Pages

Monday, 13 October 2014

ஊழல் வளர்ப்போம்

லஞ்சம் கொடுத்து நெஞ்சம் நிமிர்த்தி
ஊழல் வளர்ப்போம்
கொஞ்சம் பெற்று நிறைய கொடுத்து
ஊழல் வளர்ப்போம்
நீதியைக் கொன்று நேர்மையை மறந்து
ஊழல் வளர்ப்போம்
ஜாதியைக் காட்டி பீதியைக் கூட்டி
ஊழல் வளர்ப்போம்
கோடிகள் சேர்த்து கொழுத்தவர்களை புகழ்ந்து
ஊழல் வளர்ப்போம்
தண்டனை கொடுத்த நீதிபதியை பழித்து
ஊழல் வளர்ப்போம்
உண்ணாவிரதம் இருந்து பால்காவடி எடுத்து
ஊழல் வளர்ப்போம்
ஆர்பாட்டங்கள்  செய்து அனைத்தையும் எரித்து
ஊழல் வளர்ப்போம்
கர்நாடக சிறையினால் காவிரியைக் காட்டி
ஊழல் வளர்ப்போம்
கேரளம் என்றால் முல்லை பெரியார் என்று
ஊழல் வளர்ப்போம்
ஜாமீன் இல்லையென்றால் பிரதமரைக் காட்டி
ஊழல் வளர்ப்போம்
2ஜி என்றால் "சிங்"கைக்காட்டி
ஊழல் வளர்ப்போம்
டாஸ்மாக்கில் குடித்து தரையில் படுத்து
ஊழல் வளர்ப்போம்
தண்ணியடித்து தத்துவங்கள் பேசி
ஊழல் வளர்ப்போம்
இலவசங்கள் பெற்று இன்புற்றிருக்க
ஊழல் வளர்ப்போம்
கட்சிகள் மாற்றி காலம் கடத்த
ஊழல் வளர்ப்போம்
காசு வாங்கி ஒட்டு போட்டு
ஊழல் வளர்ப்போம்

6 comments:

  1. வணக்கம்

    சிறப்பான கற்பனை ... அருமையாக உள்ளது வாழ்த்துக்கள்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  2. ரூபன் வருகைக்கு நன்றி.

    ReplyDelete
  3. ரொம்ப நல்லாவே தண்ணி ஊத்தாமலே வளர்கிறது ஊழல்! ஹாஹஹா!

    ReplyDelete
  4. சுரேஷ் வருகைக்கு நன்றி.

    ReplyDelete
  5. நாம் வளர்க்கவேண்டாம் தானாகவே அது வளரும்..... நல்ல பகிர்வு..

    ReplyDelete
  6. ஜெயசீலன் வருகைக்கு நன்றி.

    ReplyDelete

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.