நேற்றைய தினம் மக்கள் முதல்வருக்கு (அப்போ ஓ.பி.எஸ் என்ன ஆடு மாடுங்களுக்கு முதல்வரா? என்று சின்ன புள்ளதனமா கேள்வியெல்லாம் கேக்கப்டாது ஆமா) உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.
அதை அடுத்து "ரர"க்கள் லட்டு கொடுத்தும், வெடிகள் வைத்தும் தங்கள் மகிழ்ச்சியை தெரிவித்தனர். (தெய்வத்திற்கு மனிதன் ஜாமீன் வழங்குவதா?).
அடுத்து ட்விட்டரில் அம்மா அல்லக்கைகள் ஓவராக சலம்ப ஆரம்பித்து விட்டனர்.
நீதியை வென்ற தேவதையாம் (அடேய் அப்ரசண்டிகளா ஆத்தா பெயிலில்தான் வராங்க, நிரபராதியாக அல்ல, இன்னும் குற்றவாளிதான், ஓவர் சலம்பல் உடம்புக்கு ஆகாதுடி).
இன்னும் சிலர் பழைய மொக்கையே மம்மி ரிடர்ன்ஸ் என்று படம் போட்டு சந்தையை நாற அடித்தனர். இந்த படத்தை பாதுகாப்பாக வைத்துக்கொள்வது நல்லது. அடிக்கடி உபயோகப்படலாம்.
பிறகு அணில்குஞ்சுகளை உசுப்பேற்ற அம்மா வெளியே கத்தி உள்ளே என்று நக்கலடிக்க ஆரம்பித்தனர். மேலும் "பொன்னாரம் பூவாரம் பைப்போரம் பண்டாராம்" என்று பழைய பாடலை நினைவு கூர்ந்து கலாய்க்க ஆரம்பித்தனர்.
பத்திரிகைகளோ தங்கள் பங்கிற்கு உச்ச நீதிமன்றத்தில் நடந்த வாதங்களை வைத்து அவரவர்க்கு கதை கட்ட ஆரம்பித்தனர்.
தினத்தந்தி மக்கள் முதல்வர் பிணையில் வெளியே வருவதால் எதை செய்யலாம் எதை செய்யக்கூடாது என்று லிஸ்ட் போட்டு கொடுத்தது.
அதில் மக்கள் முதல்வர் கட்சி தலைவி என்ற முறையில் தேர்தல் பிரச்சாரங்களில் ஈடு படலாம் என்று போட்டு சொம்படி வேலை துவங்கியது. உடல்நிலை காரணம் காட்டி பிணையில் வந்த ஓம் பிரகாஷ் சௌதாலா கதை என்ன ஆனது என்று தெரியாமல் அறிவுரை வழங்கி பழைய வேலை தொடங்கியது.
எது எப்படியோ தீர்ப்பு ரத்து மேல்முறையீடு வழக்கு கர்நாடக உயர்நீதி மன்றத்தில் நிலுவையில் உள்ளது. அந்த வழக்கை இழுத்தடிக்கக்கூடாது. அதற்கான ஆவணங்களை டிசம்பர் பதினெட்டாம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும், இல்லையென்றால் ஜாமீன் ரத்து செய்யப்படும்.
மேலும் வாய்தா வாங்காமல், வழக்கை இழுத்தடிக்காமல் வழக்கை விரைவில் முடிக்க ஒத்துழைக்க வேண்டும் என்று மக்கள் முதல்வருக்கு உச்சநீதிமன்றம் கூறியிருக்கிறது.
நீதிமன்ற தீர்ப்பையோ இல்லை சுப்ரமணிய சாமியை விமர்சித்தோ ஆர்பாட்டங்கள் போஸ்டர்கள் ஓட்டுவதை மக்கள் முதல்வர் கட்சி தலைவி என்ற முறையில் தடுக்க வேண்டும். (உடனே கட்சி தலைவி அறிக்கை வெளியிட்டது செய்தி)
அப்படி என்றால் 2015 மார்ச் பதினெட்டு தேதிக்குள் வழக்கை முடிக்க வேண்டும். கர்நாடக உயர்நீதி மன்றம் "சிறப்பு நீதிமன்ற நீதிபதி" கூறிய தீர்ப்பு சரியென்றால் மறுபடியும் பழைய கதை தொடரும். "தாய் எனும் கோவிலை காக்க மறந்திட்ட பாவியடி கிளியே" பாட்டு கொடி வைத்த கார்களில் ஒலிக்கும்.
பழைய படி தாடி, மொட்டைகள், தலையெடுக்கலாம்.
பிணத்திற்கு ஐந்து லட்சம் வியாவாரம் கொடிகட்டிப் பறக்கும். இன்னும் பால் காவடி, பன்னீர் காவடி, புஷ்பக்காவடிகள் அணிவகுக்கலாம்.
இந்த நேரத்தில் அலைக்கற்றை வழக்கும் சூடு பிடித்துக்கொண்டிருக்கிறது. இன்னும் அங்கே என்ன என்ன கூத்துகள் நடக்கப் போகிறதோ?. அந்த கூடாரத்தில் ஒரு மயான அமைதி நிலவுகிறது.
எனவே அடுத்த வருடம் பரப்பிற்கு பஞ்சம் இருக்காது.
அதை அடுத்து "ரர"க்கள் லட்டு கொடுத்தும், வெடிகள் வைத்தும் தங்கள் மகிழ்ச்சியை தெரிவித்தனர். (தெய்வத்திற்கு மனிதன் ஜாமீன் வழங்குவதா?).
அடுத்து ட்விட்டரில் அம்மா அல்லக்கைகள் ஓவராக சலம்ப ஆரம்பித்து விட்டனர்.
நீதியை வென்ற தேவதையாம் (அடேய் அப்ரசண்டிகளா ஆத்தா பெயிலில்தான் வராங்க, நிரபராதியாக அல்ல, இன்னும் குற்றவாளிதான், ஓவர் சலம்பல் உடம்புக்கு ஆகாதுடி).
இன்னும் சிலர் பழைய மொக்கையே மம்மி ரிடர்ன்ஸ் என்று படம் போட்டு சந்தையை நாற அடித்தனர். இந்த படத்தை பாதுகாப்பாக வைத்துக்கொள்வது நல்லது. அடிக்கடி உபயோகப்படலாம்.
பிறகு அணில்குஞ்சுகளை உசுப்பேற்ற அம்மா வெளியே கத்தி உள்ளே என்று நக்கலடிக்க ஆரம்பித்தனர். மேலும் "பொன்னாரம் பூவாரம் பைப்போரம் பண்டாராம்" என்று பழைய பாடலை நினைவு கூர்ந்து கலாய்க்க ஆரம்பித்தனர்.
பத்திரிகைகளோ தங்கள் பங்கிற்கு உச்ச நீதிமன்றத்தில் நடந்த வாதங்களை வைத்து அவரவர்க்கு கதை கட்ட ஆரம்பித்தனர்.
தினத்தந்தி மக்கள் முதல்வர் பிணையில் வெளியே வருவதால் எதை செய்யலாம் எதை செய்யக்கூடாது என்று லிஸ்ட் போட்டு கொடுத்தது.
அதில் மக்கள் முதல்வர் கட்சி தலைவி என்ற முறையில் தேர்தல் பிரச்சாரங்களில் ஈடு படலாம் என்று போட்டு சொம்படி வேலை துவங்கியது. உடல்நிலை காரணம் காட்டி பிணையில் வந்த ஓம் பிரகாஷ் சௌதாலா கதை என்ன ஆனது என்று தெரியாமல் அறிவுரை வழங்கி பழைய வேலை தொடங்கியது.
எது எப்படியோ தீர்ப்பு ரத்து மேல்முறையீடு வழக்கு கர்நாடக உயர்நீதி மன்றத்தில் நிலுவையில் உள்ளது. அந்த வழக்கை இழுத்தடிக்கக்கூடாது. அதற்கான ஆவணங்களை டிசம்பர் பதினெட்டாம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும், இல்லையென்றால் ஜாமீன் ரத்து செய்யப்படும்.
மேலும் வாய்தா வாங்காமல், வழக்கை இழுத்தடிக்காமல் வழக்கை விரைவில் முடிக்க ஒத்துழைக்க வேண்டும் என்று மக்கள் முதல்வருக்கு உச்சநீதிமன்றம் கூறியிருக்கிறது.
நீதிமன்ற தீர்ப்பையோ இல்லை சுப்ரமணிய சாமியை விமர்சித்தோ ஆர்பாட்டங்கள் போஸ்டர்கள் ஓட்டுவதை மக்கள் முதல்வர் கட்சி தலைவி என்ற முறையில் தடுக்க வேண்டும். (உடனே கட்சி தலைவி அறிக்கை வெளியிட்டது செய்தி)
கொடுத்த காசுக்கு கொஞ்சம் அதிகமாகவே கூவிட்டோமோ? |
பழைய படி தாடி, மொட்டைகள், தலையெடுக்கலாம்.
பிணத்திற்கு ஐந்து லட்சம் வியாவாரம் கொடிகட்டிப் பறக்கும். இன்னும் பால் காவடி, பன்னீர் காவடி, புஷ்பக்காவடிகள் அணிவகுக்கலாம்.
இந்த நேரத்தில் அலைக்கற்றை வழக்கும் சூடு பிடித்துக்கொண்டிருக்கிறது. இன்னும் அங்கே என்ன என்ன கூத்துகள் நடக்கப் போகிறதோ?. அந்த கூடாரத்தில் ஒரு மயான அமைதி நிலவுகிறது.
எனவே அடுத்த வருடம் பரப்பிற்கு பஞ்சம் இருக்காது.
11 comments:
அல்லக்கைகள் அலம்பல்கள் கொஞ்சம் ஓவர்தான்!
சுரேஷ் வருகைக்கு நன்றி.
ஹ்ஹஹ இந்த பின்பாட்டு, வில்லுப்பாட்டு பாடும் கூட்டம் என்று ஓய்கின்றதோ அன்றுதான் அரசியலுக்கு விடிவுகாலம்! எல்லாம் நம்ம தலையெழுத்து! ஆனா என்ன ....உங்களைப் போன்ற நல்ல நையாண்டி செய்யும் எழுத்துக்காரர்களுக்கு நல்ல தீனி கிடைக்கும்! ரைட்டுதானே?!!! ஹாஹஹஹஹ்ஹ் நல்ல பதிவு!
துளசிதரன் வருகைக்கு நன்றி.
March 2016 is a Very large period to complete the case. It should be 201, if I am right.
உண்மை மார்ச் 2015 தான்.
என்ன தான் நடக்கும் நடக்கட்டுமே.
இந்த அல்லக்கைகள் அலம்பல்தான் ரொம்ப ஓவரா இருக்கு...
முடியல.
ராஜ் வருகைக்கு நன்றி.
குமார் வருகைக்கு நன்றி.
உண்மையாலுமே அடுத்த வருடம் பரபரப்பிற்கு பஞ்சமிருக்காது போல் தான் இருக்கிறது.
அப்படியே cctv camera பொருத்தியது போல நிகழ்வுகளை பதிவிட்டிருக்கிறீர்கள் ரசித்தேன்.
God bless you.
Post a Comment
படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.