண்டிருக்கிறது முன்னாள் தமிழக முதலமைச்சரின் நிலை.





Follow kummachi on Twitter

Post Comment

16 comments:

Mahesh said...

haahaa super sir.

கும்மாச்சி said...

மகேஷ் வருகைக்கு நன்றி.

dearbalaji said...

Fact

அருணா செல்வம் said...

கும்மாச்சி அண்ணா....
அடுத்த மாதம் இன்னேரமெல்லாம் கார்டனுக்கு வந்து விட மாட்டார்கள்?

கும்மாச்சி said...

பாலாஜி வருகைக்கு நன்றி.

கும்மாச்சி said...

அருணா, சமீபத்திய நடப்புகளை வைத்துப் பார்த்தால் இன்னும் ஓரிரு நாட்களில் கார்டனுக்கு வர வாய்ப்புள்ளது.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

அருமை!

அடித்த கணவனை விட்டு விட்டு சிரித்த கொழுந்தன் மேல் கோபம் கொள்ளுவதுபோல் உள்ளது.// மிகரசித்துச் சிரித்தேன்.

விரைவில் தோட்டத்துக்கு வந்திருவாவா? அப்போ ஏனையா இந்த பஸ் எரிப்பு, கடையுடைப்பு.
அரசியல் விளையாடப்போதுதெனில் ஏன் இந்தக் கூத்து.

கும்மாச்சி said...

யோகன் வருகைக்கு நன்றி.

அரசியல் ஆட்டம் நிச்சயம் இருக்கும்.

J.Jeyaseelan said...


ஜாமீன் கிடைத்து வெளியே வந்துவிட்டாலே ஒரு ரவுண்ட் வருவார் என்றுதான் தெரிகிறது, பார்ப்போம் இப்போது மக்கள் முதல்வர் என ஜெயாடிவி புது அடைமொழியுடன் அழைத்து வருகிறது, கவனித்தீர்களா..

கும்மாச்சி said...

ஜாமீன் கிடைத்துவிட்டால் வழக்கிலிருந்து விடுபடுவார் என்று உத்திரவாதம் கிடையாது, உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் என்று போகவேண்டியிருக்கும். மேலும் இந்த வழக்கின் தீவிரம் அவ்வளவு சீக்கிரமாக விடுபடமுடியாது என்றே தோன்றுகிறது. பொறுத்திருந்து பார்ப்போம்.

KILLERGEE Devakottai said...

அரசியலை விட்டுட்டு கொஞ்சம் வெளியே வாங்க நண்பா,, இந்த சேரி மக்களை விடுங்க அறிவு வளர்ச்சி அவ்வளவுதான்னு விட்டுறலாம் இந்த சமூகத்தை திருத்தப்போறோம் கிழிக்கப்போறோம்னு சொல்லி சினிமாப்படங்கள் எடுத்து விடுறாங்களே இவங்களுக்கு அடிப்படை அறிவுகூட இருக்கிறது மாதிரி தெரியலைலே... குற்றவாளிக்கும் நீதித்துறைக்கும் உள்ள புிரட்சினையை கொண்டுபோயி எதெதுலயோ சேர்க்கிறாங்களே.... இவ்வளவுதானா ? அறிவு
http://www.killergee.blogspot.ae/2014/09/my-india-by-devakottaiyan.html

கும்மாச்சி said...

கில்லர்ஜி வருகைக்கு நன்றி.

உண்மை குற்றவாளிக்கும் நீதிர்த்துறைக்கும் இருக்கும் பிரச்சினையை அரசியலாக்கி குட்டையை குழப்புகிறார்கள். இந்த அழகில் "தர்ம தேவதை" பட்டம் வேறு.

kingraj said...

பொறுத்திருந்து பார்ப்போம்.

கும்மாச்சி said...

ராஜ் வருகைக்கு நன்றி.

Yarlpavanan said...

சிறந்த திறனாய்வுப் பார்வை
தொடருங்கள்

கும்மாச்சி said...

வருகைக்கு நன்றி.

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.