Sunday, 28 September 2014

மகளிரணியும், ம(த)ர்ம தரிசனமும்

பதினெட்டு வருடங்களாக நமது நீதித்துறையை கேலிப்பொருளாக்கி எள்ளி நகையாடியவர்களுக்கு எமனாக வந்தது இந்த தீர்ப்பு.

1991-1996 வரை பதவியில் இருந்த பொழுது முதலமைச்சர் முறைகேடாக சொத்து சேர்த்ததாக சுப்ரமணிய சுவாமி அவர்களால் தொடரப்பட்ட வழக்கு எத்துணையோ விசாரணைகள், சாட்சியங்கள், பிறழ்சாட்சியங்கள் என்று களம் கண்டு நொண்டிக்கொண்டிருந்தது. இந்த வழக்கு எப்பொழுது முடியும் என்ற விரக்தி நிலைக்கு தள்ளப்பட்டு பின்னர் ஒரு வழியாக உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படி ஓரளவிற்கு வேகம் பிடித்தது.

இது கர்நாடகா சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்ட பின்னரும் வாய்தா  மேல் வாய்தா வாங்கி இழுத்தடிக்கப்பட்டது.


இந்த வழக்கை முதலிலிருந்தே தொடர்ந்து கண்காணித்து கொண்டு இருந்தவர்களுக்கு இந்த தீர்ப்பு ஒன்றும் ஆச்சர்யமில்லை. மல்லிக்கர்ஜுனையா நீதிபதியாக இருந்த பொழுது தீர்ப்பின் போக்கை எல்லோராலும் ஓரளவிற்கு யூகிக்கமுடிந்தது. பின்னர் அவரின் மாற்றம், ஜான் மைக்கேல்டி . குன்ஹா அவர்கள் பொறுப்பேற்ற பொழுது அவரின் கண்டிப்பு நடவடிக்கைகள் ஆளும் கட்சியின் வயிற்றில் புளியைக் கரைக்க ஆரம்பித்தது. இருந்தாலும் இது பொய்யாக புனையப்பட்ட வழக்கு என்று சொல்லிக்கொண்டிருந்தார்கள். முதலமைச்சர் வேண்டும் தெய்வங்களும், மத்தியில் ஆட்சிமாற்றமும் தீர்ப்பின் போக்கை மாற்றிவிடும் என்று மனப்பால் குடித்துக்கொண்டிருன்தனர்.

நேற்றைய தினம் முதலமைச்சரும் அவரது அல்லக்கைகளும் நீதிமன்ற வளாகத்திற்கு வந்த விதம் கர்நாடக காவல்துறையை மிரள வைத்திருக்க வேண்டும்.

கடைசியில் தீர்ப்பு வெளியிட வெகு நேரமாகியது. ஆனால் காலையில் பதினொரு மணிக்கே ரத்தத்தின் ரத்தங்கள் வெடி வைத்தும், இனிப்பு கொடுத்தும் "அம்மா நிரபராதி" என்று தீர்ப்பு எழுதியது வழக்கின் நகைச்சுவைக்காட்சி.


தீர்ப்பு வெளியான பின் ரத்தத்தின் ரத்தங்கள் மன்னிக்கவும் பொதுமக்கள் தங்களது கண்டனத்தை கடைகளை மூடியும், மூடாத கடைகளை சூறையாடியும், பேருந்தை எரித்தும் அமைதி வழியில் போராட்டம் நடத்தினர். இந்த அமைதிப் போராட்டத்தை நமது தமிழக காவல்துறையும் பார்த்துக்கொண்டிருந்தது. (இந்த அறவழி போராட்டத்தை தூண்டியதாக எதிர்கட்சி தலைவர் மீது வழக்கு போடப்பட்டிருப்பது உபரி செய்தி).
அமைதி வழியில் கண்டனம் தெரிவித்த காட்சி 

அம்மாவிடம் இத்துணை நாள் பம்மியிருந்த அணில்குஞ்சுகளும், பெருச்சாளிகளும் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

சமூக வலைதளங்களில் பலவிதமான கருத்துக்கள் பரிமாறப்பட்டன. இத்துணை இலவசங்கள் கொடுத்த அம்மாவிற்கு சிறையா என்று பரிதாபட்டனர் சில அப்ரசண்டிகள். இந்த இலவசம் ஏதோ அம்மா தான் அடித்த அறுபத்தியாறு கோடியிலிருந்து கொடுத்ததாக நினைத்துக்கொண்டிருப்பார்கள் போலும்.

மகளிரணி ரத்தத்தின் ரத்தங்கள் தீர்ப்பு வந்தவுடன் ஆடிய ருத்ராதாண்டவத்தை ஊரே கண்டு களித்தது. இந்த வழக்கை தொடர்ந்து வைத்த சூனா சாமியை நினைத்தால் பாவமாக இருக்கிறது. முன்பு ஒரு முறை அவர் கோர்டுக்கு வந்த பொழுது மகளிரணியின் தர்ம தரிசனம் ஏனோ எல்லோர் கண் முன்னும் வந்து போகிறது.

மொத்தத்தில் இந்த தீர்ப்பு மக்கள் சொத்தில் ஆட்டையைப்போடும் யாவருக்கும் ஒரு எச்சரிக்கை. அது ஐயாவோ அம்மாவோ யாராக இருந்தாலும் சரி. இனி அரசியல்வாதிகளின் நடத்தையை சிறிதேனும் மாற்றும் வாய்ப்பு இந்த சரித்திரப் புகழ்பெற்ற தீர்ப்பு ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது.






Follow kummachi on Twitter

Post Comment

20 comments:

Unknown said...

தமிழகத்தில் இது ஒரு ஆரம்பம்தான் ,உள்ளே போக வேண்டியவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள் !
த ம 1

கும்மாச்சி said...

பகவான்ஜி உண்மை, இது ஒரு நல்ல ஆரம்பம்.

KILLERGEE Devakottai said...

அருமையாக பகிந்துள்ளீர்கள் கும்மாச்சி எனக்கு ஆச்சர்யம் என்னவென்றால் தவறு செய்தது தெரிந்திருந்தும் கைது செய்யாதே என்று கூறும் கட்சிக்காரர்களை என்னவென்று சொல்வது வெளிநாடுகளில் பிறமாநிலத்தவர்களால் பஸ் எறிப்பு பொதுச்சொத்து சேதம் இதெல்லாம் யார் பணம் எனத்தெரியாமல் ? ? ? தமிழன் இரண்டு நாட்களாக எவ்வளவு அவமானப்படுகிறான் தெரியுமா ?

கும்மாச்சி said...

கில்லர்ஜி உங்கள் கருத்து உண்மை. நேற்றைய கானொளியில் மகளிரணி ரத்தத்தின் ரத்தங்கள் போட்ட ஆட்டங்கள் நமது தமிழ்நாட்டின் பெருமையை பறைசாற்றியது.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

அது ஐயாவோ அம்மாவோ யாராக இருந்தாலும் சரி. இனி அரசியல்வாதிகளின் நடத்தையை சிறிதேனும் மாற்றும் வாய்ப்பு இந்த சரித்திரப் புகழ்பெற்ற தீர்ப்பு ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது.//
ஒரு மாற்றம் வருமானால் இத் தீர்ப்பால் நன்மையே!

கும்மாச்சி said...

யோகன் வருகைக்கு நன்றி.

கும்மாச்சி said...

காசிராஜலிங்கம் வருகைக்கு நன்றி. தங்களது பதிவை நேரம் கிடைக்கும்பொழுது படித்து பகிர்கிறேன். நன்றி.

bandhu said...

பொதுவாக வெளிப்படும் கருத்து.. இதை விட கொள்ளை கொள்ளையா அடிச்சவங்கள விட்டு இவருக்கு தண்டன குடுத்திருக்காங்களே என்பது.. விளைவு.. அடிச்சா விஞ்சான பூர்வமா அடிக்கணும்.. இப்படியா.. அடிக்கத் தெரியாம மாட்டிக்கறது.. என்பதே..

கும்மாச்சி said...

நீங்கள் சொல்லும் கருத்து, ஆட்டோ சங்கரின் அம்மா அவரது சடலத்தை வாங்கும் பொழுது, அவனவன் 12 கொலை பண்ணிட்டு வெளியே இருக்கான், என் மவராசன் 9 கொலைதானே செஞ்சான் என்று புலம்பியது போல் உள்ளது.

bandhu said...

கும்மாச்சி.. தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறீர்கள். இதில் எனது தனிப்பட்ட கருத்து எதுவும் இல்லை. நான் பார்த்தவரை facebook மற்றும் பேசிய பலரின் தொனி குறித்து மட்டுமே. வருத்தம்.. விளைவு நீங்கள் சொல்வது போல் இல்லாமல் நான் சொன்னது போல இருக்கிறதே என்று..

கும்மாச்சி said...

பந்து தவறுக்கு வருந்துகிறேன். இருந்தாலும் சில பேரின் கருத்து நீங்கள் சொல்வதுபோல்தான் உள்ளது.

”தளிர் சுரேஷ்” said...

நீதித் துறை மீது ஒரு நம்பிக்கையை வரவழைத்திருக்கிறது தீர்ப்பு! அம்மாவின் அல்ல்க்கைகள் ஆடிய ஆட்டம் காமெடியாகத்தான் இருந்தது! நல்லதொரு பதிவு! நன்றி!

கும்மாச்சி said...

உங்கள் கருத்து உண்மை. வருகைக்கு நன்றி சுரேஷ்.

J.Jeyaseelan said...


நீதி வென்றது.. நான் மட்டுமல்ல யாருமே எதிர்பார்ர்க்காததது தான், பார்ப்போம் மேல்முறையீடெல்லாம் இருக்கிறது....

கும்மாச்சி said...

ஜெயசீலன் வருகைக்கு நன்றி.

வருண் said...

***நீங்கள் சொல்லும் கருத்து, ஆட்டோ சங்கரின் அம்மா அவரது சடலத்தை வாங்கும் பொழுது, அவனவன் 12 கொலை பண்ணிட்டு வெளியே இருக்கான், என் மவராசன் 9 கொலைதானே செஞ்சான் என்று புலம்பியது போல் உள்ளது.***

பந்து என்ன "மீன்" பண்ணினாரோ, ஆனால் இந்த பதில் நீங்க அவரைத் தவறாகப் புரிந்து கொடுத்தது நல்லதுதான். படித்த பலர், இதே போல் காரணங்களைக் காட்டி ஜெயலலிதாவை அப்பாவி போல் சித்தரிக்கிறாங்க!

சங்கர் ராமன் கொலைக்கு நீதி கிடைக்கவில்லை. எவன் பொண்டாட்டி தாலி அறுத்தால் எனக்கென்ன?னு இருந்தார்கள். பேச்சு மூச்சே இல்லை! தருமமும் நியாமும் சாவதை ரசித்தார்கள்.. இன்று குங்ஹா புண்ணியத்தில் கொஞ்சமாவது நீதி கிடைத்துள்ளது. அதையும் ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள். காலங்காலமாக் இந்தியர்கள் இப்படித்தான் "நியாயம்" பேசுகிறார்கள்.

கனிமொழி அரெஸ்ட் ஆனபோது இதே நியாதிபதிகள், அவளுக்கு நல்லா வேண்டும் என்றுதான் சொன்னதாக நியாபகம்.

அது ஏன் பார்ப்ப்னர்கள் மட்டும் எப்போவே இண்ணொசண்ட்னு வாதாடுறாங்க..

சோ ராமசாமி பார்ப்பான், ஓசைப் பார்ப்பான் எல்லாம் பொத்திக்கிட்டு இருக்காணுக ஏதோ எழவு விழுந்ததுபோல!

நீங்களாவது, ஜெயா அனுதாபியாக இருந்தும் நீதியைப்பாராட்டுறீங்க. அதையும் ஏற்றுக்க மறுக்கிறார்கள்!!!

உங்களிடம் இருந்து இப்பதிவையோ, பின்னூட்டத்தையோ நான் எதிர் பார்க்கலை.நன்றி!

Anonymous said...

dmk or admk both are same. in dmk money is widely distributed among the family members.
i donot know how many family members are there in dmk leade'rs family. let the 2g case
progress and let us see what happens there

'பரிவை' சே.குமார் said...

இந்தத் தீர்ப்பால் மாற்றம் வரும் என்றால் நிச்சயம் இது போன்ற தீர்ப்புக்கள் தொடரட்டும்....

கும்மாச்சி said...

வருண் உங்களது பின்னூட்டத்திற்கு நன்றி. ஒன்றை இங்கு உங்களுக்கு நான் தெளிவு படுத்த விரும்புகிறேன்.

\\நீங்களாவது, ஜெயா அனுதாபியாக இருந்தும் நீதியைப்பாராட்டுறீங்க. அதையும் ஏற்றுக்க மறுக்கிறார்கள்!!!?//

நான் ஜெயா அனுதாபி என்று எதை வைத்து சொல்கிறீர்கள் என்று தெரியவில்லை. இந்த முப்பது வருடங்களாக தமிழ்நாட்டை ஆண்ட எந்த முதலமைச்சரின் (அ) கட்சியின் அனுதாபியோ அல்ல.

மேலும் ஊழல் நமது நாட்டின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக இருக்கிறது என்பதை வலுவாக நம்புகிறவன் நான். ஊழல் அல்லது தவறு யார் செய்தாலும் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் மாறாத கருத்து உள்ளவன்.

இது போன்று எல்லா ஊழல் வழக்குகளும் விசாரிக்கப்பட்டு தண்டனை வழங்கப்படவேண்டும் என்பதில் மாற்று கருத்து இல்லை.

கும்மாச்சி said...

குமார் வருகைக்கு நன்றி.

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.