Pages

Thursday, 18 September 2014

கத்தியும், கத்தியவர்களும் கடுக்கா கொடுத்தவளும்

கத்தி படம் தொடங்கப்பட்டதிலிருந்தே பிரச்சினைகளும் தொடங்கியது. இந்த படத்தை தயாரிக்கும் லைகா நிறுவனம் ராஜபக்ஷேவின் பினாமி என்றும் இந்தப் படத்தை தடை செய்யவேண்டும் என்று ஏதோ ஒரு மாணவர் அமைப்பு மற்றும் சில இயக்கங்களும் தொண்டை கிழிய கத்திக்கொண்டிருந்தார்கள்.

இதனால் நடிகருக்கும் இயக்குனருக்கும் லடாய், வீட்டுக்கு வந்தவரை பேசாமல் அனுப்பினார் என்று உபரி கதைகளும் உதயமாகின. மேலும் வழக்கம்போல் இதுவும் ஒரு மார்க்கெட்டிங் தந்திரம் என்ற ஒரு சாரரும் சந்தேகித்தனர்.

குறுக்கே பூந்து கும்மியடித்த ஒரு புரட்சி இயக்குனரும் தன் பங்கிற்கு படக்குழுவிற்கு ஆதரவளித்து வாங்கிக்கட்டிக்கொண்டார். மேற்படி பிரச்சினைகளால் ஊடகங்களும் நன்றாக கல்லா காட்டிக்கொண்டிருந்தன.

இன்று இசை வெளியீடு என்று இருந்த பொழுது, நேற்றையதினம்  இந்த படத்தை எதிர்க்கும் இயக்கங்கள் எல்லாம் ஒன்றாக சேர்ந்து சென்னை மாநகர போலிஸ் கமிஷனரிடம் ஒரு மனுவைக் கொடுத்து இசை வெளியீட்டு  நிகழ்ச்சியை தடை செய்யவேண்டும் என்று கேட்டுக்கொண்டன.

ஈது இப்படி இருக்க அடப் போங்கையா எல்லோரும் வேலையைப் பாருங்கள் என்று இந்த படத்தை அம்மா தொலைக்காட்சி வாங்கிவிட்டதாகவும், மேலும் இசை வெளியீட்டு நிகழ்ச்சியை ஒளிபரப்பும் உரிமையையும் அம்மா தொலைக்காட்சியே வாங்கிவிட்டதாகவும் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.
பிச்சிபுடுவேன் பிச்சி...........

மொத்தத்தில் ஈழப்போராட்டம் என்பது இங்கு வியாபராமாகப் போய்விட்டது. இனி லைக்காவாவது, ராஜபக்ஷேயாவது................எல்லாம் அம்மாடா, காசுடா, போடா............




6 comments:

  1. இருந்தாலும் படிக்க வந்த என்னை,

    பிச்சிபுடுவேன் பிச்சி...........

    அப்படினு சொல்றது கொஞ்சம்கூட நல்லாயில்லை.

    ReplyDelete
  2. அம்மா நினப்பது மட்டுமே நடக்கிறது...
    கத்தி இனி கவலையில்லாமல் இறங்கும்...

    ReplyDelete
  3. அம்மா நினப்பது மட்டுமே நடக்கிறது...
    கத்தி இனி கவலையில்லாமல் இறங்கும்...

    ReplyDelete
  4. தலைவா வந்த பொழுது ஆளுங்கட்சியினர் தான்
    எதிர்ப்பு என்ற நிலை இப்போது அப்படியே
    தலைகீழா நடக்குது..
    கடைசி வரிகள் ரிப்பீட்டு....

    ReplyDelete
  5. வருகை தந்த அனைவருக்கும் நன்றி.

    ReplyDelete
  6. அஹஹாஹா ! செம அட்டாக் சகோ!!

    ReplyDelete

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.